இருநூற்றி இருபது இலட்சம் மக்கள் பாரிய துன்பங்களை அனுபவிக்கும் வேளையில் அரசாங்கம் அமைச்சுப் பதவிகளை பகிர்ந்து கொள்வதற்குப் முன்டி அடித்துக்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
எதிர்காலத்தில் மின்வெட்டு ஏற்படும் போது இந்நாட்டு மக்கள் நடுங்கத் தொடங்குவார்கள் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,மக்கள் ஏற்கனவே வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
நாட்டில் இடம்பெற்று வரும் காரணங்களை நோக்கும் போது சந்தர்ப்பவாத அரசியல் மிகவும் தெளிவாகத் தெரிகின்றது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இத்தகைய சூதுகளில் ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியோ ஒருபோதும் தொடர்பு கொள்ளாது எனவும் தெரிவித்தார்.
விரட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மீண்டும் நாடு திரும்பியுள்ளார். அது அவ்வாறு நடக்கும் போது, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது அரசு தனது வன்முறையை பிரயோகித்து அவர்கள் மீது அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.