கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் உணவுப் பணவீக்கம் (உணவு விலை அதிகரிப்பு) 80% ஆக உயர்ந்துள்ளதாகக் காட்டுகிறது.மே 2022 இல் 58% ஆக இருந்த நாட்டின் உணவுப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 75.8% ஆக உயர்ந்துள்ளது என்றும் குறியீடு கூறுகிறது.
இதேவேளை, இலங்கையில் சுமார் 57 இலட்சம் மக்கள் போதிய உணவின்றி உள்ளதாக உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இலங்கை மக்கள் கடந்த 70 வருடங்களில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியினால் உருவான இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.