பதுளை ஹிங்குருகம கெலன்பில் தோட்டத்தில் இரு வயோதிப பெண்கள் கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று (09) இரவு இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர் குடியிருப்பு வீடொன்றில் வசித்து வந்த 83 மற்றும் 55 வயதுடைய தாயும் மகளுமே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 62 வயதுடைய மற்றுமொரு பெண் படுகாயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முகத்தை மூடிய நிலையில் வந்த சிலரே இவர்களை தாக்கியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ள நிலையில் இந்த சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துவருகின்றனர்.