கேள்வி : புலிகள் இயக்கத்தில் பொறுப்புவாய்ந்த ஈடு இணையற்ற தளபதியாக இருந்த நீங்கள், இன்று இந்த நாட்டின் பிரதான அமைச்சராக இருக்கின்றீர்கள். இந்த மாற்றத்திற்கான பிரதான காரணம் என்ன?
பதில் : ராஜிவ்காந்தி அவர்களின் படுகொலை தொடர்பில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன், அக்கொலை தொடர்பில் புலிகளுக்கு பாரிய பின்டைவை ஏற்படுத்தியிருந்தது. அக்கால கட்டத்தில் நான் பிரபாகரன் அவர்களிடம் இப்படிப்பட்ட செயற்பாடுகளினால் நாம் சிறந்த பயன் எதனையும் அடையப்போவதில்லை என பலமுறை சுட்டிக்காட்டியும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. ஜெனிவா பேச்சுவார்த்தைகளில் அரசுடன் இணைந்து செயற்படக்கூடிய விடயங்களையும், விட்டுக்கொடுப்புக்களையும் எடுத்தியம்பி என்னால் வழங்கப்பட்ட ஆலோசனைகளையும் பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லை, அவருடைய ஒரே நோக்கு பயங்கரவாத தாக்குதல்களாகவே இருந்தது, அப்படிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளினால் தமிழ் மக்களின் உண்மையான இனப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமலே போய்விட்டது, பிரபாகரனுக்கு தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொடுப்பதில் ஈடுபாடற்ற தன்மையையே என்னால் காணக்கூடியதாக இருந்தது. மற்றது ஜெனீவா பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்பட்டிருந்தாலும் அதை பிரபாகரன் ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் இருந்திருக்கவில்லை. இந்த நிலைமை காரணமாக எனக்கு எமது தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பில் பாரிய அச்சம் ஏற்படவே நான் அந்த அமைப்பிலிருந்து விலகினேன். தமிழ் மக்களின் விடிவிற்காய் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கு குழம்பிப்போயிருந்த பிரபாகரனின் பாசிச போக்குத்தான் என்னை இந்த ஜனநாயக நீரோட்டத்தில் குதிக்க வைத்தது.
கேள்வி : நீங்கள் த.ம.வி.புலிகளிலிருந்து விலகி சிறி லங்கா சுகந்திரக் கட்சியில் இணைந்து உறுப்பினராவதற்கான காரணம் என்ன?
பதில் : த.ம.வி.புலிகள் அமைப்பு ஒரு எதிர்காலம் இல்லாத அமைப்பு. தற்பொழுது அக்கட்சியில் மூன்றுபேரே எஞ்சியுள்ளனர். பிள்ளையான், பத்மினி, பிரதீப் ஆகியோரே உள்ளனர். எதிர்காலம் இல்லாத அக்கட்சியிலிருந்து கொண்டு மக்களுக்கு சேவையாற்ற முடியாது. அதனால்தான் என்னுடன் சேர்த்து மற்ற உறுப்பினர்கள் பலரும் சிறி லங்கா சுகந்திரக் கட்சியில் இணைந்து கொண்டோம்.
கேள்வி : தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் பெயரில் வரும் புலிகள் என்ற பதத்தினை நீக்குவதற்கு நீங்கள் பகீரத பிரயாத்தனம் செய்திருந்தீர்களல்லவா?
பதில் : ஆம், அது முற்றிலும் உண்மை. ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்ட கட்சிக்கு புலிகள் என்ற பதம் பொருத்தமான தொன்றல்ல, இந்நாட்டின் சகல மக்களுக்கும் புலி என்ற பெயரில் அதிகபட்ஷ விருப்பமின்மையையே காணக்கூடியதாக இருக்கிறது. அதே போல் இந்நாட்டு மக்களுக்கு புலிகளால் பாரிய பொருளாதார இழப்புக்களும், அதே போல் உயிரிழப்புக்களும் ஏற்பட்டு, அவர்களுடைய வீடு வாசல், அசையும் அசையா சொத்துக்கள் அழிந்திருப்பது மட்டுமில்லாது, பல உறவினர்கள் உயிரிழந்துள்ளனர், அதிலும் பலர் அங்கவீனமடைந்துமுள்ளனர், நாட்டின் பொருளாதார அபிவிருத்தி அழிந்து போயிருக்கிறது, இப்படிப்பட்ட பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திய புலிகள் என்ற பெயரை த.ம.வி.புலிகள் அமைப்பின் பெயரிலிருந்த நீக்குவதற்கு முயற்சித்தேன், அத்தோடு புலி என்ற பெயரிலிருக்கும் அமைப்பினால் (தற்கால கட்டத்தில்) தமிழ் மக்களை அரவணைத்துக் கொண்டு, அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து கொடுக்க முடியாது என்ற யதார்த்த நிலமையை உணர்ந்த பின்புதான் நான் அந்த முடிவினை எடுத்திருந்தேன்.
கேள்வி : தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் பெயரில் வரும் புலிகள் என்ற பதத்தை அகற்றுவதற்கு பிள்ளையான் விரும்பவில்லை. நீங்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறுவதற்கு இதுதான் மூல காரணமா?
பதில் : எதிர்காலமே இருண்டு போயிருக்கும் அக்கட்சியிலிருந்து கொண்டு முன்னேற்றப் பாதையில் எமது மக்களுடன் பயணிக்க முடியாது. அரசியல் என்பது மக்களுக்காகவே அர்ப்பணிப்புடன், முன்நோக்கிச் செல்லும் பயணம். த.ம.வி.புலிகள் கட்சிக்கு எதிர்காலமே இல்லாத காரணத்தினால் நான் அக்கட்சியிலிருந்து வெளியேறினேன்.
கேள்வி : நீங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் கோபமாக இருக்கிறீர்களா?
பதில் : இல்லை, அப்படியொரு கோபமுமில்லை, எங்கள் இருவரினதும் எதிர்பார்ப்பு மக்களுக்கு சேவை செய்வதும், அவர்களுடைய ஜீவனோபாய தேவைகளை பூர்த்தி செய்வதுமேயாகும். மக்களின் எதிர்காலம் பற்றிய இருவேறு கருத்துக்கள் இருக்கிறது. த.ம.வி.புலிகள் என்ற பெயரில் உள்ள புலிகள் என்ற பதத்தினை நீக்க பிள்ளையான் விரும்பவில்லை, ஆனால் நான் விரும்பினேன். கட்சிகளுக்குள் தலைமைத்துவ பிரச்சனை என்பது பொதுவானது. இன்றுகூட ஐக்கிய தேசிய கட்சிக்குள் தலைமைத்துவ பிரச்சனைகள் பூதாகரமாகிக் கொண்டிருக்கிறது. ஆகவே அவைகள் சாதாரணமானவைகள். ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், மக்களின் சுபீட்ஷமான எதிர்காலத்தை நோக்கி நகரவேண்டுமே தவிர, தனிப்பட்ட வைராக்கியங்களுடன் கூடிய அரசியலுக்கு இடமில்லை.. யார் தன்னலமற்ற மக்கள் சேவகன் என்பதை தீர்மானிப்பவர்கள் மக்கள் என்கின்ற எஜமான்கள். பெயரிலுள்ள புலிகள் என்ற பதத்தினை நீக்குவதற்கு பிள்ளையானக்கு விருப்பமில்லை, அவ்வளவுதான் இதில் தனிப்பட்ட கோபதாபங்களுக்கு வாய்ப்பில்லை.
கேள்வி : சிறிலங்கா சுகந்திரக் கட்சியில் உங்களுடன் சேர்த்து யார் யாரெல்லாம் இணைந்து கொண்டார்கள் என்று கூற முடியுமா?
பதில் : ஆம், என்னுடன் த.ம.வி.புலிகளுடன் தொடர்புபட்ட சுமார் 2000 இற்கும் அதிகமான உறுப்பினர்கள் சிறிலங்கா சுகந்திரக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்கள்.
கேள்வி : நீங்கள் என்ன எதிர்பார்ப்புடன், நோக்கத்துடன் சிறி லங்கா சுகந்திரக்கட்சியில் இணைந்து கொண்டீர்கள்?
பதில் : எனது அரசியல் பிரவேசத்துடன் கிழக்கில் பாரிய மாற்றத்தினை எதிர்பார்த்தேன், அது எனது நீண்டநாள் கனவாக இருந்தது. அதனால்தான் த.ம.வி.புலிகளிடமிருந்து வெளியேறினேன். நாட்டின் அனேக மக்களின் ஆசிர்வாதத்தின் மத்தியில், கிழக்கில் மாற்றத்தினை ஏற்படுத்தி, அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகள் முதற்கொண்டு பாகுபாடற்ற சேவையினை எதிர்காலத்தில் வழங்க நான் தயாராக இருக்கிறேன். இந்த ஒரு நிலமை ஏற்பட்டு எமது மக்கள் கௌரவத்துடனும், போஷாக்குடனும், பொருளாதார கல்வி வளர்ச்சியுடனும் ஏனைய சமூகங்களுக்குக் கிடைக்கும் வளங்கள் அனைத்தும் அவர்களுக்குக்கிடைத்து, ஏனைய சமூகங்கள் போல் அசுர வேகத்தில் எல்லாத்துறைகளிலும் முன்னேற வேண்டுமென்பதற்காகவுமே சிறிலங்கா சுகந்திரக் கட்சியில் இணைந்து கொண்டேன்.
கேள்வி : த.ம.வி.புலிகள் ஆயுதங்களை வைத்திருந்தார்கள் தற்பொழுது அவற்றுக்கு என்ன நடந்தது?
பதில் : குறிப்பாக எங்களிடம் ஆயுதங்கள் இல்லை. ஆயுதங்களைப் பாவிப்பது பயங்கரவாத அமைப்பாகும். நாங்கள் பயங்கரவாத அமைப்பல்ல. ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்து நாங்கள் அரசியலில் ஈடுபட்டிருக்கிறோம். எங்களிடமிருந்த ஆயுதங்களை கையளித்து விட்டோம். என்னுடன் இருப்பவர்கள் ஜனநாயக வழிக்குத்திரும்பி விட்டார்கள், தற்பொழுது எம்மிடம் ஆயுதங்களில்லை.
கேள்வி : அப்படியானால் உங்களுடைய பாதுகாப்பு?
பதில் : ஏனைய அமைச்சர்களைப் போன்று எனக்கும் பாதுகாப்பு அமைச்சினால் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
கேள்வி : நீங்கள் புலிப் பயங்கரவாதிகளின் பிரதான இலக்காக இருக்கிறீர்கள். தற்பொழுது உங்களக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு போதுமானதாக இரக்கிறதா?
பதில் : இலேசான புன்னகையுடன் பதில் : நான் அப்பயங்கரவாத அமைப்பிலிருந்து எப்பொழுது வெளியேறினேனோ, அன்றிலிருந்து நான் அவ்வமைப்பின் முதலாவது இலக்காகத்தான் இருந்து வருகிறேன்.
கேள்வி : தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைச்சுப் பொறுப்பானது, தங்களுக்கு திருப்தியானதாக இருக்கின்றதா?
பதில் : ஆம், திருப்தியானதாக இருக்கின்றது.
கேள்வி : வழங்கப்பட்டிருக்கும் அமைச்சுப் பொறுப்பைக் கொண்டு, நாட்டிற்கு சிறந்ததொரு சேவையை செய்யமுடியுமென்று கருதுகிறீர்களா?
பதில் : ஏன் முடியாது? எனக்கு கிடைத்திருக்கும் அமைச்சு நாட்டின் முக்கியமானதொரு பொறுப்புவாய்ந்த அமைச்சாகும். இன்று நாட்டில் தலைவிரித்தாடும் இனப்பிரச்சனைக்கு மூலகாரணமாக அமைந்தது இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வின்மையும், ஒற்றுமையின்மையும்தான். மீண்டும் இந்நாட்டில் நிரந்தரமான சமாதானம் மலர வேண்டுமாகில் அனைத்து இனங்களும் விட்டுக் கொடப்புக்களுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும், இது பேச்சளவில் இல்லாமல் அதற்கான களம் அமைத்துக் கொடக்கப்பட வேண்டும். அந்த நிலமையை ஏற்படுத்தவதற்கு எனது இந்த அமைச்சினூடாக பல வேலைத்திட்டங்களை செய்யலாம் என்று கருதுகிறேன். நான் அமைச்சர் டீயூ குணசேகர அவர்களுடன் இணைந்து சேவை செய்ய கிடைத்த வாய்ப்பையிட்டு பெருமகிழ்ச்சியடைகிறேன். எனக்கு அவரிடமிருந்து சிறந்த பங்களிப்பு கிடைத்திருக்கிறது. அரசியலில் முதர்ச்சியுள்ள, அனுபவம் மிக்க சிறந்த அரசியல்வாதி கௌரவ டீயூ குணசேகர அவர்கள், அவர் எனக்கு எல்லா வழிகளிலும் பக்க பலமாக, உதவியாக இருக்கின்றார்.
கேள்வி : நீங்கள் இந்த நிலையை அடைவதற்காகவே, ஜனாதிபதி அவர்களின் குடும்பத்தினருடன் நெருங்கிய உறவினை ஏற்படுத்தினீர்கள் என்று யாராவது சொன்னால்………
பதில் : பலரும் பத்தையும் கதைப்பார்கள். காலத்திற்கு ஏற்றமாதிரி மனிதர்கள் மாற்றமடைய வேண்டும், பழைய பத்தாம் பசளி கொள்கைகளுடன் வாழ முற்படக்கூடாது. ஜனநாயகத்திற்கு வந்துவிட்டால் அந்தப் பாதையிலேயே கவனமாக பயணிக்க வேண்டும். நான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் போதே அதை நிரூபித்துக்காட்டியுள்ளேன். மேன்மை தங்கிய ஜனாதிபதின் சகோதரர்கள் என்னுடைய நல்ல நண்பர்கள். அவர்களிடமிருந்து எனக்கு விசேடமாக எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை. நான் அமைச்சுப் பதவிக்காக காத்திருந்தவனுமல்ல, நான் அதைக்கேட்டதுமில்லை, எனக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற முடிவினை எடுத்தவர் ஜனாதிபதி அவர்கள். அவருடைய வேண்டுகோளிற்கு இணங்கினேன். இதில் எந்தவிதமான குறைபாடுகளும் எனக்குத் தெரியவில்லை.
கேள்வி : யுத்தம் தொடர்பான கேள்வி ஒன்று, பிரபாகரனின் இன்றைய நிலை என்ன?
பதில் : இக்கேள்வி தொடர்பான நல்லதொரு விரிவான பதிலினை இன்னும் சில நாட்களுக்குள் உங்களுக்குக் கிடைக்கலாம். பிரபாகரன் தற்பொழுது அவருடைய படைகளில் மிஞ்சிய நன்கு பயிற்றப்பட்டவர்களை தனது பாதுகாப்பிற்காக வைத்திருக்கிறார். சுட்டுக் கொல்லப்படுவார் அல்லது தற்கொலை செய்து கொள்வார். இதற்காகத்தான் அப்பாவி மக்களை தனது கவசமாக வைத்திருக்கிறார்.
santhanam
ஜனநாயகத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி அறிக்கைகள் கருணா – பிள்ளையான் அதிகாரப் போட்டியோ, ஆட்களைப் போடும் போட்டியாகியது. எப்படி போட்டுத்தள்ளுவது என்று மண்டை குடைந்து, கருணா கண்டுபிடித்த விவகாரம் தான் ஆயுதம் களைவது. இதை கண்டு சீறி எழுந்த பிள்ளையான், நீங்கள் எங்கள் தலைவனல்ல, நாங்கள் ஆயுதத்தைக் களையமட்டோம் என்றார். இப்படி பிள்ளையான் கூற, கருணா ஆயுதத்தை களைய வைத்த கூத்துத்தான் இன்று ஆயுதக் களைவாக அரங்கேறிய நாடகம் கருணாவுக்கு தெரிந்த ஓரே அரசியல்……… தன் அதிகாரத்தை தக்க வைக்கும் தமிழ்மக்களையும் புலியையும் கொல்ல அரசு வழங்கிய ஆயுதத்தை, தன் ………….. அரசு மீள பெற்ற நாடகம் தான் ஆயுதக் களைவு. அடித்து பறித்து வாங்குவதா அல்லது கவுரவமாக கொடுப்பதா என்ற நாடகத்தின் கூத்தைத்தான், பிள்ளையான் அரங்கேற்றினார்
Thaksan
புலிகளின் 2வது நிலை தலைவராக கருதப்பட்ட கருணாவின் நிலைப்பாடு தற்போது எப்படியிருக்கிறது என்பதை அவரே தன் வாயால் திருமலர்ந்துள்ளார். பிரபாகரன் ஒருவேளை கொல்லப்படுவாராகவிருந்தால் புலிகளின் ஏனைய தலைவர்கள் எப்படியான முடிவினை எடுப்பார்களென்பதை ஊகித்துக்கொள்ள நேரம் தேவையில்லை. எந்த மக்களின் விடுதலைக்காக போராடுவதாக புலிகள் சொன்னார்களோ அந்த மக்களையே கேடயங்களாக பாவித்து தங்கள் இருப்பை தக்கவைக்க தப்பியோடும் அப்பாவி மக்கள் மீது ஈவிரக்கமின்றி சுடுகிறார்கள். செய்வதறியாது கொலைவெறி தலைக்கேறி ஊழித்தாண்டவம் ஆடுகிறார்கள். புலம்பெயர்ந்த மக்கள் கள நிலவரங்கள் புரியாமல் புலிப்புராணம் பாடுகிறார்கள். புலித்தேவன்> இளந்திரையன்> ரமேஸ்> கரிகாலன் உட்பட பலர் புலிகளால் மரணதண்டணைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளார்கள். வன்னி மக்களின் வாய்வழி உறுதி இது. நாளை சூசையோ> யோகியோ> பாலகுமாரோ> நடேசனோ கருணாவுக்கு போட்டியாக மகிந்தவின் ஆதரவில் நிற்கமாட்டார்கள் என்பதற்கு புலிகளின் வரலாற்றில் எந்த உத்தரவாதமும் இல்லை. வட மாகாணத்தின் முதலமைச்சர் பதவி காத்திருக்கிறது… இன்னமும் எத்தனையோ மந்திரி பதவிகளை உருவாக்க அரசியல் யாப்பில் இடமுள்ளது. வாருங்கள்….. முந்திக் கொள்ளுங்கள்…. டக்கிளஸ் வெறும் இலுப்பம்பூ சக்கரை தான். கரும்பும்> தேனும்> கற்கண்டுகளும் புலிகளுக்குள் இருக்கிறார்கள். தரிசனம் கிடைக்கும் நாட்கள் வெகுதொலைவில்லை.
george
muslims in srilanka were hindus and became muslims like christians.innocent muslims were killed in east in 90s mr karuna entirely responsible for all innocent muslims lifes.i coulnt trust his words because he was second in command. If he claimed victory of pullikal he also responsible of innocent muslims who murderd at that time.
karuna more like selfish who escaped and having a luxury life he used to have ,but many still there coulnt able to. I think east need a leader but not him.
East need a leader who can represent in a proper way.karuna sadley cannot represent himself fully. If he cant look after himself how can he look after people of east? Honestly karuna is comedian he can only makes us laugh not the way forward.
Kullan
கருணா அவர்களே! உங்களிடம் ஆயுதம் இல்லை என்கிறீர்கள். 2கிழமைகளுக்கு முன்புதானே சொன்னீர்கள் புலிகள் ஆயுதங்களைப் போடாத வரை நீங்களும் ஆயுதங்களைப் போடமாட்டீர்கள் என்று. 2000 தமிழ் மக்களை நீங்கள் கொழும்புக்கு அழைத்து வந்து விழாநடத்தியதாகவும் அவர்களை வன்னிப்போர்முனைக்கு அனுப்பப்போவதாகவும் செய்திகள் வந்தனவே. தமிழ்மக்கள் கொல்லுப்படுவது போதாதா? சரி கிழக்கில் இருக்கும் தமிழர்களையாவது வாழவிடுங்கள். நீங்களோ புலிகளோ சுயஅரசியலுக்காக யார் உயிரையும் எடுக்கத்தயாராக இருக்கிறீர்கள். போதும் உங்கள் வேடங்கள். உமது செவ்வியில் நீங்கள் சொன்னது எது உண்மை கருணா. நீங்கள் ஆயுதங்களை வைத்துக்கொண்டு கொழும்பில் இருங்கள். தமிழர்களை விட்டுவிடுங்கள். நாங்கள் செத்தது போதும்
Jeyabalan T
Tamil Tigers ‘finished’, says former leader
• Rebels in Sri Lanka said to have lost 90% of fighters
• Aid agencies fear for fate of civilians in north-east
Randeep Ramesh in Colombo — The Guardian, Saturday 21 March 2009
The Liberation Tigers of Tamil Eelam, a rebel army that has fought a 25-year civil war against the Sri Lankan state, is “finished”, having lost more than 90% of its fighters, the group’s former military commander said yesterday.
In an interview with the Guardian, Colonel Karuna said around 1,500 surviving rebels, who have made their last stand on a sliver of the north-east coast, are surrounded by 65,000 troops of the Sri Lankan army, with no way out. At the height of their powers the Tigers could muster more than 15,000 men at arms.
“It is a do or die battle for the LTTE,” said Karuna. “The battle is now street to street and door to door.”
Karuna is the nom de guerre of Vinayagamoorthy Muralitharan, who until 2004 was the Tigers’ military commander. Many see his defection as a turning point for the LTTE. Not only was Karuna privy to all the Tiger’s best-kept secrets, he also brought with him 6,000 battle hardened fighters.
The 45-year-old now describes his former leader, Velupillai Prabhakaran, as “a mad man”. “He wanted to be a king, a duke … he had a totalitarian mindset. I told him the LTTE could never win. I had spent 22 years on the battlefield. But he did not listen.”
Prabhakaran, he said, had made a series of tactical blunders in the war culminating in the suicide gamble of holding territory. “After he lost [the Tigers’ capital] Kilinochi he knew he could not make a stand. But he thought the Tigers could survive among the people. Now the LTTE has trapped 100,000 people and [Prabhakaran] has gone to the jungles [preparing for] a guerrilla war.”
Aid agencies have warned of a looming humanitarian catastrophe as the Sri Lankan army has pounded the Tiger positions, which have been placed amid the cornered population. The UN says that 2,800 civilians have been killed and more than 7,000 injured in the fighting.
Karuna says he has warned the country’s president Mahinda Rajapaksa “this is a critical situation. They have listened. The army do not use sea or air power. I have told them be careful.”
For as long as the Tigers exist, Karuna cannot live in the open – and his family remain in the UK. The Guardian met him after passing a line of armed guards at a secret location in Colombo.
Officials in Sri Lanka admit he has “blood on his hands” but say he should be forgiven because he renounced violence.
The LTTE’s former military supremo says one of the reasons why the Sri Lankan army has been so successful is the new commando units that tracked the Tigers’ through their phone calls – pinpointing their jungle lairs. “The LTTE can never be built up again. They can’t use any communications. They are finished.”
He admits a high regard for the Sri Lankan army commander, Sarath Foneska, who survived a Tiger suicide bombing in 2006. Karuna says he almost killed him on the battlefield. “We bombed him once during an operation, but he escaped. Lost a colonel and few others though. Now we meet frequently and talk about our past. He was a war hero. So was I. We appreciate each other.”
Karuna was made Sri Lanka’s minister for national integration this week – a remarkable transition for a man who as a teenager joined the Tigers’ armed struggle in 1983, enraged by the killings of Tamils in Colombo and beguiled by the Tiger’s “big propaganda”. “We thought we could save our people … but that I know now was not the way,” he said.
Karuna said he fell out with Prabhakaran who called him a “traitor to his race” for signing an agreement with the Sri Lankan government during peace talks in Oslo in 2003.
Under the terms of the deal the rebels were to consider giving up the LTTE’s cherished aim to carve out a separate nation for the island’s 3m Tamils in return for the creation of a “federal government”.
guardian.co.uk/world/2009/mar/21/tamil-tigers-sri-lanka-karuna