இலங்கையின், பொருளாதார மீட்சிக்கு அதிகாரப் பகிர்வும், இனப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வும் தேவை என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு தற்போது ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த முதல் நாள் அமர்வில் பேசிய இந்திய பிரதிநிதியே இவ்வாறு வலியுறுத்தல் விடுத்துள்ளார்.
மேலும் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தவும் இந்தியா, இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதேவேளை பொறுப்புக்கூறல், உண்மை மற்றும் நீதிக்காக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்த போதிலும், மிகக் குறைவான முன்னேற்றமே ஏற்பட்டுள்ளதாகவும் சுவிட்சர்லாந்து கவலை வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.