ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 51ஆவது அமர்வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உண்மையை அறிதல் தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“2019 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான உண்மையைக் கண்டறிவதில் போதிய அளவில் முன்னேற்றம் ஏற்படாதிருக்கும் விடயம் தொடர்பாகக் கரிசனை தெரிவிக்கும் இந்த அறிக்கை, விசாரணைகளை மேலும் முன்னெடுப்பதற்கென சர்வதேச உதவியுடனும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடைய பிரதிநிதிகள் ஆகியோரின் முழுமையான பங்கேற்புடனும் இது தொடர்பாக சுயாதீனமான, வெளிப்படையான ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.