இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய மூன்று நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை குறித்து நம்பிக்கையுடன் உள்ளதாக சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.
சர்வதேச அபிவிருத்திக்கான நிலையத்தின் தலைவர் மசூட் அஹமட்டுடான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய மூன்று நாடுகளில் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியன காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என நம்பிக்கை கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ள அவர் தனியாரையும் உள்வாங்க முடியும் என கருதுகின்றோம் என தெரிவித்துள்ளார்.