நெஞ்சை உறைய வைக்கும் வகையில், தனது இரு மகள்களை கடந்த பத்து வருடங்களாக கட்டாயப்படுத்தி, அடைத்து வைத்து கற்பழித்து வந்த காமக் கொடூர தந்தையை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர் என இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
சமீபத்தில்தான் ஆஸ்திரியாவில் ஜோசப் பிரிட்ஸல் என்பவரை அங்குள்ள போலீஸார் கைது செய்தனர். அவர் மீதான குற்றம் என்னவென்றால், தனது மகளை 25 ஆண்டுகளாக வீட்டின் இருட்டறையில் அடைத்து வைத்து கற்பழித்தார் என்பதே. இந்த நிலையில் மும்பையில் இப்படி ஒரு அசிங்கமான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் 61 வயதாகும் ஒரு தொழிலதிபர். இந்த கொடும் குற்றத்திற்கு அவரது மனைவியும் துணை போயுள்ளார் என்பதுதான் நெஞ்சை பதற வைக்கும் செய்தியாக உள்ளது. அந்த தொழிலதிபர் தனது 21 வயது மகளை கடந்த பத்து வருடங்களாக கற்பழித்து வந்துள்ளார். மேலும் 15 வயதாகும் 2வது மகளையும் கடந்த சில மாதங்களாக இதே செயலுக்காக பயன்படுத்தி வந்துள்ளார். தனது தங்கையையும் தந்தை கேவலப்படுத்த ஆரம்பித்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மூத்த மகள் தனது தாய் வழி பாட்டியிடம் நடந்ததைக் கூறி கதறியுள்ளார். இதையடுத்து இந்த அசிங்கமான செயல் வெளிச்சத்திற்கு வந்தது.
ஹஸ்முக் ரத்தோட் என்ற மடச் சாமியார் ஒருவர் கொடுத்த அட்வைஸ்படிதான் இந்த அசிங்கமான செயலை செய்து வந்துள்ளார் அந்த தொழிலதிபர். அந்த கேடிச் சாமியார்தான், உங்களது மகள்களை கற்பழித்தால் குடும்பம் விருத்தி அடையும் என கூறினாராம். தனது மூத்த மகளை 11வயதிலிருந்து கற்பழித்து வந்துள்ளார் அந்தத் தந்தை. மேலும் சாமியாரின் பேச்சைக் கேட்டு தனது இளைய மகளையும் கற்பழிக்க ஆரம்பித்தார். இதில் கொடுமை என்னவென்றால், அந்த சாமியாரும், தொழிலதிபரின் 2வது மகளை சிலமுறை கற்பழித்துள்ளார் என்பதுதான். தற்போது போலீஸார் அந்த கொடூர தந்தை, அத்தனையும் தெரிந்தும் அமைதியாக இருந்து வந்த அவரது மனைவி ஆகியோரைக் கைது செய்துள்ளனர் என இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
மகளுடன் கூடா உறுவுகொண்ட தந்தை தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்
ஆஸ்டிரியாவில் தன் சொந்தப் புதல்வியுடன் தகாத உறவு கொண்டு அவரை இருபது ஆண்டுகளுக்கும் மேல் பூட்டிவைத்து, அவர் மூலம் 7 குழந்தைகளப் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜோசப் பிரிட்சில் என்ற ஆஸ்டிரிய குடிமகன் தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒத்துக் கொண்டுள்ளார்.
இந்த திடிர் மாற்றத்துக்கான காரணம் என்ன என்று நீதிபதி கேட்டபோது, வீடியோ ஒலிபதிவில் தனது புதல்வியின் சாட்சியத்தை தாம் கேட்டமையே இதற்கு காரணம் என்று அவர் தெரிவித்தார்.
பிரிட்சில்லுக்கு தற்போது வயது 73. இவருக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்கப்படலாம். குடும்பத்துக்குள் கூடா உறவு மற்றும் கற்பழிப்பு, தவறாக தடுத்து வைத்தல் ஆகிய குற்றங்களை ஏற்கனவே ஒத்துக் கொண்டிருந்த பிரிட்சில் புதல்வியை அடிமைப் படுத்தி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டை மறுத்துவந்தார். மகளுக்கு பிறந்த குழந்தைகளில் ஒன்றை, அது பிறந்த சில நாட்களுக்குள்ளாகவே கொலை செய்த குற்றச்சாட்டையும் அவர் மறுத்து வந்தார்.