பெரும்பான்மை சிங்களவர்களாலும் தொல்லியல்திணைக்களத்தாலும் ஆக்கிரமிக்கப்படும் தமிழர்களின் பூர்வீக நிலம் திருக்கோணேச்சரம் !

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொல்லியல் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதை அரசாங்கம் மறுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே, அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இதனை குறிப்பிட்டார்.

திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் காணிகள் அபகரிக்கப்பட்டு புதிய வியாபாரத்தளங்கள் அமைக்கப்படுவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் ஒத்திவைப்பு வேளை விவாதத்தை முன்வைத்தார்.

இதன்போது நூற்றுக்கணக்கான ஏக்கர் காணியை கொண்டிருந்த திருக்கோணேஸ்வரம் இன்று 18 ஏக்கர் காணியை மாத்திரமே கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

காசிக்கும், திருப்பதிக்கும் செல்கின்ற அரசியல்வாதிகள் அதே சிவபெருமான் வீற்றிருக்கும் திருகோணேஸ்வர காணியை அபகரிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார். இந்த தெய்வ நிந்தனையே நாடு வீழ்ச்சி நிலைக்கு செல்கின்றமைக்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பதில் வழங்கி உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க,

நாடு இன்னும் பிரிந்து செயற்படுகிறது. ஒவ்வொருவரும் தம்முடைய தனிப்பட்ட நலன்களை கருத்திற்கொண்டு செயற்படுகின்றனர் என்றும் ஒவ்வொருவரும் வரலாறுகளை தெரிவிக்கின்றனர் என்றும் எனினும் வரலாறுகளை பற்றி சிந்திக்காமல், நடைமுறையை பற்றி சிந்திக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

அகழ்வாராட்சி விஞ்ஞானமாகும் என்றும் எனவே, தற்போது எழுந்துள்ள பிரச்சினை தொடர்பாக விரைவில் திருகோணமலைக்குச் சென்று ஆலய நிர்வாகத்தினருடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதே நேரம் இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபன திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன் திருகோணமலை ஆக்கிரமிப்பு தொடர்பில் குறிப்பிட்டார். “கிழக்கில்  திருக்கோணேஸ்வரம் ஆலயத்தை அபகரிக்க இப்போது ஒரு திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.. திருக்கோணேஸ்வரம் இலங்கையிலே இருக்கின்ற பஞ்சஈஸ்வரங்களில் ஒன்று. இது மிகப்பழமை வாய்ந்தது. இந்த நாட்டுக்கு விஜயன் வருவதற்கு முன்னதாகவே

பஞ்ச ஈஸ்வரங்கள் இலங்கையில் இருந்ததாக வரலாற்றுஆசிரியர் சேர் போல் பீரிஸ் சான்றுரைத்துள்ளார்.

தற்போது அரசிலுள்ள இரத்தினபுரியை சேர்ந்த ஒருவர் அங்கு வந்து மாவட்டக்காரர்களை அழைத்து சென்று ஆக்கிரமிப்புக்களில் ஈடுபடுகின்றார்.  திருக்கோணேஸ்வ்ர் ஆலயத்தை அண்டியுள்ள இடங்களில் 58 கடைகளை வேறு மாவட்டங்களை சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களே நடத்தி  வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புக்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *