பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இன்றைய தினம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், இரா.சாணக்கியன், சட்டத்தரணிகள், சட்டக்கல்லூரி மாணவர்கள், சர்வமதத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது குறித்த நடவடிக்கைகளுக்கு பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியிருந்தனர்.
இதற்கு எம்.ஏ சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். இதன்காரணமாக குறித்த பகுதியில் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் காங்கேசன்துறை முதல் ஹம்பாந்தோட்டை வரையில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.