பின்தங்கிய கிராமங்களை சேர்ந்த கர்பிணித்தாய்மார்களிற்கே அதிகமாக குருதிச்சோகை ஏற்படுவதாக வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.மகேந்திரன் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
பின்தங்கிய பகுதிகளில் பொதுவாக போசாக்கு பிரச்சினைகள் நீண்டகாலமாக காணப்படுகின்றது. தற்போதைய பொருளாதார நிலைக்கு முன்பாக இருந்த காலப்பகுதியிலும் கூட குருதிச்சோகையால் பாதிக்கப்படும் பின்தங்கிய கிராம புறங்களில் வசிக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
இந்நிலையில் கர்பிணித்தாய்மார்களிற்கு சுகாதார திணைக்களம் ஊடாக உரிய குருதி பரிசோதனையினை மேற்கொண்டு அவ்வாறான அறிகுறிகளை கொண்ட தாய்மார்களிற்கு மேலதிக கவனம் எடுத்து அதற்கான மாத்திரைகள் வழங்குவதுடன் ஏனைய விடயங்களும் வழங்கப்படுகின்றன.
அது குழந்தை பிறக்கும் போது ஏற்படும் சில பிரச்சினைகளை முடிந்தவரை தவிர்ப்பதற்கு உதவும். இதேவேளை குழந்தை சரியான நிறையுடன் பிறப்பதற்கும் தாய்மார்களின் போசாக்கு முக்கிய காரணியாகவுள்ளது.
இந்த பாதிப்பு நிலமை சில காலங்களிற்கு நீடிக்கும் நிலையே உள்ளது என்றார்.