இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு, சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பதை உறுதி செய்யும் முகமாக சிறப்பு பிரிவொன்றினை ஆரம்பித்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ், இந்த புதிய பிரிவு, உலக சிறுவர் தினத்தை மையப்படுத்தியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களின் உரிமைகளை உறுதி செய்யும் விதமாக இந்த புதிய பிரிவு பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிய முடிகின்றது.