பெண்களே கவனம் – இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் மார்பக புற்று நோயாளர்கள் எண்ணிக்கை !

இலங்கையில் நாளொன்றுக்கு 12 மார்பக புற்று நோயாளர்கள் பதிவாகி வருவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த இரண்டு தசாப்தங்களில் மார்பக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் ஹசரேலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, உள்ளூர் அளவில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,.

மேலும் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளை சிகிச்சைக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வைத்தியர் ஹசரேலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

……………………………………………………………………………………………………………………………………………………………………………..

பெண்கள் அனைவரும் மார்பக புற்று நோய் பற்றிய விழிப்புணர்வை பெற்று இருக்க வேண்டும்.

அதாவது, தொடக்க நிலையில் மார்பில் வலியற்ற சிறு கட்டியாகத் தோன்றும்போது அதை அலட்சியப்படுத்திவிடுகிறார்கள்.

நாளடைவில் அந்தக் கட்டி வளர்ச்சியடைந்து, வலி நிறைந்த பெரிய கட்டியாக மாறும் போது தான் பெண்கள் மருத்துவ உதவியையே நாடுகின்றனர்.

அதற்கு மார்பக புற்றுநோய் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது. மார்பக புற்றுநோய்களில் என்னென்ன வகைகள் உள்ளன அவற்றின் அறிகுறிகள் என்னென்ன என்பதை காணலாம்.

​மார்பக புற்றுநோயின் அறிகுறிகள்
இப்பொழுது எல்லாம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவது சர்வ சாதாரணமாகி விட்டது.
வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள், அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது மார்பக புற்று நோய் பாதிப்பை பெருமளவில் ஏற்படுத்துகிறது.
மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை எல்லாப் பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
அதே மாதிரி மார்பக புற்றுநோய் பரிசோதனையையும் தொடர்ச்சியாக செய்து வருவது உங்களை மார்பக புற்று நோய் அபாயத்தில் இருந்து காக்கும்.
ஆனால் பல பேருக்கு இது தெரிவதில்லை. மார்பக கட்டி வளர்ந்த பிறகே மருத்துவரை நாடிச் செல்கின்றனர்.

பெண்ணின் மார்பக காம்புகளில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டும். மார்பக புற்று நோய் எடுத்த எடுப்பிலேயே வருவதில்லை.

முதலில் அதற்கான அறிகுறிகள் தென்படும். பின்னரே அதன் பாதிப்பு பலமடங்கு பெருக ஆரம்பிக்கும். வெவ்வேறு வகையான மார்பக புற்று நோய் இருக்கின்றன.
எடுத்துக்காட்டாக பால் குழாய்களில் கட்டிகள் வருவதை இன்வேசிவ் டக்டல் கார்சினோமா என்றும் பால் உற்பத்தி செய்யும் சுரப்பிகளில்

உருவாகும் கட்டிகளை இன்வேசிவ் லோபுலர் கார்சினோமா என்றும் அழைக்கின்றனர். இது மார்பக பகுதியை தடினமாக்குகிறது.

​மார்பக புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள்
இந்த மாதிரியான மார்பக கட்டிகள் நபருக்கு நபர் மாறுபட்டு காணப்படும். மார்பக புற்று நோய் வருவதற்கு முன் சில அறிகுறிகள் தென்படுகின்றன.
சரும நிறம் மாறும், வீக்கம், சிவத்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். மார்பகத்தின் வடிவம், அளவு மாறும், இரண்டு மார்பக காம்புகளில் அல்லது ஒரு காம்பில் மாற்றங்கள் தென்படலாம்.
தாய்ப்பாலைத் தவிர முலைக்காம்பில் கசிவு ஏற்படும்.
 
மார்பகத்தின் எதாவது ஒரு பகுதியில் வலி உண்டாகுதல், மார்பகத்தின் உட்பகுதியில் கட்டிகள் தோன்றுதல்,

இன்வேசிவ் மார்பக புற்றுநோய் அறிகுறிகள் (மார்பகத்தின் உள்ளே ஏற்படும் அறிகுறிகள்) எரிச்சல் அல்லது மார்பகங்களில் அரிப்பு ஏற்படுதல், மார்பக நிறத்தில் மாற்றம், மார்பக வடிவில் அல்லது அளவில் அதிகரிப்பு ஏற்படுதல். மார்பகத்தை தொடரும் போது கடினமாக அல்லது சூடாக உணர்தல்,

மார்பக காம்புகளின் சிவத்தல் ஏற்படுதல், மார்பக கட்டி கடினமாகுதல், சிவந்து போதல் அல்லது மார்பக சருமம் ஆரஞ்சு நிறத்தில் தோன்றுதல். சில நேரங்களில் மார்கத்தில் ஏற்படும் தொற்று காரணமாக கூட சிவந்து போகலாம். மார்பக காம்புகள் வீங்கி இருப்பதும் தொற்று காரணமாக இருக்கலாம்.

எனவே அதற்காக கவலை கொள்ள வேண்டாம். உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்ளுங்கள். இன்வேசிவ் மார்பக புற்று நோய் அறிகுறிகள் (மார்பகத்தினுள் ஏற்படும் அறிகுறிகள்), மார்பகத்தில் கட்டி அல்லது கனமாக உணர்தல் மார்பகத்தின் எல்லா பகுதியும் வீக்கத்துடன் தென்படுதல்,

தோல் எரிச்சல் அல்லது சுறுசுறுக்கென்ற வலி மார்பகம் அல்லது மார்பக காம்புகளில் வலி ஏற்படுதல், முலைக்காம்பு உள் நோக்கி திரும்புதல், மார்பக சருமம் சிவந்து, செதிலாக அல்லது தடினமாக மாறுதல், முலைக்காம்பு வெளியேற்றம், அக்குள் பகுதியில் நிணநீர் வீக்கம். லோபுலர் கார்சினோமா அறிகுறிகள்

இந்த புற்றுநோய் எந்தவித அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. மேமோகிராம் மூலம் கூட இதை பார்க்க இயலாது. இதை மார்பக பயாப்ஸி மூலம் மட்டுமே கண்டறிய முடியும்.

ஒரு வேளை ஒரு நபருக்கு லோபுலர் கார்சினோமா செல்கள் இருந்தால் நுண்ணோக்கி வழியாக பார்க்கும் போது அதன் அசாதாரண வளர்ச்சி தெரியும்.

மார்பக குழாய்களில் ஏற்படும் அறிகுறிகள்

மார்பக குழாய்களில் ஏற்படும் புற்றுநோய் எந்த வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. இதனால் இதை சீக்கிரமே கண்டறிவது கடினம்.  மார்பக குழாய்களில் ஏற்படும் கட்டியை கொண்டு நீங்கள் உணரலாம். இல்லையென்றால் மேமோகிராம் மூலம் கண்டறியலாம்.

அழற்சி வகை மார்பக புற்று நோய் அறிகுறிகள்

இந்த அழற்சி வகை மார்பக புற்று நோய் கட்டிகளை அரிதாகவே உண்டாக்குகிறது.  இதையும் மேமோகிராம் வழியாக நீங்கள் பார்க்க இயலாது. ஒரு சில அறிகுறிகளை கொண்டு நீங்கள் கண்டறியலாம்.

சிவந்து போதல், வீக்கம் உண்டாதல், எரிச்சல் அல்லது அரிப்பு கொண்ட மார்பகங்கள், மார்பகத்தின் சருமத்தில் ஆரஞ்சு நிறம் தோன்றுதல், குழி போன்று தென்படுதல்,

மார்பகம் கனமாக இருத்தல், எரிதல் மற்றும் வலித்தல், ஒரு மார்பகம் மற்றொரு மார்பகத்தை விட பெரிதாக தென்படுதல்,

மார்பகப் காம்புகள் உள்நோக்கி திரும்புதல், மார்பக பரிசோதனை மூலம் எதையும் கண்டறிய இயலாது,

அக்குள் பகுதியில் அல்லது காலர் எலும்புக்கு கீழ் பகுதியில் நிணநீர் வீக்கம் தென்படுதல்.

​முலைக்காம்பு அழற்சி
மகப்பேறு பெற்ற பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் கால கட்டத்தில் சிவத்தல், அரிப்பு மற்றும் புண்கள் போன்ற முலைக்காம்பு அழற்சியை பெறுவார்கள்.

இதை நீங்கள் ஆன்டி பயாடிக் சிகச்சை மூலம் சரி செய்யலாம். உங்களுக்கு மகப்பேறோ அல்லது கருவுறாமல் இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.

ஆன்டி பயாடிக் மருந்துக்கு பிறகு ஏற்படும் மாற்றங்கள்
அழற்சி மார்பக புற்று நோய் மற்ற மார்பக புற்றுநோய் கட்டிகளை போன்று இருக்காது. இது கட்டிகளை உருவாக்குவதில்லை.
அதனால் மருத்துவ பரிசோதனை மற்றும் மேமோகிராம் மூலம் இதை நாம் கண்டறிய இயலாது.

அல்ட்ரா சவுண்ட் மூலம் கூட இதை தெளிவாக கண்டறிய முடியாது என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆனால் இந்த புற்று நோயினால் ஏற்படும் மாற்றங்களை கண்கூடாக காண முடியும். இதன் அறிகுறிகள் விரைவாக தோன்ற ஆரம்பிக்கும்

மேலும் நோய் விரைவாக வளர ஆரம்பிக்கும். உங்கள் மார்பின் வடிவம் அல்லது தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி விடுங்கள்.

​மெட்டாஸ்டேடிக் மார்பக புற்று நோய் அறிகுறிகள்

இந்த புற்றுநோய் எந்த இடத்தில் ஆரம்பமாகிறது மற்றும் எவ்வளவு தூரம் பரவி இருக்கிறது என்பதை பொருத்தது. சில நேரங்களில் இந்த புற்றுநோய் எந்த வித அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை.

மார்பக சுவரில் பாதிப்பு ஏற்பட்டால் வலி, மார்பக காம்புகளில் மாற்றம், கட்டிகள், மார்பகம் தடினமாகுதல், அக்குள் பகுதிகளில் வீக்கம் போன்றவை தென்படலாம்.

எலும்புகள் பாதிக்கப்பட்டால் வலி, எலும்பு முறிவு, மலச்சிக்கல், கால்சியம் அளவு குறைதலின் அறிகுறிகள் தோன்றலாம். இதுவே புற்றுநோய் கட்டிகள் நுரையீரலை பாதித்து இருந்தால் மூச்சு விட சிரமம், இருமல், மார்பக சுவரில் வலி அதிகப்படியான சோர்வு போன்றவை தோன்றும்.

கல்லீரலில் புற்று நோய் பாதிப்பு இருந்தால் குமட்டல், சோர்வு, அடிவயிற்றில் வலி, பாதங்களில் கைகளில் வீக்கம், மஞ்சள் நிற சருமம், கண்கள் மஞ்சளாகுதல், சருமத்தில் அரிப்பு போன்றவை ஏற்படும்.

இதுவரை மார்பக புற்று நோய் மூளைக்கு பரவினால் முதுகுத் தண்டுவடத்தில் கட்டிகள் உண்டாகும்.

வலி, குழப்பம், நினைவிழப்பு, தலைவலி, கண்பார்வை மங்கலாகுதல், பேச்சில் கடினம், வலிப்பு போன்றவை நேரலாம்.

​பாப்பில்லரி புற்றுநோய் அறிகுறிகள்
பாப்பில்லரி புற்றுநோயை நீங்கள் மேமோகிராம் மூலம் கண்டறியலாம். நிறை மாற்றம் இந்த புற்றுநோயில் கட்டிகள் 2 செ. மீ முதல் 3 செ. மீ வரை மாறும்.

கைகளால் தொட்டு பார்த்து அறிந்து கொள்ளலாம். முலைக்காம்பில் மாற்றம் 50 சதவிகித மாற்றங்கள் முலைக்காம்பின் அடிப்பகுதியில் நிகழ்கின்றன.

ஏற்பிகளின் நிலையில் மாற்றம்
ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன், ஹெச்இஆர்2 போன்ற ஏற்பிகளின் சோதனை எதிர்மறையாக வெளிப்படும்.
ஹார்மோன்களிலே மாற்றம் ஏற்படுவதால் ஹார்மோன் தெரபி வேலைக்கு வராது.

இதற்கு கீமோதெரபி, கதிரியக்க பரிசோதனைகள், இலக்கு தெரபி போன்ற மூன்று பரிசோதனை களை செய்யலாம்.

​ஆக்ரோஷமான மார்பக புற்று நோய்
சிகிச்சை கொடுத்த பிறகு இதன் வீரியம் கொஞ்சம் குறைகிறது. செல்வகை மற்றும் தரத்தை பொறுத்து இந்த வகை புற்றுநோய் செல் மார்பக குழாய்களின் அடியில் உண்டாகிறது.
புற்றுநோய் செல்கள் ஆரோக்கியமான செல்களை ஒத்திருக்காது.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *