கலாபூஷணம் முத்தழகு அவர்களின் பெயர் காலத்தால் அழிந்துவிடாது. – முதலமைச்சர் அனுதாபம்.

cm-ep.jpg இலங்கையின் மூத்த கலை இலக்கிய கலைஞர்களில் ஒருவரான மட்டுநகர் வி. முத்தழகு  (மார். 19) காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 77.  மிக நீண்ட காலமாக இலக்கியத் துறையில் ஈடுபாடு கொண்டுள்ள இவரின் `தாகமாய் இருக்கிறேன்` சிறுகதைத் தொகுதி பல விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பின் அரசியல், கலை, இலக்கிய வரலாற்றில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்தவர் அண்ணன் முத்தழகு. இவர் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினராக, நகைக்கடை வர்த்தக சங்கத்தின் தலைவராக, ஒரு சிறந்த கவிஞராக, சிறந்த எழுத்தாளனாக எமது மக்களுக்கு ஆற்றியுள்ள சேவைகள் காலத்தால் அழிந்துவிட முடியாதவை. தமிழ் இனம் வாழும்வரை அண்ணன் முத்தழகுவின் பெயர் நிலைத்து நிற்கும். அன்னாரின் மறைவினால் கலை உலகத்திற்கு ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.

அன்னார் எமது தாய் நாட்டில் மாத்திரம் அல்ல தென் இந்தியாவிலும் தனது பெயரை நிலைநிறுத்தியவர். அரச உயர் விருதான கலாபூஷணம் விருதினைப் பெற்று எமது பிரதேசத்திற்குப் பெருமை தேடித்தந்தவர். அன்னாரின் பிரிவால் துயர் உற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், மற்றும் கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்..

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • Kusumpan
    Kusumpan

    சந்திரகாந்தன் (பிள்ளையானின்) பெயரும் இலங்கைத்தமிழர் உள்ளரை இரத்தம் படிந்த காலத்தால் மறையாக காலங்கள் தானே.

    Reply
  • palli
    palli

    பாரட்டியவர் தவறானவர்தான் ஆனால் பராட்டைபெற்றவர் அதுக்கு உரியவரே. பிள்ளையான் ஏன் இந்த விடயத்தை கையில் எடுத்திரோ தெரியாது இருப்பினும் நல்ல ஒரு விடயத்தை செய்ததுக்காக தமிழனாய் பாராட்டுக்கள்.

    Reply