தமிழ் நாட்டிலுள்ள புலி ஆதரவாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி இந்திய உயர் நீதிமன்றத்தில் உதவியை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதியின் ஆட்சியின்கீழ் புலி ஆதரவாளர்கள் சட்ட திட்டங்களை உதாசீனம் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 17ம் திகதி நீதிமன்றத்தில் வைத்து புலி ஆதரவுச் சட்டதரணிகளினால் சுப்பிரமணிய சுவாமி தாக்கப்பட்டார் நீதிபதி மற்றும் பொலிஸார் முன்னிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும் இவ்வாறு எதிர்வரும் காலங்களில் இடம்பெறாது தடுப்பதற்கு இந்திய உயர் நீதிமன்றத்தின் உதவியினை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Kullan
இந்தமுறை இந்தியத்தேர்தல் ஆடுபுலி ஆட்டம் தான்
palli
சாமி நீங்க அமெரிக்காவில் தங்கி விடுவதே நல்லது. இந்தகாலத்து பிள்ளையள் பளசுகள் மாதிரி இல்லை கண்டபடி கை நீட்டுகிறார்கள். அதனால் சேதாரம் தங்களுக்குதானே. எதுக்கும் உங்கள் அறிவை அமெரிக்காவில் விலைபடுத்துவது நல்லதென பல்லிக்கு படுகுது. இனி விதி யாரை விட்டது.