ருபெல்லா தடுப்பூசி வழங்கப்பட்ட பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்ததையடுத்து ,த்டுப்பூசி வழங்குவதை இடை நிறுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிடுள்ளார். அத்துடன் தடுப்பூசி வழங்கப்பட்ட பின் சிறுமியின் மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ருபெல்லா தடுப்பூசி வழங்கப்படதையடுத்து ஒவ்வாமை காரணமாக மாத்தறை வைத்தியசாலையில் பல மாணவியர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுள் 12 வயது மாணவியொருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். அதேவேளை வைத்தியசாலையில் 26 மணவியர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.