ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் எதிர்வரும் 26 ஆம் திகதிய கூட்டத்தில் இலங்கை விவகாரத்தை ஆராய்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ள நிலையில், இவ்விடயத்தில் இடையூறு விளைவிக்க வேண்டாம் என விடுதலைப் புலிகள் சீன அரசாங்கத்திற்கு நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை விடுதலைப்புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் பா. நடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை அரசானது தனது இனப்படுகொலைகளை மூடிமறைக்க இது ஒரு உள்நாட்டு யுத்தம் என்ற போர்வையில் பரப்புரைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார். ஐ.நா பாதுகாப்புச் சபையில் இரண்டாவது தடவையாக எடுத்துக் கொள்ளப்பட இருந்த இவ் விவாதத்தை உள்நாட்டு பிரச்சனை என சீனா வர்ணித்திருப்பதனால் இவ்விவாதம் தடைப்படும் அபாயம் தோன்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் சீனாவிடம் விடுத்த கோரிக்கையை தொடர்ந்தே, சீனா இலங்கை அரசிற்கு சார்பாக நடந்து கொள்வதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகள் பிரதிநிதிகள் தமிழ்மக்களின் இந்நிலை தொடர்பில் சீனா அதிகாரிகளுக்கு விளக்க விருப்பமுடையர்களாக உள்ளதாகவும், சீனாவிடம் ஐநாவில் தமிழ்மக்களின்நிலை தொடர்பில் விவாதிக்கவேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
Kullan
நடேசன் அவர்களே! உலகின் பாஷசை உங்களுக்குப் புரிவதில்லையா? சீனா வடிவாகச் சொல்லியிருக்கிறது இன்னும் புரியவில்லையோ? சீனனுக்கு தமிழ் தெரியாதப்பா?……………. சிங்களத்தில் எழுதினால் சிலவேளை விளங்கும். இந்தியா அமெரிக்காவே ஆட்டமுடியாத சீனா உமது கதையைக் கேட்கப்போகிறான். நீங்கள் அமெரிக்காவுடனும் போர்செய்ய நெஞ்சுநிமிர்த்தியவர்கள் அல்லவா. உலகின் எந்த நாட்டை உங்கள் பக்கம் வைத்திருந்தீர்கள் இந்த 30வருடகால போராட்டத்தில்.
nadesh
அதென்ன அவசர வேண்டுகோள்? ஒரு 6 மாதம் முந்த் கதைச்சிருந்தால் எங்கட அலுவல் இது. தலைவருக்கு எல்லாம் என்ன செய்யிறதெண்டு தெரியும் எண்டளந்திருப்பியள்.
accu
இன்று புலிகள் நொந்து நூலாகிப் போயிருப்பதால்தான் சீனாவுக்கு வேண்டுகோள் விடுகிறார்கள் அல்லது எச்சரிக்கை அல்லவா விட்டுருப்பார்கள்.
george
mr kullen almost wright.mr accu is wright.because the situation out of our hands, we nearly surrender but still vivek kind of acting remains.
I think life teach us a leason so that i wouild like to see pulikal will change, bring us a hope.
In this difficult time i think we express our thoughts in polite manner then harsh.
Its very easy make comment but action is so difficult.
We still cant live freely in srilanka, discrimination getting wiser.
murugan
நடேசரே இப்ப இப்படி குறுக்கால் போகக் கூடாது. உங்களை ஏன் தடை செய்தார்கள் என எங்காவது பங்கருக்குள் இருந்து நன்கு யோசிக்கவும். அழுதும் அவளே பிள்ளை பெற வேண்டும். நீங்கள் நாலு பேரும் தான் ஈழம் காணவேண்டும்.
பார்த்திபன்
நடேசன் நீங்கள் உப்படிச் சொன்னால் சீனாக்காரன் கேட்க மாட்டான். போசாமல் எங்கடை புலம்பெயர் தமிழர்கள் எல்லோரும் சீனாச் சாமான்களைப் புறக்கணிக்க போகினம் எண்டொரு அறிக்கை விட்டுப் பாருங்கள். சிலவேளை சீனாக்காரன் பயத்திலை உங்கட காலிலை விழுந்தாலும் விழலாம். பிறகென்ன அப்படியே தமிழீழமும் பிச்சுக் கொண்டு வந்துவிடும்.