வவுனியா முகாம்களில் தமிழ் மக்கள் நிம்மதியாகவே வாழ்கின்றனர்- வினோ நோகராதலிங்கம் : வன்னி மக்களின் நலன்களை அரசு பேணவில்லை – கஜேந்திரன்

vinonodaralingam.bmpவவுனியாவிலுள்ள அகதி முகாம்களில் மக்கள் நிம்மதியாகவே வாழ்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படையினரின் விதவைகள், குழந்தைகள் ஓய்வூதியத் திருத்தச் சட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

முல்லைத்தீவில் தங்களது குடும்ப உறவுகளைப் பிரிந்து வாழ்ந்தாலும் முகாம்களுக்குள் தாம் அச்சமின்றி,  பயமின்றி, நிம்மதியாக வாழ்வதாக வவுனியாவிலுள்ள அகதி முகாம்களில் வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அகதி முகாம்களில் சிறு சிறு தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும்  அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பாராட்டப்படத்தக்கவை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களைப் பிரதிநிதிப்படுத்தும் 22 தமிழ்த் தேசயக் கூட்டமைப்பினர் பாராளுமன்றத்தில் இருந்தபோதும்   புலிகள் மீதிருந்த அச்சம் காரணமாக இதுவரையில் அவர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாய் திறந்து பேசியதே இல்லை. புலிகள் இப்போது இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டு வருவதனால் தமது சொந்தக் கருததுக்களை வெளியிட அவர்களுக்கு இப்போது ஜனநாயக உரிமை கிடைத்துள்ளதென்பதையே  வினோ எம்.பி.யின் உரை எடுத்துக் காட்டுகின்றது என  அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் என அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது . 

வன்னி மக்களின் நலன்களை அரசு பேணவில்லை : கஜேந்திரன்

kajendran.jpgவன்னியில் தங்கியுள்ள 329,000 திற்கும் அதிகமான தமிழ் மக்களது நிலை மனித அவலத்தின் உச்சத்தினை எட்டியுள்ளது. பசி பட்டினி ஒருபுறம் மக்களை வாட்டி எடுக்க மறுபுறத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதல்கள், விமானத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிப் பிரயோகங்களினாலும் மக்கள் நாளாந்தம் படுகொலை செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர். குழந்தைகள் சிறுவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் நோயாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பிணிப் பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மாருக்கும் தேவையான போசாக்கு உணவுகள் மற்றும் நோயாளர்கள் குழந்தைகளுக்கான போசாக்கு உணவுகள் எதுவும் இல்லா நிலையில் பொது அமைப்புக்களினால் வழங்கப்படுகின்ற கஞ்சியை மட்டும் குடித்து உயிர் வாழும் நிலை காணப்படுகின்றது.

தினமும் மூன்று வேளையும் கஞ்சியைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நிற்கும் மக்களை இலக்குவைத்து ஸ்ரீலங்கா படைகள் தாக்குதல்களை நடாத்தி படுகொலை செய்யும் நிகழ்வுகளும் இடம்பெறுகின்றது. அவ்வாறு இறப்பவர்களையும் தாண்டிச் சென்று கஞ்சியை வாங்கினால் தான் உயிர் வாழ முடியும் என்ற நிலைதான் அங்கு காணப்படுகின்றது.

அவ்வாறு பல துன்பங்களை தாண்டிப் பெற்றுக் கொண்ட கஞ்சியை பசிக்கு உடனடியாக வயிறார குடிக்கவும் முடிவதில்லை. மாறாக அக்கஞ்சியை நீண்ட நேரம் வைத்திருந்து பசியினால் உடல் நடுக்கம் அடையும் பொழுதே அக்கஞ்சியை குடிக்கின்றனர். சிறுவர்களும் இவ்வாறுதான் செய்கின்றனர். ஏனெனில் அப்படியென்றால் தான் நீண்ட நாட்களுக்கு கஞ்சியை குடித்தாயினும் உயிர் வாழ முடியும் என்ற எதிர்பார்ப்பினாலும் அவ்வாறு இறப்பதற்கு முன்னர் புலம் பெயர்ந்த மக்களின் முயற்சியினால் தமக்கு தேவையான உணவுகள் போதுமானளவு வந்து சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கையினாலுமேயாகும்.

சிறுவர்கள் இயக்கத்தில் இணைக்கப்படுவது தொடர்பாக நீலிக் கண்ணீர் வடிக்கும் அமைப்புக்கள் வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள 60,000 ற்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான சிறுவர்களினதும் போசாக்குணவு பற்றி எவ்வித அக்கறையும் இன்றி இருப்பது மிகவும் கவலையளிக்கின்றது.

சுத்தமான நீர் என்பது மிகப் பெரும் பிரச்சினையாகவே உள்ளது. குடிப்பது முதல் சமையல் உட்பட எந்தத் தேவைக்கும் தண்ணீரைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. தரப்பாள் கொட்டகைகளுக்குள் வாழும் மக்கள் வெப்பம் காரணமாக அதிக தாகம் ஏற்பட்டாலும் போதியளவு தண்ணீர் அருந்த முடிவதில்லை. இதனால் சிறுநீரகத்துடன் தொடர்புடய நோய்த் தொற்றுக்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது.

பாதுகாப்பான கழிப்பறைகள் இன்மையாலும் கழிவுகள் அகற்றும் பொறிமுறைகள் இன்மையாலும் அதிகளவு மக்கள் தினமும் இறந்து கொண்டிருப்பதனாலும் பெரும் ஆபத்தான தொற்று நோய்கள் பரவும் ஆபத்து அதிகரித்து வருகின்றது.

இந் நிலையில் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கான சமைத்த உணவுகளை பங்கிட்டு வழங்குவது, பொது மக்களுக்கு தேவையான குடிநீரை தூர இடங்களில் இருந்து கொண்டு வந்து வழங்குதல், மக்கள் மத்தியில் தொற்று நோய்கள் ஏற்படாதவாறு அவர்களது முகாம்களில் சுகாதார நிலைமைகளை ஓரளவுக்கேனும சிறப்பாகப் பேணுதல், தினமும் படையினரின் தாக்குதலில் காயமடையும் பொது மக்களை தற்காலிக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுதல் மற்றும் நாளாந்தம் கொல்லப்படும் பொது மக்களது உடல்களை எடுத்து அடக்கம் செய்வது வரை தபுக பணியாளர்கள் மிகப் பெரும் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடுமையான எறிகணைத் தாக்குதல்கள் மத்தியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஏனைய சில உள்ளுர் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனது. உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் தபுக பணியாளர்கள் தமது உயிரையும் துச்சமாக மதித்து செயற்பட்டும் வரும் நிலையில் அவர்கள் சந்தித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பாக இதுவரை எந்த ஒரு சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களோ அல்லது ஐநா அமைப்புக்களோ கரிசனை கொள்ளவில்லை என்பது மிகவும் வேதனையாக உள்ளது.

329,000 திற்கும் அதிகமான மக்கள் அகதி முகாம்களில் தங்கியுள்ள போதிலும் கூட அந்த மக்களின் சுகாதாரம் உட்பட எந்த ஒரு நலன்களையும் கவனிப்பதற்கு ஸ்ரீலங்கா அரசு உரிய ஏற்பாடுகள் எதனையும் செய்யவில்லை என்பதுடன் ஐநா அமைப்புக்கள் கூட இன்று வரை அங்கு செல்லவில்லை. ஐநா சபையும் ஏனைய மனித உரிமை அமைப்புக்ளும் வெறும் ஆலோசளையும், வேண்டுதல்களையும், கவலைகளையும் உள்ளடக்கிய அறிக்கைகளை மட்டும் வெளியிட்ட வண்ணம் உள்ளன.

நடை முறையில் ஸ்ரீலங்கா படையினரால் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கை குறையவில்லை என்பது மட்டுமல்ல மனித அவலங்களும்; அதிகரித்தபடியே உள்ளது. கடந்த இரண்டரை மாதங்களில் ஸ்ரீலங்கா அரசாங்கம் தான் அறிவித்த மக்கள் பாதுகாப்பு பிரதேசங்களை இலக்குவைத்து அதன் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் மட்டும் 3200ற்கும் அதிகமான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 7450 ற்கும் அதிகமான தமிழ் மக்கள் படுகாயமடைந்தும் உள்ளனர்.

பொது மக்களை இலக்கு வைத்து ஸ்ரீலங்காப் படையினர் மேற்கொண்டுவரும் தாக்குதல்களுகளின் போது சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட எரிகுண்டுகளும் பொஸ்பரஸ் குண்டுகள் மற்றும் கொத்துக் குண்டுகளும் பல நூறு கிலொ எடையுள்ள குண்டுகளும் பயன்படுத்தப்படுகின்றது.

இந்லையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே தமது படையினர் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசு பொய் கூறி சர்வதேச சமூகத்தினை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. வன்னியிலுள்ள ஒரே ஒரு தற்காலிக வைத்தியசாலையின் களஞ்சியப் பகுதிகளை இலக்குவைத்து தாக்குதல் நடாத்திவரும் ஸ்ரீலங்கா படைகள் வைத்தியர்களையும் படுகொலை செய்வதற்கு முயற்சிக்கின்றது. அந்த வைத்தியசாலைக்கு தேவையான மருந்துப் பொருட்களை அனுப்பாத காரணத்தினால் அதுவும் மூடப்பட்டுள்ளது.

இந் நிலை நீடிக்குமாக இருந்தால் ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும். இது விடயத்தில் தொடர்ந்தும் அறிக்கைகளோடு மட்டும் தங்கியிருக்காது சர்வதேச சமூகம் உரிய அழுத்தங்களைப் பிரயோகித்து,

உடனடிப் போர் நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கும்,

மருந்துப் பொருட்கள் அனுப்பப்படுவதற்கும் வைத்தியசாலை மீண்டும் திறக்கப்படுவதற்கும்,

இடம் பெயர்ந்து வாழும் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படவும்,

உணவு மற்றும் உணவு, உடை உட்பட அத்தியாவசிய பொருட்களை உடனடியாக தேவையான அளவில் அனுப்பி வைப்பதற்கும்,

இடம் பெயர்ந்த மக்களுக்கான தற்காலிக குடில்களை அமைப்பதற்குத் தேவையான கிடுகுகள் மற்றும் மரங்கள்; மற்றும் தேவையான தற்காலிக கழிப்பறைகள் என்பவற்றை அனுப்பி வைப்பதற்கும், சமையல் பாத்திரங்களை அனுப்பி வைப்பதற்கும்,

சர்வதேச தொண்டு நிறுவனங்களையும் ஊடகவியலாளர்களையும் உடனடியாக அனுப்பி வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கும்படி அவசரமாக வேண்டுகின்றோம்.

செல்வராசா கஜேந்திரன்
பாராளுமன்ற உறுப்பினர்
யாழ் தேர்தல் மாவட்டம்
 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 Comments

  • மலைமகன்
    மலைமகன்

    பாராளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்த கருத்துகள் கட்சிக்குள் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான தங்கேஸ்வரி தெரிவித்தார். இவரின் பாராளுமன்ற உரை குறித்து அடுத்த வாரமளவில் கட்சிக் கூட்டத்தின் கவனத்துக் கொண்டு வரப்படலாமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

    Reply
  • thanam
    thanam

    உண்மையில் வினோ அவர்கள் செய்தது பாரட்டப்படக்கூடியது மற்ற எம்.பி மார்கள் வெளிநாட்டில் நிம்மதியாய் வாழ்கின்றார்கள் சிவாஜிலிங்கம் கூட பேச்சுவார்த்தை ஒன்று நடத்தியவண்ணம் தான் இருக்கின்றார். இவர்கள் பதவி இல்லாமல் இருக்கமாட்டார்கள். இவர்கள் எல்லாம் மக்களுக்கு என்ன செய்தார்கள். இப்படியே இவர்கள் தங்கள் வாழ்க்கை நடத்திய வண்ணம் தான் இருப்பார்கள். எதோ அரசாங்கத்துடன் போகிறார்கள் இவர்கள் எல்லாம் என்ன செய்து மக்களை காப்பாற்ற போகிறார்கள். எல்லாம் பதவிக்குத் தான் குத்தி முறிகிறார்கள். எம்மக்களின் விதி அதோ கெதி தான்.

    Reply
  • thanam
    thanam

    கர்ப்பிணிப் பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மாருக்கும் தேவையான போசாக்கு உணவுகள் மற்றும் நோயாளர்கள் குழந்தைகளுக்கான போசாக்கு உணவுகள் எதுவும் இல்லையாம்.கஜேந்திரன் சொல்லுகிறார் அரசாங்கம் அணுப்பும் போசாக்கு உணவுகளை எல்லாம் புலிகள் மக்களிடம் தட்டிப்பறிக்கின்றார்கள் அது எமது கஜேந்திரன் அவர்களுக்கு தெரியாதோ?முதல் இப்படித்தான் கஜேந்திரன் முல்லைத்தீவுக்கு பொருள்கள் அணுப்ப போவாதாக தீபம் ரீவியில் கதைவிட்டார் எதுவும் நடக்கவில்லை. இபோ மூர்த்தியும் சிவஜிலிங்கமும் கப்பல் விடப்போகிறார்களாம். என்னா இவர்கள் சின்ன வயதில் கப்பல் விட வில்லையோ? பரவாய் இல்லை இப்ப மழை காலம் தான் கப்பல் விடலாம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    யூனிசெப் நிறுவனம் வழங்கிய சிறுவர்களுக்கான அதிக போசாக்குளள பிஸ்கட் வகைகளையே புலிகள் விட்டு வைக்கவில்லை. பின்பு மக்களுக்கு வரும் உணவுகளை விட்டு வைப்பார்களா?? வன்னியிலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பாவிற்கு வந்திருக்கும் மக்கள் புலிகளின் அட்டுழியங்களை கதை கதையாகச் சொல்லுகின்றார்கள். முன்பு இந்திய அரசு விமான மூலம் போட்ட உணவுப் பொருட்கள் முழுவதையும் புலிகளே அபகரித்தார்கள். மீறி அவற்றை எடுத்துச் சென்ற மக்களைத் துரத்திப் பிடித்து புலிகள் பறித்தனர். இவை பற்றியெல்லாம் சிவாஜிலிங்கம் கஜேந்திரன் போன்றவர்கள் தெரிந்திருந்தாலும் புலிவால் பிடித்தால் தானே வெளிநாட்டு வலம் வரலாம். இவர்களுக்கு நிச்சயம் வினோதராலிங்கத்தின் கருத்து கடுப்பேற்றியிருக்கும் தான்.

    Reply
  • palli
    palli

    பார்த்திபன் /சிறுவர்களுக்கான அதிக போசாக்குளள பிஸ்கட் வகைகளையே புலிகள் விட்டு வைக்கவில்லை//
    அவர்களிடம்தானே (புலியிடம்) சிறுவர்கள் இருக்கிறார்கள்.
    பார்த்திபன் கோபம் வேண்டாம் பல்லி மீது.

    Reply
  • Pearl Thevanayagam
    Pearl Thevanayagam

    Tamil parliamentarians are known to remain silent during debates since they do not want to antagonise the government fearing they would lose their parliamentary perks such as duty-free vehicles and rent-free accommodation in the parliamentary complex.
    Vinothalingam is no different from Kadirgamar or Douglas who benefit from the municifence of the govt. and have no aspiations beyond their own selfish motives.
    From the two brothers Ramanathan and Arunachalam Tamil politicians have sold their souls for a pottage so their own kith and kin benefit from holding positions in the cabinet and recently Palakidnar (appeal court judge) got a house in Dehiwela courtsey of the govt for swinging judgement for Kumaratunga and his son Ananth went on Al Jazeera that journalists have free hand in reporting under Mahinda.
    Who needs enemies when we have such sycophants.

    Reply
  • ilankai mahan
    ilankai mahan

    Vino MP அவர்களின் மனதைரியம் பாராட்டப்படக் கூடியது. அரசு பிழைகளை செய்தாலும் புலிகள் செய்தாலும் புலிகளை சற்றேனும் புலிக் கூட்டமைப்பு எம்பிக்கள் ஒன்றும் வைத்திருப்பதில்லை. எத்தனை உயிர்களை புலிகள் பறித்திருப்பார்கள் மக்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும்போது?

    Mano Ganesan (புலிகளின் மனித உரிமைவாதி)என்பவர் அரசுக்கு எதிராக துவேசத்தை தமிழ் ஆட்களிடம் வளர்த்ததில் முக்கியமானவர்.தமிழர்களை கொன்று குவித்த UNP உடன் உறவு வைத்துள்ளார். அரசை சாடுகிறார்.

    இப்படியானவர்களுக்கு மத்தியில் தமிழர்களின் உண்மையான பிரச்சினைகளையும் தேவைகளையும் யார் பிரச்சினையானவர்கள் எப்பதையும் உணர்ந்து உண்மையான ஜனநாயக அரசுக்கு Veno MP வந்திருப்பது புலிகளின் முடிவுக்கு விடப்பட்ட முதல் அடியும் ஆரம்பமுமாகும்.

    Nanry
    From Qatar

    Reply
  • மாற்றுகருத்து
    மாற்றுகருத்து

    விநோதரலிங்கம் தனது கூற்று எப்படி அரசஊடகங்களால் திரிக்கப்பட்டுள்ளதென்பதை பிபிசி தமிழோசைக்கு தன்னிலைவிளக்கம் கொடுத்துள்ளார். உண்மையில் ஆர்வமுள்ளோர் 21.03.09 பிபிசி தமிழோசையை கேளுங்கள்.
    கிலாரி கிளின்டனுடனனா தொலைபேசி உரையாடலை திரித்து வெளியிட்ட சிங்கள ஐனாதிபதியின் ஊடகத்துறைக்கு விநோதரலிங்கம் எம்மாத்திரம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    மாற்றுக்கருத்து விநோதரலிங்கம் இன்று தீபம் தொலைக்காட்சியிலும் தொலைபேசியில் பேட்டி கொடுத்திருந்தார். அதிலும் அவர் அரசினால் நடாத்தப்படும் முகாங்களில் மக்கள் போர்ப் பயமின்றி நிம்மதியாகவிருப்பதாகத் தான் கூறினார். அதே நேரம் அரசு மக்களுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென்று மக்கள் தெரிவித்ததையும் தெரிவித்தார். இதில் மக்கள் நிம்மதியாக இருக்கின்றார்கள் என்ற வாசகம் தானே உங்களைப் போன்றவர்களைப் பாடாய்ப் படுத்துகின்றதென்ற உண்மையும் எமக்குப் புரியுது.

    புலி ஆதரவாளர்கள் கிலாரி – அடல் சந்திப்பு என்று நடக்காத சந்திப்பையே நடந்ததாக பீலா விடும் போது, சிங்கள அரசு விநோதரலிங்கத்தின் செவ்வியை தனக்கு ஆதரவாக பிரசாரப்படுத்த முயலும் தான். ஆனால் எவர் என்ன பீலா விட்டாலும் மக்கள் தெளிவாகவே உள்ளார்கள்.

    Reply
  • selva
    selva

    திரு கஜேந்திரன் அவர்களிடம் ஒரு சிறு மனித நேய வேண்டுகோள்

    வன்னி சிறு நிலப்பரப்பில் இன்று எம்மவர் இன்றுமில்லாத அளவிற்கு வேதனைகளை அனுபவிக்கும் அவலவாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். சிங்கள காட்டு மிராண்டி இராணுவத்தரப்பினர் ஒரு புறமாகவும் புலித்தரப்பினர் மறுபுறமாகவும் நின்று நடாத்தும் போரில்; அப்பாவிகளான எம்மக்கள் சிக்குண்டு நாளாந்தம் நுhற்றுக்கணக்கில் மடிந்தவண்ணம் இருக்கின்றார்கள். அரச தரப்பினர் தாம் மக்களை காப்போம் எனக்கூறிக் கொண்டு சிலபிரதேசங்களை யுத்த சூனியப் பிரதேசங்களாக பிரகடனப்படுத்தி விட்டு அப்பிரதேசத்தில் ஒதுங்கி வாழும் எம் மக்கள் மீது இராட்சதக் குண்டுகளை வீசி அல்லல்படும் மக்களை படுகொலை செய்தும் அங்கவீனர்களாக்கியும் தமிழின சுத்திகரிப்பினை மிக திட்டமிட்டமுறையில் கைங்கரியமாக சொய்து கொண்டு வருகின்றனர் மறுபுறத்தில் புலித்தரப்பினர் ‘தலைவைர காப்போம்” என வீரமுழக்கமிட்டுக் கொண்டு மக்களை மனிதக் கேடயங்களாக வைத்துக் கொண்டு அவர்களது அளவுதொகையற்ற அழிவினை உலகுக்கு காட்டி அனுதாபத்தினை பெற்று தலைவரை காக்க முற்படுகின்றனர். இவர்களது கபட தந்திரோபாயமான செயல்பாட்டில் ஒன்றாக கடந்த சில நாட்களாக இப்பிரதேசத்தில் கற்பிணித்தாய்மார்களினதும் சிறார்களினதும் சிதைந்த உடல்களை வியாபாரப் பொருட்களாக்கி சா;வதேச அனுதாபத்தினை திரட்டுவதற்காக ஊடங்களில் வெளியிட்டு வருகின்றார்கள். செல்விழுந்து வெடித்ததால் வயிறு கிழிந்து சிசுவின் கால் வெளியே வந்த நிலையில் ஒருபடமும்> தாயின் வயிற்றில் இருந்த பொழுதே சிசுவின் தொடையில் குண்டு பாய்ந்த காயத்துடன் இன்னொரு படமும் கற்பிணித்தாயின் வியிற்றில் செல்விழுந்ததால் வயிறு சிதறியதுடன் பிள்ளையும் சிதறியபடியே எடுக்கப்பட்ட புகைப்படங்களையும்> படக்காட்சிகயைும் இன்று உள்ள ஊடகங்கள் பக்கம் பக்கமாக பிரசுரித்து சா;வதேச அனுதாபத்தை தேடி தலைவரை காப்பாற்ற கங்கணம் கட்டி நிற்கின்றார்கள். நான் மனிதானாக நின்று கேட்கின்றேன் அப்பிரதேசத்தில் ஐ.சி.ஆர்.சி அங்கத்துவர் சிலர் இன்றும் உள்ளனரே அவர்களது மனிதாபிமானம் எங்கே போனது? ஏன் இங்கு வேறு மனிதநேயம் படைத்தவர்கள் இருக்கவில்லையா? எல்லோருமே பிணம்தின்னி பிசாசுகளா? என் இவர்களால் இவ்வாறான நிறைமாத கற்பிணித்தாய்மார்களையும் குழந்தைகள் சிறுவர்களையும் பாதுகாப்பாக காயப்பட்ட நோயாளிகளுடன் முன்னுரிமை கொடுத்து இவர்களால் அனுப்பி வைக்க முடியுவில்லை?. இவர்களது தார்மீகப் பொறுப்ப எங்கே போனது? இல்லாவிட்டால் இறந்த நிறைமாதக் கற்பிணி தாய்மாரின் பிணத்தை சா;வதேசத்திற்கு விற்று தலைவரை காப்பற்றுவதில் அவர்களுக்கும் பங்குண்டு என்று நினைத்தார்களா? இவர்கள் பாதுகாப்பாக அனுப்பப்பட்டிருந்தால் சிசுக்களும் தாய்மார்களும் காப்பற்றப்பட்டிருக்கமாட்டார்களா? நிறைமாதக் கற்பிணித்தாய்மார்களின் பிணங்களை சா;வதேசத்திற்கு காட்டி தமிழீழ அங்கீகாரத்தை பெற்றுத் தருவோம் என்று என்றாவது கூறினார்களா? உங்களிடம் மனிதாபிமானம் இல்லை என தெரிந்து கொண்டும் இயலாமையினால் உங்களிடம் மீண்டும் இரந்து கேட்கின்றேன் இப்பிரதேசத்தில் அல்லல்படும் மக்களில் நிறைமாதக் கற்பிணித்தாய்மார்> குழந்தைகள்> சிறுவர்கள்> இருப்பார்களாக இருந்தால் அவர்களுக்கு மதிப்பளித்து அவர்களை அங்கவீனர்களாக்காமலும் காட்டுமிராண்டி இராணுவத்தின் கொடிய குண்டுகளுக்கு இரையாக்காமலும் சிறுவர்கள்தான் எமது அடுத்த வாரிசுகள் என்பதனை கவத்தில் கொண்டு அவர்களுக்கு ஆறுதல்கூறி பாதுகாப்பாக அனுப்பி வையுங்கள். அடுத்த சந்ததியினராவது எம்மக்களின் உரிமையை வென்றெடுக்கட்டும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    சம்பந்தர் மக்கள் பற்றி சிந்திக்க தொடங்கி விட்டாராம். அதனால் அரசுடனோ அல்லது சர்வதேசத்துடனோ அவர் புலியின் அனுமதி இன்றியே பேசலாமென கருதபடுகிறது. அரசும் சர்வதேசத்துக்கு ஏதாவது சாட்டு சொல்ல சமபந்தர்உடன் பேச விரும்புகிறது. ஆனால் அரசு சம்பந்தருடன்
    பேசுவதை மகிந்தாவின் கொத்தடிமைகள் விரும்ப்பவில்லை. காரனம் சம்பந்தர் புலியை விட்டு வந்தால் கருனாபோல் அரசு பதவி கொடுத்து அழகு பார்க்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இருப்பினும் சம்பந்தரை மிரட்டவும் தற்ப்போது புலிகள் விரும்பவில்லை. சம்பந்தருக்கு பதிலாய்
    சிவாஜிலிங்கத்தை முன்னுக்கு கொண்டுவர புலி ஆதரவாளர்கள் முயற்ச்சி நடக்குது. ஆனால் அந்த மனுஸன் வந்து அடஙாபிடாரிதனமாய் கதைத்ததால் கப்பலும் இழிபறியில் இருப்பதாக குட்டி புலிகள் முனு முனுப்பது கேக்கிறது. எது எப்படியோ ஒரு அனுபவ அரசியல்வாதி புலியை விட்டு மக்கள் பற்றி சிந்திப்பது வரவேற்க்க தக்கதுதானே.

    Reply
  • மறவன்
    மறவன்

    செல்வா அவர்களே வேடிக்கையாக இருக்கன்றது உங்கள் கேள்வி? சிறுவர்கள் குழந்தைகள் கர்ப்பிணித்தாய்மார்கள் காயப்பட்டடோர் வயோதிபர் என அனுப்பினால் நாம் யாருக்காக போராடவேண்டும் சிறுவர்களை அனுப்பினால் எமது படை என்னவாகும்.தலைவரை காப்பாது எப்படி? அழிவில்லாமல் தமிழீழம் மலருமா?

    Reply
  • sapi
    sapi

    TNA boycott meeting with President

    TNA leader R. Sampanthan says his party has decided not to meet the President for talks until the military operations in the North are suspended.

    thanks daily mirror

    Reply