தாமரை கோபுரத்திற்கான கட்டுமான செலவு எவ்வளவு – RTI கோரிக்கையால் வெளிவந்த தகவல் !

கொழும்பு தாமரை கோபுரத்திற்காக 16 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ட்ரான்ஸ்பரன்சி
இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) தெரிவித்துள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRCSL) பகிர்ந்து கொண்ட தகவலைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய திட்டத்தின் செலவு விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமை (RTI ) கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இந்த தகவலை அளித்துள்ளது.

TRCSL வெளியிட்டுள்ள தகவலின்படி, தாமரை கோபுரத்தின் மொத்த செலவு 2021 டிசம்பர் 31 வரையிலான காலத்தை உள்ளடக்கியது.

இதன்மூலம், 113,600,000 அமெரிக்க டொலர்கள் கட்டுமான செலவுகளுக்காக செலவிடப்பட்டுள்ளது,
அதில் ஆலோசனைக் கட்டணமாக 337,485,020 அமெரிக்க டொலர்கள் மற்றும் 222,369,357 அமெரிக்க டொலர்கள் கடன் உறுதி மற்றும் நிர்வாகக் கட்டணமாக கணக்கிடப்பட்டுள்ளது.

மேலதிக செலவுகளுக்காக மொத்தம் ரூ. 344,215,750 செலவிடப்பட்டுள்ளது, இதில் நீர் மற்றும் மின்சாரம் வழங்குவதற்கான செலவுகள் அடங்குகின்றன.

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் (UDA) நிலத்திற்கான கட்டணமாக ரூபா 2,250,000,000 மற்றும் காப்பீட்டுக் கட்டணமாக 8,665,612 அமெரிக்க டொலர்களும் செலுத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் 31, 2021 இன் படி கொழும்பு தாமரை கோபுரத்தின் மொத்த செலவின விவரங்கள் அடங்கிய TRCSL ஆவணம் https://www.rtiwatch.lk/requests/?drawer1=TRCSL*LOTUSTOWER என வெளியிடப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *