அண்மையில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு இலங்கை வருகை தந்திருந்ததுடன் இலங்கையின் முக்கியமான தலைவர்களுடன் கலந்துரையாடல்களையும் அவர் மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கையை வந்தடைந்துள்ளார்.
ரொபர்ட் கப்ரோத்தின் வருகை குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார மீட்சிக்கான முன்னோக்கி வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அரசாங்கம் மற்றும் பொருளாதார நிபுணர்களை அவர் இந்த விஜயத்தின்போது சந்திக்கவுள்ளார்.