‘வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்று சேர யாரும் முன்வருவதில்லை. எல்லோரும் மற்றவர்களை குறை கூறுவதில்தான் அக்கறையுடன் இருக்கிறார்கள்’ உதயராஜா சிறி ரெலொ நேர்காணல் : த ஜெயபாலன்

Uthayarajah_Sri_TELOபாலசிங்கம் உதயராஜா – சிறி ரெலோவின் செயலாளர் நாயகம். ஜரோப்பாவிலிருந்து 2004ல் மீண்டும் இலங்கை சென்று சிறீ ரெலோவை ஆரம்பித்தார். மார்ச் 10 அன்று இவர் வவுனியாவில் தனது அலுவலகத்தில் இருந்த வேளை தொலைபேசியூடாக மேற்கொள்ளப்பட்ட செவ்வி இங்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தேசம்நெற்: சிறீ ரெலோவை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் தோன்றியது?

உதயன்: புலிகள் ரிஎன்ஏ யிலுள்ள அமைப்புகளை தனது ஆதரவு அமைப்பாக செயற்படுத்தத் தொடங்கியபோது புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தனித்துப் போய்விட்டார்கள். இது ரிஎன்ஏயிலுள்ள எல்லா அமைப்பினர்க்கும் பொருந்தும். ரெலோ ஈபிஆர்எல்எவ் ரியுஎல்எவ் போன்ற தலைவர்களை கூப்பிட்டு புலிகள் கதைத்துவிட்டு கடந்தகால பிரச்சினைகளுக்கு எவ்வித பதிலும் இல்லாமல் மறைத்துவிட்டு தங்களுடன் சேர்ந்து வேலை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்பு நாங்கள் – ரெலோவில் புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள்- ஒன்றாக தனித்து செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

புலிகள் தமக்கு ஆதரவளித்த இயக்கங்களை தமக்காக செயற்பட வைத்துவிட்டனர். எமது தலைவரையும் 300 போராளிகளையும் கொன்ற புலிகள் தற்போதய தலைமையை கூப்பிட்டு கதைத்து தமக்காக பேச வைத்துள்ளார்கள். இதேபோல ஈபிஆர்எல்எவ் இலும் நடந்துள்ளது.

நாங்கள் ரெலோவின் தனித்துவத்தையும் விட்டுக் கொடுக்க முடியாது என்பதற்காகவும் சிறீ ரெலோவை ஆரம்பித்தோம். இதேபோல நாபா ஈபிஆர்எல்எப் உருவாக்கப்பட்டுளளது.

தேசம்நெற்: இப்போது உங்கள் சிறீ ரெலோவில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்? எங்கெங்கே உங்கள் அலுவலகங்கள் செயற்ப்படுகிறது?

உதயன்: முழுநேர அங்கத்தவர்களாக 250 பேர் மட்டிலும் வட – கிழக்கு மாகாணங்கள் எல்லாவற்றிலம் செயற்ப்படுகின்றோம்.

தேசம்நெற்: உங்களுக்கான பாதுகாப்பு விடயங்களை யார் செய்து கொள்கிறார்கள்?

உதயன்: எல்லா முகாம்களுக்கும் பொலீசார் பாதுகாப்பு தருகிறார்கள் வவுனியாவில் யாழ்பாணத்தில் மட்டக்களப்பில் கொழும்பிலும் பொலீஸ் பாதுகாப்பு அரசினால் தரப்பட்டுள்ளது.

தேசம்நெற்: இன்று இரண்டு ரெலோ இயங்குகிறது. ஒன்று புலிகளுடனும் மற்றையது அரசடனும் சேர்ந்து இயங்குகிறது. இதில் என்ன தனித்துவம் கொள்கை உள்ளது?

உதயன்: ரெலோவின் முக்கிய உறுப்பினர்கள் ரெலோ என்று இருந்தால் கூட நல்லது ஆனால் அப்படி இல்லை அவர்கள் பல காலமாக ரெலோ என்று அறிக்கை விடுவதில்லை அவர்கள் புலி சார்பான பிரச்சாரங்களையே செய்கிறார்கள்.

தேசம்நெற்: இன்றைய காலத்தில் அப்படி ஒரு பிரச்சாரம் தேவையா? ரெலோ ஈபிஆர்எல்எப் என்று கட்சி அரசியல் தேவையா? மக்கள் தேவைகள் பற்றி மக்கள் சார் அரசியல் தானே பேச வேண்டும். ஏன் நீங்கள் கட்சி அரசியல் பற்றி கதைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

உதயன்: மக்கள் கட்சி என்று ஒன்று இல்லையே. புலிகள் தாங்களும் மாவீரர்களும் பற்றித்தான் கதைக்கிறார்களே அல்லாமல் இதில் மக்கள் சம்பந்தப்படவில்லை. மக்கள் சார்ந்த நடவடிக்கைகள் என்று புலிகள் சொல்வதற்கு எதுவுமில்லை. புலிகள் கடற்புலிகள் ஆகாயப் புலிகள் என்று சொல்லுகினமே தவிர மக்களின் தேவைக்கான புலிகள் என்று ஒன்று இல்லைத்தானே?

புலிகளால் பாதிக்கப்பட்டோம் என்பது இரண்டாவது தமிழ்பேசும் மக்களின் உரிமைகள் என்று யார் பேசுகிறார்கள்.

தேசம்நெற்: நீங்கள் என்ன மக்கள் வேலைகள் செய்கிறீர்கள்? மக்கள் சார்பான என்ன கொள்கைகள் வைத்திருக்கிறீர்கள்? மக்கள் தொடர்பாக என்ன சேவைகள் செயற்ப்பாடுகள் செய்கின்றீர்கள்?

உதயன்: நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. மக்களுக்கான சேவைகளை செய்யும் பணியாளர்களாக இருக்கிறோம்.

தேசம்நெற்: அதைத்தான் கேட்கிறேன். நீங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

உதயன்: இன்று புலிகள் பிரதேசத்திலிருந்து வரும் மக்களுக்கு என்ன செய்யலாம். எப்படி உதவலாம் என்று அரசுடன் பேசுகிறோம். இது பற்றி அரச தரப்பினரிடமும் மற்றவர்களிடமும் பேசுகிறோம்.

வன்னியிலிருந்து வரும் மக்களின் பாதுகாப்பும், அப்படி வந்து சேர்ந்த மக்களின் குடும்பங்கள் பிரிந்திருப்பதையும் சுட்டிக்காட்டி ஒன்றுபடுத்த வேண்டும் என்று அரசிடம் கேட்டுள்ளோம்.

உதாரணமாக வன்னியிலிருந்து தப்பி வந்த மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருக்கும் பட்சத்தில் அச்செய்தி அறிந்து ஏனையவர்களும் புலிகளின் கட்டுப்பாடடுப் பகுதிகளை மீறி வெளியேறுவர்.

தேசம்நெற்: ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டை மீறி வரும் மக்களை ஆயுதக் குழுக்கள் துன்புறுத்துகிறார்கள் என்று பல்வேறு செய்திகள் வெளிவருகிறது.

உதயன்: ஓம்

தேசம்நெற்: ஆப்படியாயின் வன்னியிலிருந்து வெளியேறும் மக்கள் யாரை நம்புவது? புலிகளையா? அரசாங்கத்தையா? ஆயுதக் குழுக்களையா? எல்லோரும் மக்களுக்கு எதிராகத்தானே செயற்ப்படுகிறார்கள்?

உதயன்: அது சரி அப்படியான நிலையில்த்தான் வன்னி மக்கள் இருக்கிறார்கள். உடைத்துக் கொண்டு போவதா அல்லது இப்படியே இருந்து சாவதா? இங்கே வவுனியாவில் ஆட்களை கடத்துகிறார்கள் துன்புறுத்துகிறார்கள் என்ற செய்தி அவர்களை அடையத்தான் செய்யும்.

தேசம்நெற்: இவற்றை தடுத்து நிறுத்த நீங்கள் சிறீ ரெலோ அல்லது மற்ற அமைப்புக்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

உதயன்: மற்றவர்களைப் பற்றி சொல்ல முடியாது. ஆனால் புலிகள் வன்னியில் மோசமான பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள் வன்னியில் இராணுவம் பெண்களை கற்பழிக்கிறது கொடுமை செய்கிறது என பிரச்சாரம் செய்கிறார்கள்.

தேசம்நெற்: அண்மையில் உங்கள் அமைப்பு உறுப்பினர்கள் கூட கொல்லப்பட்டு உள்ளனர் அல்லவா?

உதயன்: ஓம்

தேசம்நெற்: இது சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது?

உதயன்: இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அமைப்புடன் கதைக்கப்பட்டுள்ளது அதற்கு பதில் கிடைக்குமென நம்பவில்லை. மக்களுக்கு தெரியும் யாரால் செய்யப்பட்டுள்ளது என்று.

தேசம்நெற்: ஒரு அரசியல் குழுவாக செயற்ப்படும் உங்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் ஒரு சாதாரண மகனுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது?

உதயன்: நான் இதைத்தான் அரசுக்கும் எடுத்து சொல்லியுள்ளேன்.

தேசம்நெற்: அப்படியாயின் நீங்கள் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை எனச் சொல்கின்றீர்கள்?

உதயன்: மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே புலிகளின் பிரதேசத்திலுள்ள மக்கள் வெளியேற முற்படுவர் என்பதே எனது கருத்து.

தேசம்நெற்: இப்போது  உங்கள் அமைப்பின் மீதும் மக்கள் விரோதச் செயற்ப்பாடுகள் சம்பந்தமாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளதே?

உதயன்: கடந்த வாரம் நெருப்பு இணையத் தளத்தில் வந்த செய்தியும் இது பற்றியும் நாங்கள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளோம். மக்களைப் பொறுத்தவரையில் எல்லோருக்கும் தெரியும் யார் இதை செய்திருக்கின்றார்கள் என்று.

தேசம்நெற்: தற்போது வவுனியாவில் உங்களுக்கும் புளொட்டுக்கும் பல முரண்பாடுகள் வளர்ந்துள்ளது. அண்மையில் உங்களுடைய உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டும் உள்ளனர். இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

உதயன்: இது பற்றி புளோட் சித்தார்த்தனுடன் கதைத்து உள்ளோம். அவர் இது தொடர்பாக தனது தோழர்களுடன் கதைத்து விட்டு பதில் தருவதாக கூறியுள்ளார். அப்படித் தவறு நடைபெற்றால் அவர்களுக்குரிய தண்டனைகள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

தேசம்நெற்: நீங்கள் ஈபிடிபி கட்சியுடன் இணைந்து செயற்ப்படுவதாக சொல்லப்படுகிறது. இது பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?

உதயன்: ஈபிடிபி யுடன் போதிய நட்புறவு உள்ளது. அவர்கள் ஈபிடிபி நாங்கள் ரெலோ.

தேசம்நெற்: ஈபிடிபியுடன் சேர்ந்து இயங்குவது வேலை செய்வது தேர்தல்களை ஒன்றாக சந்திப்பது சம்பந்தமான வாய்ப்புக்கள் உண்டா?

உதயன்: இது சம்பந்தமாக பேசுகிறோம். எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து பேசி முடிவுகள் எடுப்போம்.

தேசம்நெற்: உங்கள் அமைப்பு சார்பான பொறுப்புக்களில் உள்ளவர்கள் சம்பந்தமாக சொல்ல முடியுமா?

உதயன்: ஒழுங்கமைப்பாளரும் பேச்சாளரும் திரு அபுயூசப் இங்கு என்னுடன் உள்ளார்

தேசம்நெற்: எனைய மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா?

உதயன்: வவுனியா மாவட்ட பொறுப்பாளர் திரு அகிலன்
யாழ் மாவட்டப் பொறுப்பாளர் திரு தாஸ்
திருகோணமலைப் பொறுப்பாளர் திரு பரமேஸ்வரன்
மட்டக்களப்பு பொறுப்பாளர் திரு நாதன்
மன்னார் பொறுப்பாளர் திரு சுதன்

தேசம்நெற்: எப்ப அடுத்த தேர்தல் வரும் என எதிர்பார்க்கிறீர்கள்?

அடுத்த பாராளுமன்ற கூட்டத் தொடரில் இது பற்றி தெரியவரும் என எதிர்பார்க்கிறோம்?

தேசம்நெற்: நீங்களும் உங்கள் கட்சியும் தேர்தலில் பங்கெடுப்பீர்களா?

உதயன்:  நிச்சயமாக பங்கேடுப்போம். கூட்டாக செயற்ப்படுவது சம்பந்தமாக யோசித்துக் கொண்டிருக்கிறோம். முடிவு எடுக்கவில்லை. மற்றய கட்சிகளுடனும் அரசடனும் கதைத்துள்ளோம்.

தேசம்நெற்: உங்கள் சிறீரெலோ கட்சி அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையாளரிடம் பதிவு செய்யப்பட்டுவிட்டதா?

உதயன்: ஓம்

தேசம்நெற்: இன்று இலங்கை அரசு தமிழ்பேசும் மக்கள் மத்தியில் பல்வேறு முரண்பாடுகளை ஏற்ப்படுத்தியுள்ளது. கிழக்கில் கருணா – பிள்ளையான் மற்றும் டக்ளஸ் என்று பிரித்து அரச பிரித்தாளும் தந்திரத்தை வைத்திருக்கிறது. இந்த சிறீரெலோவைக் கூட உருவாக்கிய விடயம் அப்படித்தான் என்று பார்க்கப்பட முடியும்தானே!

உதயன்: நிச்சயமாக இல்லை. நாங்கள் மட்டுமல்ல மலையக கட்சிகள், ஈபிஆர்எல்எப் போன்ற பல கட்சிகள் இப்படித்தான் உடைந்துள்ளது. இது அரசு உருவாக்குகிறது என்று சொல்ல முடியாது.

தேசம்நெற்: நீங்கள் சிறீரெலோ அரசிடம் அரசியல்த் தீர்வை முன்வைக்குமாறு அழுத்தங்களை கொடுக்கிறீர்களா?

உதயன்: நிச்சயமாக அது மட்டுமல்ல ஜனநாயக நடைமுறைகளையும் செயற்ப்படுத்துமாறும் கேட்டுள்ளோம்.

தேசம்நெற்: இந்த அரசியல்த் தீர்வு சம்பந்தமாக அரசு எல்லா கட்சிகளையும் கூப்பிட்டு ஒரு சந்திப்பை நடாத்தியதா?

உதயன்: இல்லை நடாத்துவதாக சொல்லியுள்ளது.

தேசம்நெற்: வன்னியிலிருந்து வெளிவரும் தமிழ் மக்களின் பாதுகாப்பு சம்பந்தமாக அரசு ஏன் தன்னுடன் இயங்கும் தமிழ் அமைப்புகளிடம் கூடிப் பேசவில்லை?

உதயன்: இல்லை புலிகள் கட்டவிழ்த்து விடும் பொய்ப் பிரச்சாரங்கள் அதிகம். பெண்களைக் காணவில்லை, கொலை செய்யப்பட்டு உள்ளனர் இப்படி பல. பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர் என்பது உண்மை.

தேசம்நெற்: ஆனால் அரசாங்கம் கிட்டத்தட்ட நாஜி முகாம்கள் வைத்திருந்தது போன்று ஒன்றை திட்டமிட்டு செயற்ப்படுத்துகிறது. இதில் குடும்பங்களையும் பிரித்து வைத்திருக்கிறது. உறவினர்கள் பார்வையிடவும் தடை விதித்து இருக்கிறது.

உதயன்: புலிகளும் மக்களோடு மக்ளாக வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களை அடையாளப்படுத்துவது சம்பந்தமாகவும் பெற்றோருக்கு தெரியாமலே பிள்ளைகள் புலிகளின் உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். இதனாலேயே சில பெற்றோர்களையும் பிள்ளைகளையும் இராணுவம் பிரித்து வைத்துள்ளது. புலிகளில் இப்படியான பல நிலைமைகள் உண்டு.

தேசம்நெற்: தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டுமுன்னணி உருவாக்கும் வாய்ப்புக்கள் உண்டா?

உதயன்: இது பற்றி எல்லோரிடமும் கதைத்துள்ளோம். புளொட் சித்தார்த்தன், கூட்டணி ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எப், கிழக்கு தலைவர்கள் எல்லோரிடமும் கதைத்த போதும் யாரும் முழுமனதுடன் செயற்ப்பட முன்வருவதாக தெரியவில்லை. எல்லோரும் தங்கள் தங்கள் அமைப்புக்களின் திட்டங்கள் பற்றி கதைக்கிறார்களே அன்றி ஒன்னிணைவு பற்றி கதைக்கிறார்கள் இல்லை.

தேசம்நெற்: மக்கள் நலன்தான் இந்தக் கட்சிகளுக்கு முக்கியம் என்றால் ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்று சேரலாம் அல்லவா? ஏன் ஒன்று சேர முடியாதுள்ளது?

உதயன்: இதற்கு யாரும் முன்வருவதில்லை என்றே சொல்லலாம். எல்லோரும் மற்றவர்களை குறை கூறுவதில்தான் அக்கறையுடன் இருக்கிறார்கள் எம்மிடையே ஒற்றுமையின்மையே முக்கிய காரணமாகும். இன்றய காலகட்டத்தில் தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்தால் ஒரு முக்கிய திருப்பு முனையாக அமையும். பல விடயங்களைச் சாதிக்கலாம்.

தேசம்நெற்: இந்த மகிந்த அரசு யுத்தத்தில் வெற்றி பெற்றுள்ளது. இவ் யுத்த முடிவில் ஒரு அரசியல்த் தீர்வை முன்வைக்கும் என்று நம்புகிறீர்களா?

உதயன்: எல்லா தரப்பினரும் இது நடக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். நாமும் எதிர்பார்கிறோம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 Comments

  • chandran.raja
    chandran.raja

    முடியாததுதென்று ஒன்றில்லை. முற்றுமுழுதாக ஆயுங்களை நிராகரியுங்கள். கால் நுhற்றாண்டுகளாக தமிழ்மக்கள் பட்ட துன்பங்களை மனதில் நிறுத்துங்கள். அவர்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பதை மட்டும் மனதில் எண்ணிக் கொள்ளுங்கள். ஜனநாயக வழிக்குட்பட்டதே போராட்டம் என்பதை மறந்துவிடாதீர்கள். இனவெறிகருத்தும் மதவெறிகருத்தும் ஆரொக்கியமான அரசியலுக்கு உதவாதவை. பேரினவாதிகள் என்று சொல்லி முழு சிங்களமக்களையும் அலட்சியப்படுத்தாதீர்கள்
    தமிழ்மக்களைவிட சிங்களமக்களிடையே தான் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து ஒரு அரசியல் கலாச்சாரத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். வடக்கும்-கிழக்கிற்கும் அவர்களை அடிக்கடி வரவழையுங்கள். கூட்டங்கள் கலந்துரையாடல்களை நடத்துங்கள். ஊர்பூரா சுற்றிக்காட்டுங்கள். இதன் மூலம் நாம் இலங்கையர் என்ற மனவுணர்வை வளர்த்துக் கொள்ளலாம். போரின் கொடுமையும் பொருள் உயிர் இழப்புகளை அடிக்கடி நினைவு படுத்திக்கொள்ளுங்கள். இது சினிமாவசனம் அல்ல உண்மையில் வானமும் வசப்படும்.

    Reply
  • ilankovan
    ilankovan

    //முடியாததுதென்று ஒன்றில்லை. முற்றுமுழுதாக ஆயுங்களை நிராகரியுங்கள்//- சந்திரன் ராசா
    மகிந்தவைக் கேளுங்கள் ஆயுதங்களை நிராகரிக்கச் சொல்லி!
    இனப்படுகொலைக்குப் பயன்படும் ஆயுதங்களை நியாயப்படுத்தும் நீங்கள் ஒருமைப்பாட்டைப் பற்றியா பேசுகிறீர்கள்??

    Reply
  • BC
    BC

    சந்திரன் ராசா எப்போதும் இனம் மதம் கடந்த ஒருமைப்பாட்டுக்கு ஆதரவாகவே எழுதிவந்துள்ளார்.

    Reply
  • பல்லி
    பல்லி

    ஒரு அரசும் பயஙரவாத அமைப்பும் ஒன்றல்ல.

    Reply
  • பகீ
    பகீ

    பல்லி, …ஒரு அரசும் பயஙரவாத அமைப்பும் ஒன்றல்ல…

    பல அரசுகள் ‘அரச பயங்கரவாதி’ களாக குற்றம் சாட்டப்பட்டிருப்பது அறியவில்லையா?

    அமெரிக்கா – இரண்டாம் உலக யுத்தத்தில் அணுக்குண்டு வீசியமை
    இங்கிலாந்து – அயர்லாந்து விடுதலைப் போருக்கெதிரான குழுக்களிடன் சேர்ந்தியங்கியமை.
    பிரான்ஸ் – கிரீன் பீஸ் (Green Peace) கப்பலை நியூசிலாந்து துறைமுகத்தில் வைத்து தகர்த்தமை (1980 களில்)
    ஸ்பெயின் – ’எற்றா’ அமைப்புக்கெதிராக கொலைக்கு உதவியமை.
    லிபியா – பேர்லின் டிஸ்கோ, லொக்கபி விமானக் குண்டு போன்றவற்றுக்காக.
    இரான் – அஸ்ரேலுக்கெதிராக ஹிஸ்புல்லா, ஹமாஸ் ஆகிய அமைப்புகளுக்குதவி செய்வது.

    இப்பட்டியலில் இன்னும் பல நாடுகள் உள்ளன. விடுதலை அமைப்புகளையும் அம்மக்கலையும் ‘பயங்கரவாதி’ பெயர் சொல்லி அழைக்கும் நாடுகளே அப்பட்டியலில் இருந்தவை தான். ஆனால் துரதிஷ்டம் அவ்வமைப்புகள் விடுதலை பெற்றபின் தலைகீழாக மாறுவது!

    Reply
  • BC
    BC

    //பகீ-பல அரசுகள் ‘அரச பயங்கரவாதி’ களாக குற்றம் சாட்டப்பட்டிருப்பது அறியவில்லையா?//
    புலி ஆதரவாளர்கள் அமெரிக்காவை உலக பயங்கரவாதி என்றதையும் இப்போ எங்களை காப்பாற்று என்று கேட்பதையும் அறிந்துள்ளோம்.

    Reply
  • santhanam
    santhanam

    எல்லா தமிழ்ஈழ குழுக்களும் தமிழனை கொல்லவென்றே பிறந்துள்ளனர்.

    Reply
  • akilan
    akilan

    சந்தானம்
    இயக்கங்கள் வந்ததால் தான் நீர் வெளிநாடு வந்தீர் இல்லை என்றால் உமது நிலமை தெரியும் தானே நான் சொல்லத் தேவையில்லை…..

    Reply
  • santhanam
    santhanam

    ஏன் என்றால் இயக்கம் இல்லாவிட்டால் எமது பரம்பரை காத்துகுடித்துதான் பல100வருடம் வாழ்ந்ததாக கதை அளக்கிறீர் கள்ளனும் கடத்தல்காரனிடம் இருந்து அபகரிக்கபட்டது தான் இயக்கம்:

    Reply
  • பல்லி
    பல்லி

    //மகிந்தவைக் கேளுங்கள் ஆயுதங்களை நிராகரிக்கச் சொல்லி!
    இனப்படுகொலைக்குப் பயன்படும் ஆயுதங்களை நியாயப்படுத்தும் நீங்கள் ஒருமைப்பாட்டைப் பற்றியா பேசுகிறீர்கள்//
    பகீ இதுக்காகதான் நான் அப்படி எழுதினேன். ஆனால் முகத்தில் உள்ள முடிக்கும் தலையில் உள்ள முடிக்கும் உள்ள வேறுபாடு பகீ அளவுக்கு பல்லிக்கு தெரியாவிட்டாலும் ஏதோ தேசத்தில் பின்னோட்டம் விடுமளவுக்கு தெரியுமென நினைக்கிறேன்.

    Reply
  • பல்லி
    பல்லி

    சந்தானம் திருத்தி கொள்ளவும். வளர்க்கபட்டது.

    Reply
  • santhanam
    santhanam

    தரப்படுத்தலிற்கு எதிர்ஆனா போரட்டமாக ஆரம்பித்து கல்வி சமுகத்திடமிருந்து பறிக்கபட்டு…….. கை மாறி இன்று தறிகெட்டு சேடம்இழுத்து கொண்டுள்ளது. அது பல்லி வலுகட்டாயமாக சர்வாதிகாரமாக அபகரிக்கபட்டது. தின்னவேலி வங்கிகொள்ளை முதல் நீர்வேலி வங்கிகொள்ளை வரை கண்ணால் பார்த்தவன்.

    Reply
  • sunthar
    sunthar

    தமிழ் அலை உறவுப்பாலம் நிகழ்ச்சியில் சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (சிறீ-ரெலோ ) தலைவர் உதயன் கலந்து கொள்கிறார்

    கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழொலி வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் இன்று (28.03.2009) ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (சிறீ- ரெலோ) தலைவர் உதயன் அவர்கள் கலந்துகொள்கிறார்.

    நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0033 1 48 35 32 00. டான் தமிழொலி வானொலியை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ரிஆர்ரி தமிழலை வானொலியூடாக கேட்கலாம். ஹொட்பேர்ட் சட்டலைற்றில் ஒலிபரப்பாகும் இந்த வானொலியை,www.trttamilalai.com என்ற இணையத்தளம் ஊடாகவும் கேட்கலாம்.

    இது எப்படி இருக்கு

    Reply