மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்படவிருந்த பொலிஸ் பதிவு தவிர்க்க முடியாத காரணங்களால் நேற்றைய தினம் ரத்துச் செய்யப்பட்டதோடு, இப்பதிவு இன்றைய தினம் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலிருந்து வந்து மேல் மாகாணத்தில் தங்கியிருப்பவர்கள் 21ஆம் திகதி சனிக்கிழமையும், 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் தங்களை பொலிஸில் பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என பொலிஸ் திணைக்களம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவின் பேரில் செயற்பட்ட மக்கள் நேற்று தாம் தங்கியிருந்த பகுதிகளுக்கான பொலிஸ் நிலையங்களுக்கு சென்று பதிவுகளை மேற்கொள்ளவிருந்தனர்.
ஆனால் பொலிஸ் நிலையங்களிலோ பதிவுகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்திருக்கப்படவில்லை. இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகரவிடம் கேட்டபோது,
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து மேல் மாகாணத்தில் தங்கியிருப்பவர்கள் தங்களை பொலிஸில் பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டபோதிலும், தவிர்க்க முடியாத காரணங்களால் நேற்றைய தினம் இப்பதிவு ரத்துச் செய்யப்பட்டது. ஆனால், இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டபடி பதிவுகள் மேற்கொள்ளப்படும். கடந்த ஐந்து வருடங்களுக்குள் வடக்கு கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலிருந்து வந்து மேல் மாகாணத்தில் தங்கியிருப்பவர்கள் பொலிஸ் பதிவுகளை மேற்கொள்ள வேண் டும்.
இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பொலிஸ் பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளமையினால், மக்கள் தமது அடையாளயத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களை கொண்டுச் சென்று பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.