பெண் ஆசிரியர்களுக்கு முகநூல் ஊடாக தெரிவிக்கப்படும் ஆபாசமான கருத்துக்கள் குறித்து தான் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (26) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிலர் தேவையில்லாத பிரச்சினையை எழுப்பியதாலேயே இவ்வாறான விடயங்கள் இங்கு வந்ததாக தெரிவித்த அவர், குறித்த விடயம் தொடர்பில் முடியுமானால் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு செல்லவுள்ளோம். பெண் ஆசிரியைகளுக்கு குறிப்பிட்ட நடத்தை விதிகள் உள்ளன.அதில் ஆடை குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் சேலை அணிவது அவசியம் என்று கூறவில்லை என்றும் தெரிவித்தார்.