சிவஜோதி ஞாபகார்த்த நிகழ்வையொட்டி இலைமறை காயாக, நாளாந்த வாழ்வோடு சேர்ந்து சமூகத்தின் முன்னுதாரணங்களாகவும் வாழ்ந்த, வாழ்கின்ற பத்து பெண் ஆளுமைகள் பற்றிய ஹம்சகௌரி சிவஜோதியின் ‘உறுதிகொண்ட நெஞ்சினாள்’ என்ற நூல் வெளியிடப்பட்டது.
இந்நூலை வளர்ந்துவரும் பெண் ஆளுமைகளே தலைமையேற்று நூலை அறிமுகம் செய்து விமர்சனமும் செய்தமை நிகழ்வுக்கு வந்திருந்த அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்நூலில் பல்துறைசார்ந்த பன்முக ஆளுமைகள் பதிவு செய்யப்பட்டனர்: பெண்ணியம் (செல்வி திருச்சந்திரன்),
கல்வி (ஜெயா மாணிக்கவாசகர், சசிகலா குகமூர்த்தி, வலன்ரீனா இளங்கோவன்),
இலக்கியம் (தாமரைச்செல்வி,), பொறியியல்துறை (பிரேமளா சிவசேகரம்),
கலைத்துறை (பார்வதி சிவபாதம், வலன்ரீனா இளங்கோவன்),
அரசியல், கலை, இலக்கியம் (கலாலக்ஷ்மி தேவராஜா)
விளையாட்டுத் துறை (அகிலத்திருநாயகி சிறிசெயானந்தன்)
இவர்களோடு பொது வாழ்வில் அரசியலில் ஈடுபட்டு இனவெறியர்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு போரடியவர் நாகம்மா செல்லமுத்து என்பதும் குறிப்பிடத்தக்கது.