UNICEF அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, இலங்கையில் ஒவ்வொரு குடும்பங்களிலும் மேற்கொள்ளும் செலவில் 75 சதவீதம் உணவுக்காக செலவிடப்படுகிறது.
அறிக்கையின்படி, ஒருவரின் மாதச் சம்பளம் அல்லது வருமானத்தில் 75 சதவீதம் உணவுக்காகச் செலவிடப்படும்போது, சுகாதாரம் மற்றும் கல்விக்கு மிகக் குறைவாகவே மிஞ்சும்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி 2023 ஆம் ஆண்டு முழுவதும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அடுத்த ஆண்டு 6.2 மில்லியன் இலங்கையர்களுக்கு அவசர மனிதாபிமான உதவி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் 2.9 மில்லியன் குழந்தைகள் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, கடந்த ஒக்டோபர் மாதம் முதல் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை இலங்கையில் உணவுப் பாதுகாப்பு மேலும் மோசமடையக்கூடும் என்றும், எதிர்வரும் மாதங்களில் குழந்தைகளின் போசாக்குக் குறைபாட்டின் நிலைமை மேலும் மோசமடையலாம் என்றும் யுனிசெப் கணித்துள்ளது.