சீரற்ற வானிலையால் 155 க்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ். கெளரிதிலகன் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை வரை கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாக 157 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும், 162 மாடுகள் உயிருக்காக போராடும் நிலையில் சிகிச்சையுடன் கூடிய பாராமரிப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.