உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி, ,ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சுதந்திர லங்கா சபை மற்றும் பல சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்களினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, லக்ஷ்மன் கிரியெல்ல, அனுர பிரியதர்ஷன யாப்பா, ஜீ.எல்.பீரிஸ், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் இந்த மனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.