திருகோணமலையில் 6 வயது சிறுமி ஜூட் ரெஜி வர்ஷா படுகொலை தொடர்பான சந்தேக நபர்கள் சார்பில் எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகக் கூடாது எனக் கோரி திருகோணமலை நகரப் பிரதேசத்தில் ஓரிரு இடங்களில் பதாதைகள் கட்டப்பட்டுள்ளன.
சிறுமி வர்ஷாவின் கொலையை தமிழ் சிங்கள முஸ்லிம் பறங்கியர் ஆகிய சகல இனமக்களும் கண்டிப்பதாக அப்பதாதைகளில் குறிப்பிட்டு கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சார்பில் சடத்தரணிகள் எவரும் ஆஜராகக் கூடாது என்று வலியுறுத்தி கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
vanthiyadevan
wheather karuna or pillaiyan all from ltte orign so we cant expect anything better from them. orae kuddaqil uurina maddaial
பல்லி
அந்த மக்களுடன் பல்லியும் இனைந்து கொள்கிறது.
Rajai
THIS IS VERY GOOD DECISION BY THE PEOPLE , I SALUTE THEM,
chandran.raja
கிழக்குமகாணம் இன்னமும் ஆயுதக்குழுகளால் கட்டுபடுத்தவில்லையென்றால் திருகோணமலை சுகந்திரமாக தாங்கள் எடுக்கும் முடிவுக்கு வந்துவிட்டார்களா? அப்படியென்றால் மக்களின் முடிவை யாம் ஏற்றுக்கொள்வோம். அது மக்களின் முடிவா? பிள்ளையான் முடிவா?
கிழக்குமாகாணத்தை சீரழித்தவர்கள் புலிகளே!
இந்த பிள்ளையான் புலிகளின் பெயரையும் சின்னத்தையும் இதுவரை பெருமையாகவே கொள்ளுகிறார். மக்களின் பெயரை அத்துடன் சேர்த்திருக்கிறார். சட்டம் என்பது மனிதநாகரீகத்தின் தொடர்சியான வளர்ச்சியே இது பலசிறு குறைநிறைகளுடன் அரசாங்கத்திடம் இருக்கிறது. ஆயுதக்குழுக்களுடமும் புலிகளின் முன்னைனால் உறுப்பினர்களிடமும் அறவே இல்லை. சரியோ பிழையோ சட்டத்திற்கு அதாவது முதலாளித்தவ சட்டத்திற்கு மதிப்பளிப்பது வர்ஷாவின் கொலைக்கு நியாயத்தை தேடுபவர்களுடைய கடமையாகும். இல்லையேல் பயங்கரவாதத்திற்கு உதவி புரிந்தவர்களாவோம்.
பல்லி
சந்திர ராஜா இந்த குழந்தையின் சாவிலுமா உம்முடைய சாணக்கியதனம்.
சந்தேக நபர்கள் சார்பில் எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகக் கூடாது –என்பதில் என்னத்தை கண்டு கடுப்படிக்கிறியள்.
பார்த்திபன்
இன்று குரல் கொடுக்கத் தொடங்கிய மக்கள் இதை ஒரு ஆரம்பமாகக் கொண்டு தொடர்ந்து அநியாயங்களை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். மக்கள் சக்திகளைக் கண்டு மனித உலாவரும் மிருகங்கள் தலை குனிய வேண்டும். தங்கள் தவறுகளைத் உணர்ந்து திருந்த முன்வர வேண்டும்.
பகீ
முதளாளித்துவ சட்டமாயினும் தொழிலாளிகள் சட்டமாயினும் எந்த சந்தேக நபருக்கும் சட்டத்தரணி வைத்திருக்கும் உரிம உண்டு! அதைத்தடுப்பது மக்கள் போராட்டம் எனின் …நடக்கட்டும் உங்கள் மக்கள் போராட்டம்!
பார்த்திபன்
//முதளாளித்துவ சட்டமாயினும் தொழிலாளிகள் சட்டமாயினும் எந்த சந்தேக நபருக்கும் சட்டத்தரணி வைத்திருக்கும் உரிம உண்டு! //
பகீ, அதாலை தானோ முன்பு யாழில் ஒரு மலையகச் சிறுமியை வருடக்கணக்காக வைத்துச் சீரழித்த ஒரு பேராசிரியருக்கு ஆதரவாக சில பொதுநலவாதிகள் வாதாட முன் வந்தார்கள்.
chandran.raja
பல்லி உங்கள் பின்னோட்டம் இப்படித்தான் இருக்கும் என கணிப்பீடு செய்திருந்தேன். சந்தேகம் இல்லாமல் நிரூபித்திருக்கிறீர்கள். பிள்ளையான் கருனாவை புலிகளில்லிருந்து விலத்திவந்து ஜனநாயதலைமையை ஏற்படுத்த முயன்றபோது அவர்களை பயங்கரவாதிகள் என நிறுவியதில் புலம்பெயர் நாடுகளில் உங்களுடைய பங்கு அளப்பரியது. நாம்மெல்லாம் அவர்கள் புதுவடிவம் எடுத்தது பற்றி மகிழ்சியடைந்தோம் அவர்களை
உயர்த்தி விடுவதில் உறுதியாகவும் இருந்தோம்.
வர்ஷாவின் கொலையில் பிள்ளையான் உறுப்பினர்கள் சந்தேகம் இல்லாமல் ஈடுபட்டிருக்கிறார்கள். முன்னால் பயங்கரவாதிகள். இது பிள்ளையான்னுக்கு மட்டுமல்லாமல் கருனாவுக்கும் பொருந்தும். வரபோகிற காலங்களே இவற்றை தீர்கமாக முடிவெடுக்கும். வர்ஷாவின் கொலையும் அவள்சாவதற்கு முன்நடந்த சம்பவங்களை வருங்காலத்தில் பிள்ளையானோ இலங்கைஅரசாலே தடுத்து நிறுத்த முடியுமா? அதைநான் நம்பவில்லை. இதை சட்டத்தின் முன்நிறுத்தி உலகத்தின் முன் பகிரங்கப்படுத்தல் வேண்டும்.
பகீ
“…சட்டம் என்பது மனிதநாகரீகத்தின் தொடர்சியான வளர்ச்சியே இது பலசிறு குறைநிறைகளுடன் அரசாங்கத்திடம் இருக்கிறது. ஆயுதக்குழுக்களுடமும் புலிகளின் முன்னைனால் உறுப்பினர்களிடமும் அறவே இல்லை. சரியோ பிழையோ சட்டத்திற்கு அதாவது முதலாளித்தவ சட்டத்திற்கு மதிப்பளிப்பது வர்ஷாவின் கொலைக்கு நியாயத்தை தேடுபவர்களுடைய கடமையாகும். இல்லையேல் பயங்கரவாதத்திற்கு உதவி புரிந்தவர்களாவோம்…….”
பார்த்தீபன், மேலே உள்ளது நான் எழுதவில்லை. எழுதியது யார் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்து கொள்ளவும். பதில் அவருக்கே அன்றி உங்களுக்கல்ல.
அதேபோலவே செம்மணிக் கொலைவழக்கில், திருகோணமலை 5 இளஞர்களின் கொலைவழக்கில், மூதூர் 17 தொண்டர் நிறுவன ஊழியர் கொலவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராணுவத்தினர் சார்பில் ஆஜாராகிய சட்டத்தரணிக்கும் உங்கள் வாதம் பொருந்துமா எனவும் அறியத்தரவும்!
பல்லி
//எந்த சந்தேக நபருக்கும் சட்டத்தரணி வைத்திருக்கும் உரிம உண்டு! //
உன்மைதான் பகீ. மனிதருக்கு தான் இந்த உரிமை. மிக மோசமான மிருகத்துக்கு இது சாத்தியமா?? சாத்திய படனுமா?? ஒரு ஆறு வயது குழந்தையை சின்னாபின்னமாக்கிய கொடூர மிருகம் பற்றிய பிரச்சனை இது. தயவு செய்து உங்கள் வாததிறமையை இதில் காட்ட வேண்டாம். இவர்களுக்கு கொடுக்கபட வேண்டிய தண்டனை ஒரு பாடமாக மற்றவர்களுக்கு அமைய வேண்டும். பகீ பல்லிக்கு கோமாளிதனமாக மட்டும்தான் எழுததெரியும் என எண்ண வேண்டாம். சட்டமும் சிறிது தெரியும் .
பல்லி
சந்திர ராசா பல்லிக்கு உங்களுக்கும் கருத்து முரன்பாடு பெரிதாக இல்லை. தாங்கள் புலியை அழிக்க அரசு அல்லது அரசின் ஆதரவுகள் எது செய்தாலும் சரியென வாதம் செய்கிறீர்கள். ஆனால் பல்லியை பொறுத்த மட்டில் மக்களுக்கு எதிராக நம்ம தேசம் தவறாக செயல்பட்டாலும் எதிர்க்க தயங்க மாட்டேன். ஏனென்றால் மக்களை தவிர (ஈழ) எல்லோருமே திருடர்கள்
பார்த்திபன்
//பகீ on March 26, 2009 3:34 pm
முதளாளித்துவ சட்டமாயினும் தொழிலாளிகள் சட்டமாயினும் எந்த சந்தேக நபருக்கும் சட்டத்தரணி வைத்திருக்கும் உரிம உண்டு! அதைத்தடுப்பது மக்கள் போராட்டம் எனின் …நடக்கட்டும் உங்கள் மக்கள் போராட்டம்!//
பகீ இன்னொருவரின் பதிவை இணைத்து அதற்கு பதில் எழுதும் போது அதனை வேறுபடுத்திக் காட்டி எழுதியிருக்க வேண்டும். மேலே நீங்கள் இணைத்தவாறு இருந்தால் எவரும் அதனைத் தங்கள் பதிவாகவே எடுப்பார்கள். எனவே எனிமேலாவது அவற்றை வேறுபடுத்தி தங்கள் கருத்தினைப் பதியுங்கள். மற்றும்படி அந்தக் கருத்தைத் தந்தவரே எனது வினாவையும் உள் வாங்கட்டும்.
பார்த்திபன்
பல்லி சொல்வதை நானும் வழி மொழிகின்றேன். காரணம் தவறை யார் செய்தாலும் தட்டிக் கேட்க வேண்டும். புலிகளின் தவறுகள் சுட்டிக் காட்டப்படும் அதே வேளை, அரசோ ஏனைய அமைப்பினரோ தவறு செய்தால் அதனைத் தட்டிக் கேட்காது விடுவதும், தவறுக்கு துணை போவதாகவே அமையும். அதனால் கோடாலி போய் கத்தி வந்தது போல், தமிழர்களின் சீரழிவு வாழ்க்கை தொடர்கதையாகவே மாறிவிடும்.
பல்லி
பல்லியும் பார்த்திபனும் சொன்னால் போதாது பார்த்திபன் பலரை, அனைத்து விரோத செயலுக்கும் எதிராக இந்த தேசத்தில் எழுதவைக்க எமது எழுத்துகள் இருக்க வேண்டும். நமக்கெல்லாம் தனிப்பட்ட பகை கிடையாது. அதைவிட தற்ப்போது எந்த பிரச்சயும் (வாழ்க்கை) கிடையாது ஆகவே நாம்தான் தவறு செய்யும் அனைவரையும் சந்திக்கு கொண்டு வரலாம். இது பார்த்திபனுக்கு மட்டுமல்ல சந்திரா முதல் விதுசா வரை .
chandran.raja
என்னைப்பொறுத்த வரை இலங்கையரசும் இன்றைய நிலையில் இறைமையுள்ள பயங்கரவாதிகளே! இந்த இறைமையுள்ள பயங்கரவாதிகளுக்கு உலகத்தில் இன்னமும் அங்கீகாரம் இருக்கிறது. இந்த பயங்கரவாதிகளுக்கு இனியும் இனிமேலும் மூதூர் பதின்ஏழு பொது தொண்டு நிறுவன ஊழியரின் படுகொலைக்கு பதில் சொல்லவேண்டிய தேவை இருக்கிறது. இது அரசாங்கம் செய்யவில்லையென்று நான் சொல்லப் புறப்பட்டால் இந்த வாதத்திற்கு முடிவுவராது. விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். உண்மைகள் வெளிக்கொண்டுவர வேண்டும். அதுவே மக்களுக்கான போராட்டம்மாகவும் இருக்கமுடியும்.
தமிழ்மக்களின் மந்தபுத்தியில் தோன்றிய பயங்கரவாதத்தை எங்கு போய் அம்பலப்படுத்துவது? இவர்களை அடக்க பணியப்பண்ண தமிழ்மக்களால் முடியுமா? அல்லது இந்தியா ஐரோப்பா ஐ.நாடு இராணுவத்தால் முடியுமா? சரியான வழிதான் ஆகுமா? இறைமையுள்ள பயங்கரவாதிகளிடம் இறைமையில்லாத பயங்கரவாதத்தைஅழிப்பதில் வேண்டிநிற்பதில் என்ன தவறு இருக்கிறது?.
BC
சந்திர ராஜா சொல்ல வந்தது சரியோ பிழையோ சட்டத்திற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என்பதே.இதில் என்ன தவறு?
accu
சிறுமி வர்ஷாவின் கடத்தல் மற்றும் கொலையில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அதி உச்ச தண்டனை வழங்கப்படவேண்டும். இதில் மாறுபட்ட கருத்துக் கிடையாது. ஆனால் இச்சம்பவம் தொடர்பாய் பல சந்தேகம் எழுகிறது. சந்தேகநபர்களில் ஒருவர் கொல்லப்பட்டதும் இன்னொருவர் தற்கொலை செய்ததும் பின்னணியில் பெரிய கைகள் இருப்பது போல் தெரிகிறது./ /சந்தேக நபர்கள் சார்பில் எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகக் கூடாது எனக் கோரி திருகோணமலை நகரப் பிரதேசத்தில் ஓரிரு இடங்களில் பதாதைகள் கட்டப்பட்டுள்ளன// இதுகூட மக்கள் நேரடியாக கோசம் எழுப்பவில்லை. தமது அட்டூழியங்களுக்கெல்லாம் மக்களின் பெயர்களை பாவித்ததெல்லாம் எல்லோரும் அறிந்ததே! வழக்குகள் நடக்காவிட்டால் இதில் தொடர்புடைய பலரின் முகங்கள் தெரியாமல் போய்விடலாம். நன்றி.