“ஊடக அறிக்கையின்படி, இந்த நாட்டில் 6.1 மில்லியன் மக்கள் பசியுடன் உள்ளனர். நாடு இப்படிச் சிதைந்து கிடக்கும் போது, கிறிஸ்துமஸ் பண்டிகையை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாது.” என என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
களுத்துறை சிறி குருசா உயர்தரப் பாடசாலையில் நடைபெற்ற “நம்பிக்கையின் பிறப்பு” எனும் கிறிஸ்துமஸ் கரோல் கச்சேரியைத் தொடர்ந்து உரையாற்றிய கர்தினால் மல்கம் ரஞ்சித் இதனை தெரிவித்தார்.
ஆட்சியாளர்களின் மோசமான நடத்தையின் விளைவாகவே இந்த நாட்டிற்கு நேர்ந்துள்ளது. அவர்கள் உணவுக்காக உலக நாடுகளிடம் கையேந்துகிறார்கள். உணவுக்காக அந்நியர்களை அணுகுவதற்கு நாம் வெட்கப்பட வேண்டும்
இந்த ஆண்டு, மாட்டுத் தொழுவத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள். அதுதான் கிறிஸ்துமஸ் நடைபெறும் இடம். உங்கள் அருகில் உள்ள ஒரு ஏழை வீட்டிற்கு உணவு கொடுங்கள். கிறிஸ்துமஸ் என்பது பெறுவதை விட கொடுப்பது. அது தான் கிறிஸ்துவின் செய்தி என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஆதரவற்ற குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த சில திறமையான குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.