தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு அடுத்த வார இறுதியில் முல்லைத்தீவு பிரதேசத்துக்கு 1000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பப்படவுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.பி. திவாரத்ன தெரிவித்தார்.
இவை கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதோடு முல்லைத்தீவு பிரதேசத்துக்கு ஒரே தடவையில் அனுப்பப்படும் ஆகக் கூடுதலான அளவு உணவுப் பொருள் தொகுதி இதுவாகும். இதேவேளை, யாழ். குடாநாட்டுக்கு ஏ-9 வீதி ஊடாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் இரண்டாவது வாகனத் தொடரணி நேற்று கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்றது.
உணவு மற்றும் துணி வகைகள் அடங்கிய 300 மெற்றிக் தொன் அளவான இந்தப் பொருட்கள் 20 லொறிகளில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதற்கு முன்னர் அப்பிரதேசத்துக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பல்லி
பேட்டி தானே 1000 என்ன 10 000 மும் அனுப்பலாம்.
பார்த்திபன்
நீங்கள் 1000 மெ.தொன்னல்ல 10`000 மெ.தொன் உணவுப் பொருட்கள் அனுப்பினாலும் அவையனைத்தும் புலிகளுக்குப் போய் மிஞ்சுவதே மக்களுக்குப் போகும். அந்த வகையில் மக்களுக்கு மிஞ்சுவது என்றுமே கஞ்சி தான்.