ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று முக்கியமான நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன குறிப்பாக பெப்ரவரி நான்காம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.
அதற்கு பின்னராக பெப்ரவரி 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு இருக்கின்ற கலாச்சார மத்திய நிலையத்தில் அதனுடைய ஒரு முழுமையான செயல்பாட்டு நிகழ்வோடு சுதந்திர விழா ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
அதற்கான ஆரம்ப கலந்தரையாடல் இன்று முன்னெடுக்கப்பட்டது , குறிப்பாக கலாச்சார மத்திய நிலைத்தினுடைய ஒரு இணைப்பு முகாமைத்துவ குழுவில் இருக்கிற ஆளுநர் மற்றும் இந்திய துணை தூதுவரத்தின் அதிகாரிகள் மற்றும் யாழ் மாநகர சபையின் அதிகாரிகள் மத்திய கலாச்சார அமைச்சுடன் இணைந்ததாக கலாச்சார மத்திய நிலையத்தில் கலாச்சார நிகழ்வுகளை நடத்துவற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு ஒட்டியதாக சுதந்திரதின நிகழ்வினை முக்கியமாக மாகாண மட்டத்திலே இணைப்பான ஒரு விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதே நேரம், இலங்கையின் 75ஆவது சுதந்திரதினத்துக்கு முன்னதாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவேன் என தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதான விம்பம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் உண்மையிலேயே ஜனாதிபதி ரணில் தீர்வு வழங்குவாரா..? அல்லது முன்பு கிடைத்த அதே ஏமாற்றம் தான் இப்போதும் தமிழ் தரப்புக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பாரக்க வேண்டும்.