மாநாடுகள் முல்லை அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா? : த ஜெயபாலன்

Wanni_Tragedy1.

இந்தத் தலைப்பை இட்டுக் கொண்டு இருக்கையில் வந்த தொலைபேசி அழைப்பு, எனது மனைவியின் மைத்துனியும் அவரது மூன்று குழந்தைகளும் நேற்று (26 மார்ச்) நடந்த செல்வீச்சில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது. பிற்பகல் 3 மணியளவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதல்களில் 20 பேர் உயிரிழந்தனர். புதுமாத்தளன் தற்காலிக மருத்துவமனை அருகே இடம்பெற்ற இத்தாக்குதலிலேயே இத்தாயும் மூன்று குழந்தைகளும் உயிரிழந்தனர். தனது மனைவியையும் குழந்தைகளையும் பறிகொடுத்த இளம் தந்தை விடுதலைப் புலிகளின் ஒரு முன்னாள் போராளி. பதின்மூன்று வயதில் இயக்கத்தில் இணைந்த ஒரு குழந்தைப் போராளி. இன்று உடல்முழுவதும் சன்னங்களுடன் சிகிச்சை பெறவும் வசதியின்றி தெற்காசிய நாடொன்றில் சிறையில் உள்ளார். அவர் சிறையில் இருப்பது மட்டை போட்டல்ல புலத்து மக்கள் பகட்டுக்காகச் சொல்லும் தாயக விடுதலைக்கு உதவியாக இருந்தமைக்காக.

அவர் தனது மனைவியையும் பிள்ளைகளையும் கண்டு மூன்று வருடங்கள் இருக்கும். இளம் குடும்பம். அவர் புலத்தில் உள்ள உறவுகளுடன் கதறி அழுகிறார். இங்குள்ளவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும் வார்த்தைகள் இல்லை. அவரை ஐரோப்பாவிற்கு எடுத்துவிட முடியவில்லையே என்ற குற்ற உணர்வும் நெஞ்சை நெருடியது.

காயப்பட்டதனால் போராட இயலாத நிலையில், தொழில் வாய்ப்புகளும் இல்லாத நிலையில், புலிகளுக்கு வேலை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்திலேயே அவருடைய குடும்பம் தங்கி இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் அவர் வெளிநாடு வர முயற்சித்து இருந்தார். ஆனால் அவ்வளவு தொகையை அவரால் திரட்டிக் கொள்ள முடியவில்லை. அப்படி முடிந்திருந்தால் அவரது மனைவி பிள்ளைகள் வன்னியில் இருந்திருக்க மாட்டார்கள். இந்த யுத்தத்தில் மடிந்திருக்க மாட்டார்கள்.

தான் இளவயதிலேயே இயக்கத்தில் சேர்ந்து கல்வியைப் பாழடித்ததால் தன்னுடைய மகனை படிப்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் அந்த இளம் குடும்பத்தினரிடம் இருந்தது. ஆர்வம் மட்டுமல்ல அவ்வளவு கஸ்டத்திலும் தாயார் தன் மூத்த மகனை புலமைப் பரிசில் பரீட்சையிலும் சித்தி பெற வைத்தார். இது நடந்தது சில மாதங்களுக்கு முன். இன்று அவர்கள் நினைவுகளில் மட்டுமே உள்ளனர்.

இது விதியல்ல. சிங்கள – தமிழ் அரசியல் தலைமைகளின் சதி. அதில் புலத்து தமிழனுக்கும் பங்கு இருக்கின்றது. இப்படி வன்னி மண்ணில் உள்ள ஒவ்வொருவரிடமும் ஒரு உருக்கமான சொந்தக் கதையுண்டு. சொல்வதற்கு நாதியில்லை. அதனால் புலத்த தமிழன் ‘வணங்கா மண்’ என்று றீல் விடுகின்றான்.

ஒவ்வொரு தாயும் தனது குழந்தையை தனது உயிராகவே கருதுகின்றனர். தாய் தந்தையைப் பொறுத்தவரை குழந்தையின் இழப்பு என்பது அவரகளது மரணம் வரை தொடரும் சோகம். ஆனால் அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது ஏற்படுகின்ற வலியின் கொடுமையில் ‘இந்தப் பிள்ளை எனக்கு வேண்டாம்’, ‘இந்தப் பிள்ளையைக் கொல்லுங்கள்’ என்று தாய் கதறுவாள். அவர்களுக்கு உயிருக்கு உத்தரவாதமும் குழந்தை பிறந்ததும் ஏற்படப் போகும் பெருமகிழ்ச்சியும் இருந்தாலும் வலியின் கொடுமை அவர்களை அவ்வாறு சொல்ல வைக்கிறது.

ஆனால் இன்று வன்னி மக்கள் அனுபவிப்பதோ மரணவலி. அடுத்த நிமிடம் உயிருடன் இருப்போமோ என்கிற பயம். அந்த மரண பயத்தில் தப்பி ஓடினாலும் கலைத்து வந்து சுட்டுத் தள்ளுகிறார்கள் பிடித்துவந்து பச்சை மட்டையால் அடிக்கின்றனர் புலிகள். ஒரு புறம் இலங்கை அரச படைகள் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்துகின்றனர். மறுபுறம் புலிகள் தாக்குதல் நடத்தப்படும் பகுதிகளில் இருந்து வன்னி மக்களை வெளியெறவிடாமல் அடைத்து வைத்துள்ளனர். புலிகளதும் புலத்து தமிழர்களதும் தாயக வேள்விக்கு வளர்க்கப்பட்ட விலங்குகள் போல் ஆகிவிட்டனர் வன்னி மக்கள்.

2.

Sambandan R TNA MPஇந்த நிலையை வேதனையை யாரிடம் சொல்ல முடியும். யாருக்கு எடுத்துரைக்க முடியும். ‘விடுதலை புலிகள் பொதுமக்களை பாதுகாப்பான பிரதேசத்திற்கு வெளியேற விடாது தடுக்கின்றனரா’ என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, ”அம்மக்கள் ஏன் வன்னியை விட்டு வெளியேற வேண்டும்? அம்மக்கள் அப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள்” எனப் பதிலளிக்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர் சம்பந்தன். ஆர் சம்பந்தன் சொல்வது போல் அந்த மக்கள் அந்தப் பிரதேசத்தவர்கள் அவர்கள் வெளியேற வேண்டிய அவசியமில்லை என்றே வைத்துக் கொண்டால் அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தகின்ற இந்த 22 தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் எங்கே? அவர்களது குடும்பங்கள் எங்கே? அவர்கள் மட்டும் ஏன் தங்கள் பிரதேசத்தை விட்டு வெளியேறினார்கள்? தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்கள் மிக மோசமான அவலத்தை எதிர்கொண்டுள்ள போது அந்த மக்களை மரணப்பொறியில் விட்டுவிட்டு கொழும்பிலும் இந்தியாவிலும் ஐரோப்பாவின் நகரங்களிலும் இருந்து கொண்டு ‘வன்னி தமிழர்களின் பூர்வீக மண்’, ‘ஏன் மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும்’ என்று கேட்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எந்த அரசியல் அருகதையும் கிடையாது. அந்த ‘மக்களை வெளியேற்ற வேண்டாம்’, ‘வெளியேற வேண்டாம்’ என்று சொல்வதற்கு புலத்துத் தமிழனுக்கும் எந்த அருகதையும் கிடையாது.

‘தெற்கிற்குச் சவப்பெட்டிகள் வரும்’ என்று முட்டாள்தனமாகப் பாராளுமன்றத்தில் பேசுவதும், பொழுது போக்காக பொங்கு தமிழ் வைத்து போர் முழக்கம் செய்வதும், இன்று தமிழ் மக்களை எங்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. புலிகளின் அரசியல் வங்குரோத்துக்கு துணைபோன இவர்களின் அரசியலை என்னவென்பது.

‘தமிழ் சமூகம் படித்த சமூகம். லண்டனிலலும் ஆயிரக் கணக்கான டொக்டர்கள் என்ஜினியர்கள் எக்கவுண்டன்கள் இருக்கிறார்கள். இந்த நாட்டுக்கு தங்கள் சேவையை செய்கிறார்கள்.’ என்று மேரிக் கொல்வினை அழைத்து நடத்திய சந்திப்பில் பிரித்தானிய தமிழர் பேரவை சார்பில் சென் கந்தையா குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்டது. உண்மை. படித்தவர்கள். பிழைக்கத் தெரிந்தவர்கள். லண்டனுக்கும் மேற்கு நாடுகளுக்கும் வந்து தங்கள் சேவையைச் செய்கிறார்கள். தங்கள் பெருந்தன்மையைக் காட்ட ‘வணங்கா மண்’ கப்பல் விடுகிறார்கள். ‘வன்னி மாடுகள்’ படிக்கவில்லை. வசதியும் இல்லை. புலியைக் கட்டிக்கொண்டு மாரடிக்கிறார்கள்.

மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே வருகிறேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிகாந்தா, ஜெயானந்தமூர்த்தி, சிவாஜிலிங்கம் ஆகியோரை தேசம்நெற் க்காக நேர்கண்ட போது கேட்கப்பட்ட பல கேள்விகளில் ஒன்று ‘நீங்கள் ஏன் இந்தப் பாராளுமன்ற உறுப்புரிமையை வைத்துள்ளீர்கள்?’ என்பது. அதற்கு அவர்கள் மூவருமே கிட்டதத்தட்ட ஒரே பதிலையே தெரிவித்தனர். ‘நாங்கள் இந்த உறுப்புரிமையை எடுக்காவிட்டால் அரச ஆதரவாளர்கள் தமிழ் விரோத சக்திகள் அதில் உட்கார்ந்து தமிழ் மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளைச் செய்வார்கள்.’ அப்படியானால் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தப் பாராளுமன்றத்தில் இருந்து தமிழ் மக்களுக்காக இதுவரை சாதித்தது என்ன?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் தீர்வை ஏன் முன்வைக்கவில்லை? ‘புலிகள் தமிழ் மக்களுடைய ஒரு ஆயுத அமைப்பு’ என்று எடுத்துக் கொண்டால் தமிழ் மக்களுடைய அரசியலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏன் முன்னெடுக்கவில்லை. ‘விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் தீர்வுத் திட்டதை முன் வைக்கத் தவறிவிட்டது என்றே நான் கருதுகிறேன். அவ்வாறான ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்காதது மிகப்பெரிய தவறு என்றே நான் கருதுகிறேன்’, என்று சிவாஜிலிங்கம் தேசம்நெற் க்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்து இருந்தார். இந்தத் தவறிற்கு வன்னி மக்கள் கொடுத்துக் கொண்டுள்ள விலை மிக மிக அதிகம். அது மட்டுமல்ல தமிழ் அரசியல் தலைமைகள் விட்ட வரலாற்றுத் தவறுகள் என்று பட்டியல் இட்டால் அதனைத் தொகுத்து ஒரு புத்தகம் வெளியிடலாம். அந்தப் பட்டியலை தேசம்நெற்றின் கருத்தாளர்களிடமே விட்டுவிடுகிறேன்.

முல்லைத் தீவில் நடைபெறும் மனித அவலத்தில் – இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் அரசு – புலிகள் என்ற இரண்டு தரப்புகள் சம்பந்தப்பட்டு உள்ளன. இந்த அவலத்தை முடிவுக்கு கொண்டு வர இந்த இரு தரப்புகளுமே உடன்பாட்டுக்கு வரவேண்டும். அதற்கு இந்த இரு தரப்புகளுடனும் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணுவது அவசியம். நாங்கள் ஒரு தரப்பினருடன் மட்டுமே பேசுவோம் மற்றயைவர்களைத் தீண்டமாட்டோம் மற்றையவர்களுடன் பேசமாட்டோம் என்று அடம்பிடித்தால் எப்பொதுமே இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முடியாது. இதுவே யதார்த்தம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று (26 மார்ச்)  இடம்பெறவிருந்த சந்திப்பில் தமது கட்சி கலந்து கொள்ளாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்து இருந்தார். ‘வடக்கில் இடம்பெற்று வரும் படை நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை ஜனாதிபதியுடன் தமது கட்சி எந்தச் சந்திப்பையும் மேற்கொள்ளாது’ எனவும் குறிப்பிட்டு ஆர் சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார். வன்னிப் படை நடவடிக்கைகள் பெரும்பாலும் இப்பொது ஒரு சில 10 கிரோமீற்றருக்குள்ளேயே முடக்கப்பட்டு உள்ளது. இன்று தினம் தினம் மக்கள் கொல்லப்படுகின்றனர்.  யுத்தத்தை நடத்துகின்ற அரச தரப்பை சந்தித்து தங்களது நிலைப்பாட்டை வலியுறுத்துவதை விட்டுவிட்டு ‘படை நடவடிக்கைகள் நிறுத்தப்படும்வரை சந்திப்பை மேற்கொள்ள மாட்டோம்’ என்று ஜனாதிபதிக்கு கடிதம் போடுவது எவ்வகையில் வன்னி மக்களின் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும். கேளுங்கள் கொடுக்கப்படும் என்று நீங்கள் கேட்பதை மகிந்த அரசு மட்டுமல்ல எந்த அரசும் தந்துவிடாது. அதற்காகப் தொடர்ந்து அவர்களுடன் போராட வேண்டும். ‘நாங்கள் உங்களுடன் டூ. உங்களுடன் பேசமாட்டோம்’ என்று கோபித்துக் கொண்டிருக்க இது என்ன எங்கள் வீட்டு குழந்தைகளின் சண்டையா? மூத்த அரசியல் சாணக்கியன் என்று சொல்லப்படும் ஆர் சம்பந்தனின் அரசியல் சாணக்கியத்தால் என்ன பயன்?

யுத்தப் பகுதியில் இருந்து தப்பி வருபவர்கள் சரியான முறையில் கவனிக்கப்படுகிறார்களா என்பதை வன்னி முகாம்களில் நின்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம் பி க்கள் மேற்பார்வை செய்திருக்க வேண்டும். பாராளுமன்றம் சென்று மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும்படி கோரி இருக்க வேண்டும். அப்படி கேட்பதற்கு முடியாவிட்டால் ‘எங்களை வன்னிக்கு அனுப்பி வையுங்கள்! எங்கள் மக்களோடு இருக்க விடுங்கள்!’ என்று பாராளுமன்றத்தில் போராடி இருக்க வேண்டும். அதற்கு அரசு சம்மதிக்கவில்லை என்றால் ஒரே நேரத்தில் தங்கள் பாராளுமன்ற உறுப்புரிமையை திறந்து சர்வதேசத்தின் அழுத்தத்தை இலங்கை அரசுக்கு எதிராகத் திருப்பி நெருக்கடியை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இதுவரை நீங்கள் பிரிதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களுக்கு உங்கள் பாராளுமன்ற பதவியை வைத்து எதுவும் செய்ய முடியவில்லை. இன்று ஒட்டுமொத்த வன்னி மக்களும் அழிந்து கொண்டிருக்கிறார்கள். வன்னி மக்களுக்கு கொள்ளி வைப்பதற்காக நீங்கள் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினீர்கள். உங்கள் எம்பி பதவிகளை எதற்கு இன்னமும் காவிக்கொண்டு திரிகிறீர்கள்.

3. 

இதற்கிடையே லண்டன் கொழும்பு பெங்களுர் என்று இலங்கையின் நிலவரம் பற்றிய மாநாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இலங்கைத் தமிழர்களின் பற்றி எரிகின்ற ஒரு பிரச்சினை பற்றி தமிழர்கள் கலந்துகொள்கிற மாநாடு. ஆனால் மூன்று மாநாடுமே பெரும்பாலும் இரகசியமான முறையிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒரு சாரார் மற்றைய மாநாட்டை குழப்பி விடுவார்கள் என்ற அச்சம் இரு தரப்பிலுமே காணப்படுகிறது. இது தமிழ் மக்கள் தங்களுடைய மிக முக்கிய அரசியல் விடயம் தொடர்பாக வெளிப்படையான விவாதம் ஒன்றை மேற்கொள்ள முடியாத சூழல் இருப்பதையே எடுத்துக்காட்டுகிறது.

அறுபது நாட்களுக்குள் 3000 உயிர்கள் இழக்கப்பட்ட போதும் அந்த மக்களின் அவலங்களை அரசியலாக்குகின்ற மூன்றாம்தர அரசியலே நடைபெறுகின்றது. அவல ஓலங்களை ஐபிசி வானலைகளில் பரவவிட்டும், மரணத்தின் அவலத்தை ஜி ரிவியில் காட்சிப்படுத்தியும், தங்கள் புலி அரசியலை விற்கும் இவர்கள், ‘காணத் தவறாதீர்கள் சூரியாவின் ‘அயன்” என்று சொல்லவும் தவறுவதில்லை. மாறாக புலிப் புலம்பல் புலம்பி, அரசுக்கு வக்காலத்து வாங்கி, தங்கள் பழைய இயக்க சாகசங்களை தூசிதட்டி றீல்விடும் இணையங்களுக்கும் குறைவில்லை.

இந்த துருவ அரசியலில் இதுவரை தமிழ் மக்களின் அரசியல் நலன்கள் பந்தாடப்பட்டது. ஆனால் இன்று அதற்கும் மேல் சென்று தமிழ் மக்களின் – வன்னி மக்களின் தலைகளே பந்தாடப்படுகிறது.

இவ்வளவு அவலங்களுக்குப் பின்னரும் ஒரு காத்திரமான அரசியல் விவாதத்தை வெளிப்படையாக நடத்துவதற்கு முடியாத சூழல் இருக்கின்றது என்பது வேதனையான விடயம். புலிசார்பான அமைப்புகள் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்தால், புலி எதிர்ப்புக் குழுக்களும், அரச ஆதரவு சக்திகளும் அதனை குழப்ப விளைகின்றனர். அதேபோல் புலிக்கு ஆதரவற்றவர்கள் மாநாடுகளை போராட்டங்களை ஏற்பாடு செய்தால் புலி ஆதரவு சக்திகள் அவற்றைக் குழப்புகின்றனர். இதன் எதிரொலியே லண்டன் – கொழும்பு – பெங்களுர் மாநாடுகள் இரகசியமாக நடத்தப்படுவதற்குக் காரணம்.

லண்டன் மாநாடு நேற்று (26 மார்ச்) புலிகளுக்கு சார்பான அரசியல் நிலைப்பாட்டையுடைய பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் தமிழர்களுக்கான சர்வகட்சி பாராளுமன்றக் குழு உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. டெல்லியில் நடக்க இருந்து பின்னர் சிங்கப்பூருக்கும் அதன் பின்னர் கொழும்பிற்கும் மாற்றப்பட்ட மாநாடு இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுசரணையுடன் இம்மாத இறுதிப் பகுதியில் நடைபெற இருக்கின்றது. பெங்களுர் மாநாடு இந்திய அரசில் தங்கியுள்ள ஈஎன்டிஎல்எப் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இம்மாநாடு ஏப்ரல் முற்பகுதியில் நடக்க இருக்கிறது.

இந்த மூன்று மாநாடுகளுமே ஒரே விடயத்தைப் பற்றியே பேசுகின்றன. அதாவது இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலை. அவர்களின் எதிர்காலம். மூன்று மாநாட்டிலும் புலம்பெயர் தமிழர்கள் முக்கிய பங்கேற்று உள்ளனர். வட அமெரிக்கா ஐரோப்பா அவுஸ்திரெலியாவில் இருந்து வேறு வேறு புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகள் இந்த மாநாடுகளில் பங்கேற்கின்றனர்.

இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் மட்டுமல்ல இந்த மாநாடுகளும் திரைமறைவிலேயே நடத்தப்படுகிறது. ‘ஏன் இந்த மாநாடுகள் நடத்தப்படுகின்றது, என்ன விடயங்கள் விவாதத்திற்கு எடுக்கப்பட இருக்கின்றது’ என்பது பற்றிய விடயங்களை முன்னரே வெளிப்படுத்தி இருந்தால் அது பற்றிய விவாதங்களை மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தி, மக்களுடைய கருத்துக்களையும் பெற்றிருக்க முடியும். மக்களையும் இன்றைய அரசியலுடன் ஈடுபடுத்தி இருக்க முடியும். அதுவே ஜனநாயகச் செயன்முறையாக இருந்திருக்கும். ஆனால் அவ்வாறு இல்லாமல் தெரிவு செய்யப்பட்ட சிலர் (மக்களால் அல்ல), கூடி ஒரு முடிவை எடுத்துவிட்டு, அதனை வெளியிடுவது, அதற்கு மக்கள் ஆதரவைக் கோருவது ஜனநாயக நடைமுறையாகாது. இந்த மூன்று மாநாடுகளின் ஏற்பாட்டாளர்களுமே அடிப்படையில் மக்களை மிகத் தொலைவிலே வைத்துக்கொண்டு மக்கள் பற்றிய விவாதத்தை நடத்துகின்றனர்.

இந்த மாநாடுகள் நடத்தப்படுவதும் விவாதங்கள் ஊக்குவிக்கப்படுவதும் அவசியம். ஆனால் இந்த மாநாடுகளை அதன் ஏற்பாட்டாளர்கள் தங்கள் அரசியல் நலன்சார்ந்து கையில் எடுக்கும் அபாயம் உள்ளது. அது தொடர்பான விழிப்புணர்வு அதில் கலந்து கொள்பவர்களிடம் இருப்பது அவசியம். அவற்றிற்கு அப்பால் இவ்வாறான மாநாடுகள் உடனடித் தீர்வை ஏற்படுத்தாத போதும் தீர்வை ஏற்படுத்துவதற்கான விவாதிப்பதற்கான அரசியல் சூழலை உருவாக்க இவை அவசியம்.

லண்டன் – கொழும்பு – பெங்களுர் மாநாடுகள் வேறு வேறு நாடுகளில் மட்டுமல்ல வேறு வேறு அரசியல் பின்புலத்திலும் நடைபெறுகின்றன. இந்த மாநாடுகளின் ஏற்பாட்டாளர்கள், அதாவது பின்னணியில் உள்ளவர்கள், அவர்களே உண்மையான அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்கள். இன்றைய அவலங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடிய அதிகாரமும் அவர்களிடமே உள்ளது. அவர்களுடன் தொடர்ந்தும் மக்கள் சார்ந்து உரையாடுவதும் விவாதிப்பதும் தவிர்க்க முடியாதது.

30 வருடமாக ஆயுதத்தை நம்பிய தலைமை இன்று மரண ஓலத்தையே தனது அரசியல் ஆயுதமாக்கிக் கொண்டு உள்ளது. ஆனால் 30 வருடம் உறுதியான அரசியலுடன் விவாதித்து இருந்தால் ஏனைய சிறுபான்மை மக்களை மட்டுமல்ல பெரும்பான்மைச் சிங்கள மக்களது ஆதரவையும் தமிழர் போராட்டம் பெற்றிருக்கும்.

இந்திய அமைதிப்படையை வெளியேற்ற முற்பட்ட போது பிரேமதாசாவே பிரபாகரனை தம்பி என்று அழைத்தது மட்டுமல்ல மாவீரர் உரையும் இலங்கை முழுவதும் ஒலிபரப்பப்பட்டது. அதற்கு சிங்கள மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. சுனாமியைத் தொடர்ந்து தமிழ் பகுதிகளுக்கு முதலில் உதவிக்கரம் நீட்டியவர்கள் எல்லைப்புற மாவட்டங்களில் உள்ள சிங்கள மக்கள். அன்றைய காலத்தில் தமிழ் – சிங்கள – முஸ்லீம் மக்கள் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒருவருக்கொருவர் ஒத்தழைத்தனர். ஆனால் திட்டமிட்ட இனவாதப் பிரச்சாரங்கள் அம்மக்கள் இணைந்துவிடமால் தடுத்தது.

இந்த மாநாடுகளால் முல்லை அவலத்தை உடனடியாக தடுத்து நிறுத்திவிட முடியாது. ஆனாலும் இவ்வாறான மாநாடுகள் விவாதங்கள் அதன் மீதான விமர்சனங்கள் மட்டுமே இலங்கையில் உள்ள இனமுரன்பாட்டை தீர்ப்பதற்கான அரசியல் சூழலை ஏற்படுத்தும். சகல சமூகங்களும் நெருங்கி வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். ஆயுதங்களிலும் பார்க்க இந்த மாநாடுகளும் விவாதங்களும் அவற்றின் மீதான விமர்சனங்களும் ஆரோக்கியமானதே.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

30 Comments

  • indiani
    indiani

    அண்மையில் லண்டனில் நடந்த கூட்டத்தில் சுரேஸ்பிரேமச்சந்நிரனின் உறவினர் சொன்னார் வன்னி மக்களின் இந்த அவலத்திற்கு டக்ளஸ்ம் ஆனச்த சங்கரியும் பரா மிலிடரி களுமே காரணம் என்று இந்த சுரேஸ் தனது பிள்ளைகளை டில்லி பல்கழைக்கழகத்திலுட் சிறீகாந்தா அவுஸ்திரேலியாவிலும் செல்வம் இந்தியாவிலும் படிக்க அனுப்பி விட்டுள்ளனர் எல்லாருமே தமது பதவிக்காகவும்-வெளிநாட்டடில் உள்ளோர் தாம் எரிகிற வீட்டில் கொள்ளி கொள்ளும் பணத்திருடர்களாகவுமே உள்ளனர்

    என்ன …… அந்த வன்னி மக்கள் தமது உயிர்களை தினம் தினம் கொடுக்கிறார்கள்

    Reply
  • Sri Ram
    Sri Ram

    My deepest sympathies for them.

    Reply
  • பல்லி
    பல்லி

    //. ஆனால் மூன்று மாநாடுமே பெரும்பாலும் இரகசியமான முறையிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது//
    இந்த மகாநாடு எதிலாவது வன்னி மக்கள் பற்றி பேசபடுமா? அல்லது யார் இந்த பிரச்சனைக்கு மணி கட்டுவதென ஆராட்ச்சி நடக்குமா?? இதில் வன்னி மக்களுக்கு எதிராக செயல்படும் இலங்கை அரசு இரு மகாநோட்டையும் இந்தியாரசு ஒரு மகாநாட்டையும் நடத்துகிறார்கள். இதில் என்ன வேடிக்கை எனில் இரண்டிலுமே வன்னி மக்களோ பிரதநிதிகளோ கலந்து கொள்ளவும் இல்லை. அழைப்பும் இல்லை. இலங்கை அரசு நடத்தும் மகாநாட்டுக்கு புலம் பெயர் தமிழருக்கு போக்குவரத்து செலவு வழங்கபட்டதாக ஒரு வானொலியில் அறிவித்தார்கள்.

    வன்னி மக்கள் பிரச்சனை பற்றி பேச அரசிடம் ஊதியம் வாங்கும் இந்த நபர்களுக்கும் கப்பல் ஓட்டும் டாக்குத்தர் மாருக்கும் என்ன வேறுபாடு. இந்தியா இரகசிய சந்திப்பு என தேசம் சொல்லுகிறது. ஆனால் ரிபிசி தனது சேவையில் இந்த மகாநாட்டை விளம்பரபடுத்தியது ஏன் தேசத்துக்கு தெரியாமல் போனது. சந்திப்பே இரகசியம்மென்றால் செயல்பாடு அதைவிட மோசமாகதானே இருக்கும். ஏன் இந்த அரசுகள் இந்த புலம் பெயர் புண்ணாக்குகளை குஸிபடுத்துகின்றன. சிந்தித்து பார்த்தால் ஒரே விடை அரசுகள் செய்யும் அநியாயங்கள் அனத்துக்கும் மலிவு விளம்பரம் இவர்கள் தானே செய்கின்றனர். ரிபிசி வானொலி புரட்ச்சிகரமான வானொலியென பலராலும் பாராட்டபட்டது. அதைவிட நடுநிலையான விவாதங்கள் இங்கு நடத்தபட்டதும் பலர் அறிந்ததே. ஆனால் இன்று அதுகூட அரசின் விசுவாசமான ஒரு வானொலி என்பதுபோல் அண்மைகால போக்கு உள்ளது.

    ஆகவே எல்லோரும் (அரசியல் வாதியென குலைப்பவர்கள்) வன்னி மக்கள் மீது கப்பல் ஓட்டுகிறார்கள். புலி ஆதரவு புண்ணியவான்கள் தன்னீரில் ஓட்டநினைக்கும் கப்பலை இந்த மாற்று முகாமில்ல உள்ள சிவப்பு சட்டைகாரர் அரசோடு இனைந்து ஆகாயத்தில் ஓட்ட நினைத்ததால் சிங்கப்பூர். இந்தியா. கொழும்பு ஆகிய இடங்களில் செலவில்லாத விருந்துக்கு ஏற்பாடு .
    தொடரும் பல்லி.

    Reply
  • thurai
    thurai

    ஈழத்தமிழரின் இன்னல்களை தீர்ப்பதனை கருத்திற்கொண்டு கூட்டப்படும் மகாநாடுகள் நிச்சயம் பயனளிக்கும்.

    ஒருவரை ஒருவர் நாம் குற்ரம்சாட்டுவதையும், புலிகள் மட்டும்தான் தமிழரின் ஏகப்பிரதிநிதிகள் என்பதனையும் எம்மத்தியிலிருந்து அகற்ராவிட்டால், ஈழத்தமிழரின் தலைவிதியை சிங்களவர்களே தீர்மானிப்பார்கள்.

    துரை

    Reply
  • malan
    malan

    AM DEEPLY SAD ABOUT THE MESSAGE AND MY SYMPATHY GOES TO THE FAMILY.

    Reply
  • malan
    malan

    WHAT IS THE MEANING OF LIVING? WHATS THIS INNOCENT LIVES DONE? WHAT HAVE THEY DONE TO THIS POWER THIRSTY ANIMAL.WHATS THIS CHILDREN DONE TO THEM.IF IS ANYONE CAN ANSWER?
    WE VERY SMALL MINORITY IN SRILANKA AND OUR YOUNG AND BRAVE GENERATION BEEN KILLED EVERYDAY,AND WORLD IS SILLENCE AS THEY USED TO.

    WE WANT LIVE WITH PEACE AND HARMONY IN THE COUNTRY OF BROTHERHOOD.

    Reply
  • chelian
    chelian

    தமிழ் மக்களின் உரிமையைப் பற்றிப் பேசும் பத்திரிகையாளர்கள் மனித உரிமையாளர்கள் அரசியல் வாதிகளுக்கு வாழ்வதற்கு இலங்கையில் இடம் இல்லை என்பது ஜெயபாலனுக்குத் தெரியாதா? இந்த நிலைமையில்- இதற்க சம்மந்தம் இல்லாத தமது குழந்தைகளையும் இந்த அரசியல் வாதிகள் பலிக்கடா ஆக்க வேண்டுமா?

    உன் குடும்பத்தையும் கொல்வேண் என்ற மிரட்டலுக்கு பிறகு இலங்கையில் நீங்கள் இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள் என்று கூறுங்கள். நீங்கள் ஏன் தப்பி வந்து இப்போது இலங்கைத் தமிழர்களைப்பற்றி பேசுகின்றீர்கள் என்பதையும் சொல்லுங்கள் ஜெயபாலன்.

    செழியன்

    Reply
  • BC
    BC

    //chelian- தமது குழந்தைகளையும் இந்த அரசியல் வாதிகள் பலிக்கடா ஆக்க வேண்டுமா?//
    அந்த மக்கள் அந்தப் பிரதேசத்தவர்கள்(!?) அவர்கள் வெளியேற வேண்டிய அவசியமில்லை என்று சம்பந்தன் சொன்னதன் அர்த்தம் விளங்குகிறது. அந்த மக்கள் புலிக்கு கவசமாக இருந்து பலிக்கடா ஆகவேண்டும். ஆனால் 22 புலியின் கூட்டமைப்பினரும் பாதுகாப்பன பிதேசங்களில் அல்லது நாட்டில் இருக்க வேண்டும். முடிவோடு தான் இருக்கிறீர்கள்.

    Reply
  • பல்லி
    பல்லி

    துரை புலி பற்றி நாம் பேசவில்லை. அவர்களால் எதுவும் முடியாது என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால் மாற்று கருத்தென சொல்லி மக்களை ஏமாற்றுபவர்களை இனம் காட்டுவது தவறா?? ஏன் இவர்களை விட்டால் யாருமே வன்னி மக்கள் பற்றி பேச மாட்டார்களா??
    இவர்களிடம் சந்தர்ப்பம் கிடைத்தால் புலியைவிட பல மடங்கு குதிப்பார்கள். அதுக்கு கிழக்கின் விடியலே எமக்கு அனுபவம். ஒரு ஊடகவியாளனை விடுவிக்க முடியாத இவர்களா?? வன்னிமக்களை காப்பாற்ற பேச போகிறார்கள். துரை வயித்து வலி போகவேண்டி தலைவலி உருவாக்குவதில் பல்லிக்கு உடன்பாடு இல்லை. திரும்பவும் சொல்லுகிறேன் மக்களின் பிரச்சனையை பாதிக்கபட்ட மக்கள் சார்பில் அவர்கள் பிரதநிதிகள்தான் பேச வேண்டும். அதுக்கான வாய்ப்பை புலம் பெயர் தமிழர் அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமே தவிர இந்த நாட்டாண்மை விளையாட்டுக்கள். விருந்து சாப்பிடுதல். மகிந்தாவுடன் படம் எடுத்தல் எல்லாமே தமிழகத்தில் யாரோ ஒரு முட்டாள் குஸ்புவுக்கு கோவில் கட்டியது போல் ஆகிவிடும். உதாரனத்துக்கு இனி வரும் பின்னோட்டங்களில் இந்த மகாநோட்டில் கலந்து கடுப்பேத்தும் திருமுகங்களை எழுதுகிறேன். இவர்களை விட புலியல்லாத தமிழர் ஈழத்தில் இல்லையா என சிந்திக்கவும்.

    Reply
  • santhanam
    santhanam

    லண்டன் மாநாடு புலம்பெயர்தலைவர் துதிபாடிகளின் மாநாட்டைபற்றி பல்லி கேள்விபடவில்லைய.

    Reply
  • மாயா
    மாயா

    புலிகள் யாழ்பாணத்தில் அரைவாசியை அழித்தார்கள்.
    மன்னாரில் அரைவாசிக்கு மேல் அழித்தார்கள்.
    மட்டக்களப்பில் அதற்கும் மேல் அழித்தார்கள்.
    வந்தவர்களை வாழ வைத்த வன்னி மக்களை முற்றாக அழிக்கிறார்கள்.

    அதற்குப் பிறகுதான் யுத்தம் நிற்கும். யுத்தம் புலிகளை அழித்த பிறகே நிற்கும். அதன் பிறகுதான் சம்பந்தர் வீட்டை விட்டு வெளிக்கிடுவார். சும்மா போய் எதிலயாவது கையெழுத்து வச்சிட்டு புலிக் கொடி போர்த்தி மாமனிதர் ஆகவேணுமா என்ன?

    ‘தெற்கிற்குச் சவப்பெட்டிகள் வரும்’ என்று சொன்னார்கள். அது தேவையேயில்லை. படையினர் எல்லா பிணத்தையும் கடலிலதான் தட்டுது. இன்னொரு செம்மணி பிரச்சனை வரக்கூடாதென்று…. அது தமிழனாக இருந்தாலும் ஒன்றுதான். சிங்கள படை வீரனாக இருந்தாலும் ஒன்றுதான்.

    Reply
  • thurai
    thurai

    //துரை புலி பற்றி நாம் பேசவில்லை. அவர்களால் எதுவும் முடியாது என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால் மாற்று கருத்தென சொல்லி மக்களை ஏமாற்றுபவர்களை இனம் காட்டுவது தவறா?? ஏன் இவர்களை விட்டால் யாருமே வன்னி மக்கள் பற்றி பேச மாட்டார்களா//பல்லி

    இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். உலகில் பிற்ரிடம் பிழை காண்பதும், பிறரிற்கு புத்தி சொல்வதுமே இலகுவான செயல். இவை இரண்டையும் தவிர்க்கப் பழகினால் எல்லோரும் நன்மையடைவார்கள்.

    துரை

    Reply
  • மறவன்
    மறவன்

    திரு சம்மந்தரை என்ன செய்யச்சொல்லுறியள் மகிந்தவின் அழைப்பை ஏற்று சென்றால் அங்கை கோத்தபாயா நிற்பார் அவர் கேட்பார் மக்கள் சாகினம் சாகினம் என கூக்குரல் இடுகிறீர்களே உங்கடை ஆட்களை அவர்களை வெளியே விடச்சொல்லி கேளுங்களேன் எண்டு இடாக்கு முடாக்கான கேள்விகளை போட்டால். அதற்கு சம்மந்தனால் எப்படி பதிலளிக்க முடியும் என்பதனை சற்று சிந்தித்துப்பார்த்தீர்களா?

    Reply
  • katham
    katham

    செழியன் //தமிழ் மக்களின் உரிமையைப் பற்றிப் பேசும் பத்திரிகையாளர்கள் மனித உரிமையாளர்கள் அரசியல் வாதிகளுக்கு வாழ்வதற்கு இலங்கையில் இடம் இல்லை என்பது ஜெயபாலனுக்குத் தெரியாதா?//

    // நீங்கள் ஏன் தப்பி வந்து இப்போது இலங்கைத் தமிழர்களைப்பற்றி பேசுகின்றீர்கள் என்பதையும் சொல்லுங்கள் ஜெயபாலன்.//

    செழியன் உங்கள் எழுத்திலேயே கேள்வியும் பதிலும் உள்ளது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //துரை புலி பற்றி நாம் பேசவில்லை. அவர்களால் எதுவும் முடியாது என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால் மாற்று கருத்தென சொல்லி மக்களை ஏமாற்றுபவர்களை இனம் காட்டுவது தவறா?? ஏன் இவர்களை விட்டால் யாருமே வன்னி மக்கள் பற்றி பேச மாட்டார்களா??//- பல்லி

    பல்லியின் இந்தக் கருத்தும் தவறானது. காரணம் இன்றுவரை புலிகள் செய்த எந்தத் தவறையும் ஒருவர் தட்டிக் கேட்க முடியாது. அப்படி யாராவது தட்டிக் கேட்க முற்பட்டால் அவர்கள் காணாமல் போய் பின் பிணமாகவே மீட்கப்பட்டுள்ளார்கள். இப்படியான கொலைகளை புலியாதரவு ஊடகங்கங்களும் வெட்கமில்லாமல் குறித்த நபர் இனந் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப் பட்டதாக செய்தியும் சொல்வார்கள். ஆனால் மற்ற அமைப்புகள் (இங்கு மாற்றுக் கருத்தாளர்கள் என்று குறிப்பிடுவது இரு பக்கத்தையும் சாரக் கூடியதே. காரணம் புலிகளை எதிர்ப்பவர்களுக்கு புலி ஆதரவாளரின் கருத்தும மாற்றுக் கருத்தே. அதனால் அந்தச் சொற்பிரயோகத்தை தவிர்த்திருக்கின்றேன்.) தவறு செய்யாதவர்கள் என்று நான் கூற வரவில்லை. அவர்களும் தவறு செய்கின்றார்கள் தான். ஆனால் அவர்களை எவரும் தவறைச் சுட்டிக் காட்டி கேள்வி கேட்க முடிகின்றது. அதனால் மற்ற அமைப்புகளுக்கு இதைப் பற்றிய பயமும் கூடிக் கொண்டே வருகின்றது. இதனால் படிப்படியாக தமது தவறுகளை அவர்கள் குறைக்க முன் வருகின்றார்கள். இல்லாவிட்டால் தம்மை மக்கள் ஓரேயடியாக ஓரம் கட்டிவிடுவார்கள் என்ற உண்மையும் அவர்களுக்கு புரியவும் ஆரம்பித்திருக்கின்றது. வேண்டுமானால் முன்பு நான் சொல்லியது போல் யுத்தம் முடிவுற்ற பின் எல்லா அமைப்புகளையும் ஓரம் கட்டி விட்டு எம் மக்களுக்காக உண்மையில் உழைக்கக் கூடியவர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் வழிகாட்டுதலில் எமக்கான புது அத்தியாயத்தை நாம் கட்டியெழுப்ப முன் வர வேண்டும்.

    அடுத்து இன்று வன்னி மக்களின் பிரதிநிதியாக வன்னியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யாரையாவது அரசு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் என்கின்றீர்கள். அப்படி எவரை அழைக்க முடியும் என்று கூற வருகின்றீர்கள். இன்று வன்னியிலிருந்து ஒருவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டுமாயின் அவர் புலியாதரவாளராகவே அழைக்க முடியும். அதை மீறி நடுநிலையாளராக எவரையாவது அழைத்தால் அவருக்கு புலிகளே மலர்வளையம் வைத்து விடுவார்கள். அதையும் மீறி புலியாதரவாளர்களாக இருந்தும் கூத்தமைப்பினரை அரசு பேச அழைத்த போது கூத்தமைப்பும் வன்னியின் கட்டளைக்கமைய சந்திப்பை நிராகரித்து விட்டது. இன்று எமக்காக அரசியல் ரீதியாகவோ அல்லது நிர்வாக ரீதியாகவோ வாதாடக் கூடிய பல புத்திஜீவிகளைப் புலிகளே போட்டுத் தள்ளிவிட்டார்கள், அல்லது மிரட்டியே நாட்டைவிட்டு வெளியேற வைத்து விட்டார்கள். நீலன் திருச்செல்வம் போன்றவர்கள் இன்று உயிரோடிருந்திருந்தால் பல சாதகமான நிகழ்வுகளும் நடந்திருக்கலாம். இன்றைய அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் கிலாரி கிளிங்டன் நீலன் திருச்செல்வத்தின் ஒரே வகுப்புத் தோழி என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

    தற்போது அரசு தம்முடன் பேச அழைத்திருக்கும் வெளிநாட்டுத் தமிழர்கள் எல்லோரும் யார் யார் என்று நாம் சரியாக அறியாது மனம் போனது போல் விமர்சிக்க முடியாது. எதுவாகிலும் சந்திப்பு முடிய அவ்விடயங்கள் வெளி வரத் தானே போகின்றது. அப்போது தெரியாமலா போய்விடும் எல்லா நோக்கங்களும். அப்போது வைப்போம் அது பற்றிய சரியான விமர்சனங்களை.

    Reply
  • visa
    visa

    யாருங்க எங்களுக்காக ஆயுதம் தூக்கச்சொன்னது. ஆயுதம் தூக்கியதுமில்லாம யாருங்க சொன்னது நாங்க பெத்ததெல்லாம் உங்களக்கு என்று. யாருங்க சொன்னது புலத்தில போய் எங்களுக்காக புடுங்கச்சொல்லியென்று… ஊர் உடைமை உறவு உயிர் இழந்து கால்கள் கைகள் அற்று வெறும் தலையோடு உங்கள் முன்னால் நிற்கிறேனே யாருங்க… முன்னுக்கு யாராவது நிற்கிறீங்களா?

    ஜெயபாலன் நன்றி… நீங்களாவது… நிற்…..

    Reply
  • பல்லி
    பல்லி

    துரை நாம் யாருக்கும் அறிவுரை சொல்லவில்லை. அந்த தகுதியும் பல்லிக்கு இல்லை என்பதை பல்லி அறியும். ஆனால் மக்கள் மீது சவாரி செய்ய விரும்புவபவர்களை இனம் காட்டுகிறோம். துரை இந்த இரு மகாநாட்டிலும் கலந்து கொள்ளும் யாராவது ஒருவரை மக்கள்நலன் மட்டுமே குறிகோளாக செயல்படுபவர் என தங்களால் இனம்காட்ட முடியுமா?? அப்படி இவர்கள் மக்கள் நலன் பற்றிதான் சிந்திப்பவர்கள் எனில் ஏன் இவர்களுக்குள் புடுங்குபாடு. ஒற்றுமையாக செயல்பட வேண்டாமா?? புலம் பெயர் தேசத்தில் புலியை விட மாற்று முகாம் மீது மாறுகருத்து கொண்டவர்களே சேறு பூசுவது தெரியாதா?? உதாரனத்துக்கு தேசம். ரிபிசி இவை இரண்டையும் யார் அழிக்க துடிப்பது?? ஆகவே எல்லோர்க்கும் புலிபோல் நாட்டாண்மை செய்ய ஆசை ஆனால் அதுக்காக இவர்கள் போடும் வேடம்தான் அந்த மகாநாடு இந்த மகாநாடு. மற்றபடி இதில் எம் மக்களுக்கு எந்த நன்மையும் கிட்ட போவதில்லை.

    Reply
  • பல்லி
    பல்லி

    சந்தானம் அதுதான் அமவாசை பறுவம் (பூரணை)போல் அடிக்கடி நடக்குதே. இதில் ஒரு வேடிக்கை இடைகாடர் சொல்லுகிறார். கப்பல் விடயத்தில் புலிகள் தொடர்போ ஈடுபாடோ கிடையாது. இது மக்கள் ஆகிய எமது நிலைபாடே என. இந்த இடைகாடர் எப்போது புலியை விட்டு விலகியவர்என யாரும் கேட்டு சொல்லுங்கோ. இடைகாடரும் சிவாஜியும்தான் கப்பல் விடயத்தையே கெடுத்ததாக பல குட்டி புலிகள் பேசுகின்றனர்.

    Reply
  • பல்லி
    பல்லி

    பார்த்திபன் உமது கருத்தின்படி வன்னியில் வாழ்பவர்கள் எதோ புலி ஆதராவாழர்கள் என சொல்வது போல் உள்ளது. அது தவறு. பயம். அந்த பயத்தில் அடங்கி இருப்பவர்கள் இன்று புலி காணாமல் போகும் போது கண்டிப்பாக முன் வருவார்கள். உதாரனத்துக்கு கிழக்கே ஒரு சிலமாதம் அங்கு உள்ள கல்வியாளர்களிடம் நிர்வாகத்தை கொடுத்து விட்டு இரு மாமாக்களும் விடுப்பில் போய் வரட்டும். ஆயுத கலாசாரமே ஒழிந்து
    விடும்.

    இதுக்கு மேலும் விபரங்கள் வேண்டுமாயின் ஈழத்து ஸ்ராலின் பாரிசில் இருந்து கிழக்கை கட்டியெழுப்ப போனவர். அதில் ஓர் அளவேனும் வெற்றியும் கண்டார். ஆனால் அவர் அதுக்காக தேர்ந்தெடுத்த நிர்வாகிகள் அங்கு சாதாரனமாக வாழ்ந்த கல்வியாளர்கள்தான். ஆனால் கருனா லண்டன் சிறைவாசம் முடிந்து போனதும் அவர்களை வீட்டுக்கும் மேலுக்கும் அனுப்பிவிட்டு பளயபடி ஆயுததாரிகளைதான் நிர்வாகத்தில் அமத்தினார். இது பல்லியின் கருத்தல்ல அனைவரும் பார்த்தது. ஆகவேதான் மக்களுக்கு அந்த நம்பிக்கையை தான் நாம் கொடுக்க வேண்டுமே ஒழிய பதவியில் அமர துடிக்ககூடாது. ஈராக்கில் இன்றுவரை ஒரு சரியான நிர்வாகம் வரவில்லை ஏனெனில் அவர்களும் அமெரிக்காவின் செல்ல பிள்ளைகள்தான் இன்று நிர்வாகத்தில் பெரும்பகுதி உள்ளனர். ஈராக் மக்களிடம் ஆட்ச்சியை கொடுக்க அமெரிக்கா இன்று வரை விரும்பவில்லை. இது எமக்கு ஒரு அனுபவமாக இருக்கட்டுமே. இந்த இடத்தில் நண்பர் சிவபாலனை நினைவுகூருகிறேன். அப்படி பல சிவபாலன்களை உருவாக்க வேண்டிய கடமை எமதே.

    Reply
  • kamal
    kamal

    இடைக்காடரும் சிவாஜியும் புலியைவிட்டு விலகவில்லை. வன்னிப்புலிக்கும் புலம்பெயர் புலிக்கும் இடையால சைக்கிள் ஓடுகினம்

    Reply
  • BC
    BC

    //யாருங்க எங்களுக்காக ஆயுதம் தூக்கச்சொன்னது. ஆயுதம் தூக்கியதுமில்லாம யாருங்க சொன்னது நாங்க பெத்ததெல்லாம் உங்களுக்கு என்று //
    விசாவின் நியாயமான கேள்வி.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //பார்த்திபன் உமது கருத்தின்படி வன்னியில் வாழ்பவர்கள் எதோ புலி ஆதராவாழர்கள் என சொல்வது போல் உள்ளது. அது தவறு. பயம். அந்த பயத்தில் அடங்கி இருப்பவர்கள் இன்று புலி காணாமல் போகும் போது கண்டிப்பாக முன் வருவார்கள்.//- பல்லி

    பல்லி தப்பாச் சொல்லலாமோ?? எனது கருத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.

    “இன்று வன்னியிலிருந்து ஒருவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டுமாயின் அவர் புலியாதரவாளராகவே அழைக்க முடியும். அதை மீறி நடுநிலையாளராக எவரையாவது அழைத்தால் அவருக்கு புலிகளே மலர்வளையம் வைத்து விடுவார்கள்”.

    Reply
  • மாயா
    மாயா

    மகிந்ததான் பிரபாகரனை அப்படியே ஈயடிச்சான் கொப்பி போல பின்பற்றுற ஆள் என்று எங்கயோ ஒருத்தர் எழுதியிருந்தார்.

    வன்னியில என்ன நடந்ததோ: நடக்கிறதோ அதுவே தெற்கிலயும் இன்று நடக்கிறது. பேசேலாது தடை. எதிர்த்தா கொலை இல்லையென்றா சிறை.மற்ற அமைப்புகளை சிதைத்து சின்னா பின்னாமாக்கியது போல இங்கயும் அனைத்து கட்சிகளுக்கும் நடக்கிறது.

    சிறீலங்காவில அரசாங்கமும்: புலிகளும் இரண்டும் ஒன்றுதான்.

    Reply
  • பல்லி
    பல்லி

    பார்த்திபன் தொடர்ந்தும் நாம் புலிக்கு பயபட வேண்டுமா?? அவர்கள்தான் காலை கடன் கழிக்கவே பயப்பிடுவதாக நாணயகாரா தினம்தோறும் காலைகதிர் போல் அறிக்கை விடுகிறார். அதை விட பொட்டரின் பழம்பெரும் கோட்டையையே விட்டு விட்டு நடைபயணம் சென்ற புண்ணியவான்கள் திரும்பவும் மலர் வளயம் வைக்க வருவார்கள் என சொல்லலாமா?? இருப்பினும் பார்த்திபனுக்கு உள்ள பயம் பல்லிக்கும் உண்டுதான் காரனம் என்னொருவர் உயிருடன் நாம் விளையாட கூடாது. இருப்பினும் தமிழர்க்கான தீர்வு அதுவாகதான் இருக்கும் இருக்க வேண்டும்.

    Reply
  • தொப்புள்கொடி உறவு
    தொப்புள்கொடி உறவு

    /தமிழக தலைவர்கள் சிலருக்கு ஈழ தமிழர்கள் மீது அதி தீவிர அனுதாபம் ஏற்பட்டு இருந்தது குறித்து ஈழ தமிழர்கள் பலர் ஆச்சரியத்துடன் ஆனந்த கண்ணீரும் வடித்தனர். பல கோடி ரூபாக்கள் அவர்களின் பைகளுக்கு சென்ற பின்னர்தான் அந்த தலைவர்களுக்கு ஈழ தமிழர்கள் மீது அதி தீவிர அனுதாபம் ஏற்பட்டது என்பது , பாவம் அவர்கள் பலருக்கு தெரியாமல் போனது. பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவில் வறுமை கோட்டிற்குள் வாழும் மக்கள் பல கோடி , இதிலும் தமிழகத்தில் வீதி ஓரங்களிலும், கூவம் நதி ஓரங்களில் குடும்பம் நடத்தி வரும் மக்கள் பல ஆயிரம். இலங்கையில் யுத்தம் இடம் பெற்று வரும் பகுதிகளில் மக்கள் உணவு ,உறைவிடம் இன்றி தவித்து வருக்கின்றனர். ஏனைய பகுதிகளில் தமிழகத்தினை காட்டிலும் இலங்கை தமிழர்களில் வாழ்க்கை தரம் மேலோங்கியே இருந்து வருகின்றது./–தேனி வெப்.
    இது இலங்கைத் தமிழர்களின் ஒரு ஆழமான எண்ணக்கரு.இப்படி ஒரு சாமான் இருக்கிறது என்று தமிழகத்தில் கனவுக்கூட யாரும் காணவில்லை.”தமிழருக்கான போராட்டம்” என்ற போர்வையில் எப்படி,”புலம்பெயர் புண்ணாக்குகளாக” மாறினார்க்ளோ,அதே போல் “ஸ்லம் டாக் மில்லினேயர்” தோற்றத்தைப் பயன் படுத்தி,சிங்களவர்களுடனான உறவுக்கு ஒட்டுப் போடுகிறார்கள்.ராஜீவ் காந்தியை துப்பாக்கி மட்டையால் அடித்தபிறகு அதற்கு ஆதரவாக ராஜீவை கொலை செய்து சிங்களவர்களுடன் உறவு ஏற்ப்படுத்த முனைவது போல்.தமிழக தமிழர்கள்,இலங்கைத் தமிழர்களுடன் ரோட்டில் சென்ரால் “ஹலோ” என்ரு கூறும் அளவுக்கு நிலயான கைக்குலுக்கல் இருந்தால் போதும்,”தொப்புள் கொடியை பிடித்துக் கொண்டு பிறகு திருப்தி இல்லாமல் ரத்தக்களரி வேண்டாம்.நாலு இலங்கைத் தமிழர்கள் இருக்குமிடத்து,ஒரு இந்தியன் வந்தால் “அதோ பார் தொப்புள்கொடி உறவு வருகிறது” என்று கிண்டல் செய்யும் நிலைதான் இப்போது இருக்கிறது.”இந்திய தமிழர்களை” மதித்தால்,தங்களை இலங்கைத் தமிழர்கள் கேவலமாக நினைத்து விடுவார்கள் என்ற “குண்டுசட்டி சிந்தனையை” சிங்களவர் மத்தியில் இ.தமிழர்கள் ஏற்ப்படுத்தியுள்ளனர்.வருங்காலத்தில் இலங்கைப் பிரச்சனை தீரும்போது பலவகையில் இது ஒரு “உந்து காரணியாக” செயல்படும்.இலங்கைத் தமிழர்களால் இதை விட முடியாதிருப்பதற்கு காரணம்,”அரிப்பெடுத்தால் சொரியும் போது” கிடைக்கும் ஒரு வித சுகம் போல் “டெலூஷன்(போதைப் போல்)” இதில் கிடைக்கிறது. சொரிந்துக்கொண்டே இருந்தால் அந்த இடத்தில் புண்ணாகி, சுகத்தைவிட வேதனை அதிகமாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். குண்டுசட்டிக்கு வெளியே இதை யாரும் கண்டுக் கொள்வதில்லை என்பது வேடிக்கையான உண்மை.ஆனால் பிரச்சனையை தீர்க்காமல் திசை திருப்ப “வெஸ்டட் இன்டரஸ்டுகளுக்கு” இந்த “சமூக உளவியல்” நல்ல கருவியாக, பெரும் பங்கு ஆற்றுகிறது.மற்றப்படி,புது மாத்தளம் பகுதியில் இறந்த உயிர்களுக்கு,……என்னவென்று சொல்ல….கண்ணீர்த் துளிகள்…அர்ப்பணம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //பார்த்திபன் தொடர்ந்தும் நாம் புலிக்கு பயபட வேண்டுமா?? அவர்கள்தான் காலை கடன் கழிக்கவே பயப்பிடுவதாக நாணயகாரா தினம்தோறும் காலைகதிர் போல் அறிக்கை விடுகிறார். அதை விட பொட்டரின் பழம்பெரும் கோட்டையையே விட்டு விட்டு நடைபயணம் சென்ற புண்ணியவான்கள் திரும்பவும் மலர் வளயம் வைக்க வருவார்கள் என சொல்லலாமா?? இருப்பினும் பார்த்திபனுக்கு உள்ள பயம் பல்லிக்கும் உண்டுதான் காரனம் என்னொருவர் உயிருடன் நாம் விளையாட கூடாது. – பல்லி//

    பல்லி இது பயமல்ல. உண்மையைத் தான் கூறினேன். வன்னிக்கு வெளியிலும் நிறைய தற்கொலைப் புலிகளை தலை அனுப்பி இருக்கின்றார். அதைப் பல்லியும் அறிந்திருக்கும். ஏவி விட்டவன் பதுங்கு குழியில் பத்திரமாக இருக்க தன்னையும் அழித்து அதனால் அடுத்தவனையும் அழித்து உயிரை மாய்ப்பவரை என்ன சொல்ல. செய்தித் தொடர்பாளராக பணியாற்றிய இளந்திரையன் முன்பு
    “இராணுவம் மடுவிற்கு வந்தால் நாங்கள் மாங்குளத்தில் நிற்போமென்றார்”. இன்று அந்த இளந்திரையனையே துரோகியென்று புலிகள் வெட்டித் தள்ளி விட்டார்கள் என்று நம்பகமாக செய்தி வந்துள்ளது. அவருக்கே அந்தக் கெதி என்றால் அடுத்தவனுக்கு சொல்ல வேண்டுமா??

    Reply
  • j.jenney
    j.jenney

    இலங்கையில் அரச பயங்கரவாதத்திற்கும் புலிப் பயங்கரவாதத்திதற்கும் இடையில் பயணக்கைதிகளாக அகப்பட்டுத்தவிக்கும் எம்மக்களின் அவலங்களுக்கிடையே வன்னியில் நித்தம் நுhற்றுக்கணக்கிலும் இதுவரை 3000 அப்பாவிப் பொது மக்களிற்கும் மேலாக மரணித்துக் கொண்டிருக்கும் எம் மக்களிற்கும் இதில் பலியான உங்கள் குடும்ப உறவினர்கள் உட்பட அனைவரிற்கும் எமது மனம் துடித்தழும் கண்ணீர் அஞ்சலிகளைத்தான் செலுத்த முடியும். உங்களைப்போன்ற இழந்தோர் அனைவரது குடும்பத்தின் துக்கத்திலும் நாமும் பங்கு கொள்கின்றோம்.

    மேலும்>நாளாந்தம் குற்றுயிரும் குறையுயிருமாக அவயங்களை இழந்து>உறவுகள்- உடமைகள் சொந்தபந்தங்களை தொலைத்து மொத்தத்தில் அனைத்து வாழ்வாதாரங்களையுமே இந்த பாசிச யுத்தத்தில் கணத்திற்கு கணம் பலிகொடுத்து அல்லலுற்று- அலைக்கழிந்து திரியும் எம் மக்கள் அபலைகளாக >அனாதைகளாக வீடிழந்து -பிரதேசம் இழந்து தற்காலிக கூடாரங்களே நிரந்தர வாழ்க்கையா? என எந்த வித நம்மபிக்கையும் அற்று மரணத்துள் வாழ்கின்றனர்.

    இந்த அவலங்களுக்கு காரணமானவர்கள் இந்த அரசும் புலிகளுமே என்பதில் எம்மைப் போன்றோரிற்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் காரணத்தை அம்பலப்படுத்திய அல்லது வரலாற்று நிகழ்வுகளில் இதற்கான காரண காரியங்களை புரிந்து கொண்டிருக்கும் நாமெல்லோரும் இன்னும் இன்னும் பொது எதிரியைக் கண்டுபிடிப்பதில் தான் முன்னுக்கு பின் தவறுவிடுகின்றோம்

    இந்த எம் மக்களின் பிரச்சனைகள்; தற்போதுள்ள இலங்கை என்ற அரசியலமைப்புக்குள்ளோ அன்றி இலங்கை அரசின் தனிப்பட்ட வேலைத்திட்டங்களினாலோ தீர்க்ப்படப்போவதில்லை யென்பது நாம் இன்றுவரை படிப்படியாக உணர்ந்துள்ளோம் ;எனவே நாம் எல்லோருமே உணர்ந்துகொண்ட பல ;இடங்களில்வெளிப்படுத்திய ஜக்கியம>;குறைந்தபட்ச பொதுவேலைத்திட்டம்> இந்த பலியாகிக்கொண்டிருக்கும் மக்களை மனதிற்கொண்டு உடனடிஆனால் அதுவே நிரந்தரமான தீர்வுத்திட்டம் அதனூடான முன்னகர்த்தல் என்பன போன்ற புலம் பெயர் சூழலில் ஜனநாயக நாடுகளில் வாழும் எம்மைப்போன்றோருக்குள்ள கடமைகளை நாம் மறக்க முடியுமா?

    இந்த மக்களின் விடுதலையை மட்டும் மனதில் கொண்டு எந்த சக்திக்கும் விலைபோகாமல்-எந்த சுய லாபத்திற்குமாக விட்டுக் கொடுக்காமல் எம்மால் செய்யக் கூடியபங்களிப்பை செய்ய வேண்டும். அங்கு மக்கள் போராட்டம் மலரும்- மக்கள் புரட்சி வெடிக்கும் -அம் மக்களே பார்த்துக் கொள்வார்கள் என்று நாம் இங்கு இணைய தளப்புரட்சி செய்வதல்லவே தீர்வு? இலங்கையில் மொத்தத்தில் ஊடக சுதந்திரம்-ஜனநாயக மறுப்பு-மனிதாபிமானங்களே என்ன விலை என கேட்கப்படும் சூழலிலும் மக்களின் அவலங்களை வெளிக்கொணரும் ஒரே குற்றத்திற்காக இன-மத-மொழி வேறுபாடில்லாமல் எத்தனை மனிதாபிமானிகள் எத்தனை புத்திஜிவிகள் எத்தனை ஓங்கி ஒழித்த குரல்கள் அழிக்கப்பட்டும் நாட்டைவிட்டு ஓடப்பண்ணியுமாக தொடர்கின்றது.எனவே மக்கள் அழிவு அங்கு நடந்தாலும் அந்த மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய கடமைப்பாடு இங்குள்ள எம்மவர்க்கும் தான் உண்டு.

    அங்குள்ள அநீதிகளை வெளியுலகுக்கு கொண்டுவரவேண்டிய பொறுப்பும் ஒரு அரசியல் தீhவை நோக்கி ஒருபொது வேலைத்திட்டத்தில் நகர்த்த வேண்டிய கடமையும் எமக்கும் உண்டு ஆயினும் எந்த அன்னிய சக்திகளுக்கும் விலைபோகாமல்-அடிபணியாமல்>எந்த அதிகார அரசுகளின் வலைப்பின்னல் வேலைகளிலும் சிக்காமல்>எல்லா ஏகபோக உரிமையும் எமக்குத்தான் என இன்னும் எதேச்சஅதிகார குரல்கள் எதுவாயிருப்பினும் அதை நிராகாpத்து ஒரு கூட்டு வேலைத்திட்டத்தின்-ஒருசரியான கூட்டுத்தலைமையின் உருவாக்கத்தின் மூலமே சாதிக்க முடியும் இதனை இதன் பொறுப்பை நாம் ஒவ்வொருவரும் மக்களைமட்டும் -அவர்களின் அழிவுகளை மட்டும் வைத்து உணர்ந்து செயற்பட்டால் ஏதோ தூரத்திலாவது ஒரு விடிவெள்ளி தெரியலாம்—–

    Reply
  • Lanka Expat
    Lanka Expat

    The day Prabhakaran realises that he stands no chance of being rescued, he will take cyanide bringing the war to an end. Then only will the suffering of civilians in all parts of the country end once and for ever.

    Reply
  • பல்லி
    பல்லி

    பார்த்திபன் பல்லிக்கு அனுபவம் இருப்பதாக என்றுமே எண்ணியதில்லை. ஆனால் இந்த புலம்பெயர் கமினிஸ்ட்டுகளின் சுயரூபம் தெரிந்ததால் அவர்கள் செய்யும் செருக்குதனமான விடயங்களை குறிப்பிடுகிறேன். புலியை எதிர்பவரெல்லாம் அரசின் விசுவாசிகளாக பல்லி பார்ப்பதாய் தங்கள் குற்றசாட்டு. அப்படியாயின் பல்லி ஏன் புலியை விமர்சிக்க வேண்டும். பல்லி அடிக்கடி சொல்லும் வார்த்தை இரு மிருகங்களிடத்திலிருந்தும் மக்களை காப்பாற வேண்டும். அதுக்கு புலம்பெயர் தமிழர் உதவியாக இருக்க வேண்டுமே ஒழிய நாட்டாண்மை செய்தால் அரசின் கோடியில் தான் நிற்ப்பார்கள். மக்களா? அல்லது கல்வியாளர்களா?? என பல்லி குழம்பி விட்டது என சொல்லியுள்ளீர்கள். குழம்பியது பல்லியல்ல பார்த்திபன்தான். கல்வியாளர்களை மக்களிடத்தில் இருந்துதான் தெரிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு என ஒரு உலகம் இருக்கா பார்த்திபன். திரும்பவும் சொல்லுகிறேன் புலிக்கு எப்படி தலைகனமோ. அரசுக்கு எப்படி திமிர்குனமோ அதுக்கு சிறிதும் குறைவில்லாத நாட்டாண்மைகாரர்தான் இந்த சிவப்பு சட்டைகள். இவர்களில் யாராவது இருவரை ஒத்த கருத்துள்ள புண்ணியவாஙகளை தயவு செய்து பல்லிக்கு பார்த்திபன் அறிமுகம் செய்யவும். பார்த்திபன் எனக்கு தங்களின் பலகருத்தில் மிகவும் உடன்பாடு உண்டு. ஆனால் இந்த மகாநாட்டு விடயத்தில் இவர்கள் ஏதோ தவறு செய்வது புரிகிறது. அதை ரிபிசி உறுதி செய்கிறது. எது எப்படியோ தொடர்ந்தும் விவாதிப்போம் மக்களுக்காக. எமக்காக தேசம் ஒரு நல்ல தளத்தை தந்துள்ளது. முடிந்தவரை உன்மைகளை வெளிகொனர்வோம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //பல்லி குழம்பி விட்டது என சொல்லியுள்ளீர்கள். குழம்பியது பல்லியல்ல பார்த்திபன்தான். கல்வியாளர்களை மக்களிடத்தில் இருந்துதான் தெரிவு செய்ய வேண்டும். – பல்லி//

    பல்லி நாட்டில் மக்களிடத்திலுள்ள கல்வியாளர்கள் 10 பெபயர்களைத் தரும்படி தானே கேட்டிருந்தேன். அதற்கு பல்லி பதிலளிக்காமல் இருப்பதன் மர்மமென்னவோ?? அங்கு நல்ல கல்வியாளர்கள் இல்லாததாலேயே வெளிநாட்டிலுள்ள தமிழ்க் கல்வியாளர்களின் ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. அந்தக் கல்வியாளர்கள் கமினிஸ்ட்டுகள் இல்லையே. சில கமினிஸ்ட்டுகள் தவறு விட்டிருக்கலாம். அதற்காக எல்லோரையும் குற்றம் சொல்வதா, அத்தோடு எல்லோரையும் கமினிஸ்ட்டுகள் ஆக்கி விட முடியுமா?? பல்லியோடு நான் தொடர்ந்து விவாதிப்பதன் காரணமும் பல்லியோடு எனக்கு எந்த கருத்து முரண்பாடும் இல்லாததாலேயே. தொடர்நதும் நல்லன நடைபெறுவதற்காக நாமும் விவாதிப்போம்.

    Reply