மூன்று லட்சம் ரூபா கடன் பெற்ற தாய் ஒருவர் அதனை மீள செலுத்த முடியாத நிலையில் கடந்த 30.01.2022 அன்று தானும் விஷம் அருந்தி தன்னுடைய பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்திருந்த நிலையில், மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், இரண்டு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தாய் தானும் நஞ்சருந்தி வட்டுப்பிட்டிவல வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லொலுவாகொட பகுதியைச் சேர்ந்த நிலுகா சஞ்சீவனி என்ற முப்பத்தொரு வயதுடைய பெண்ணே இவ்வாறு பரிதாப மரணத்தை தழுவியுள்ளார்.
இந்த தாயால் விஷம் கொடுக்கப்பட்ட ஐந்து வயது குழந்தை கேஷான் முன்னதாக உயிரிழந்துள்ளதுடன் எட்டு வயது மகள் கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.