தற்போது கஞ்சாவினால் செய்யப்பட்ட பற்பசையை பல் துலக்க பயன்படுத்துவதாக சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கஞ்சா பலவிதமான பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு ஔஷதம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கஞ்சாவை பானமாக பயன்படுத்த தாம் ஒருபோதும் முன்மொழியவில்லை எனவும், அதனை ஏற்றுமதி பயிராக வளர்த்து இலங்கைக்கு டொலர்களை கொண்டு வருமாறும் அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளதாகவும் தான் போதைப்பொருளுக்கு எதிரானவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதே நேரம் திருகோணமலை-ரொட்டவெவ பகுதியில் இரகசியமாக ஐந்து கஞ்சா செடிகளை வீட்டில் வளர்த்து வந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவர் திருகோணமலை-ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த முகம்மத் ரபீக் நிஸாம் (34வயது) என காவல்துறையினர் தெரிவித்தனர்.