நாடாளுமன்றத்தில் உள்ள 208 உறுப்பினர்கள் தமது கல்வி மற்றும் தொழில் தகைமைகளை நாடாளுமன்ற செயலகத்திற்கு அறிவித்துள்ளனர்.
எனினும் 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தகவல்களை நாடாளுமன்ற செயலகத்திடம் ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு பிறப்பித்த உத்தரவின் பிரகாரம், இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
https://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/?cletter=A
நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரங்களை www.parliament.lk என்ற நாடாளுமன்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், நோகராதலிங்கம் ஆகியோர், உயர்தரம் வரை பயின்றுள்ளதுடன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஐ.சி.எம்.ஏ இல் நான்காம் தரத்தை பூர்த்தி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதெநெரம். தவராசா கலையரசன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் வரை பயிற்றுள்ளதாக நாடாளுமன்ற இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.