இலங்கையின் கோரிக்கைக்கு இணங்க பங்களாதேஷ் அரசாங்கம் கடனை செலுத்துவதற்கு மேலும் 6 மாத கால அவகாசத்தை வழங்கியுள்ளது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் பங்களாதேஷ் அரசிடமிருந்து இலங்கை கடந்த மே மாதம் 2021 இல் 200 மில்லியன் டொலரை கடனாக பெற்றது.
அந்நியச் செலாவணி ஒப்பந்தத்தின் கீழ் பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக குறித்த நேரத்தில் வழங்க முடியாத நிலையில் இலங்கையின் கோரிக்கைக்கு அமைவாக இரண்டு தடவைகள் காலத்தை நீடிக்க ஏற்கனவே பங்களாதேஷ் இணக்கம் தெரிவித்திருந்தது.
அந்த வகையில் குறித்த கடனை செலுத்தும் காலம் நெருங்கி வந்த நிலையில் இலங்கையில் நிலவும் நீண்டகால பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்குமாறு பங்களாதேஷிடம் இலங்கை மீண்டும் கோரிக்கை விடுத்திருந்தது.
அதற்கிணங்க மேலும் ஆறுமாத கால அவகாசத்தை வழங்கியுள்ளது பங்காதேஷ்.
கால அவகாசத்தின்படி, இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.