போதைப்பொருள் மாத்திரைகளுடன் மல்லாகம் பகுதியில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் பலாலி விமானப்படை புலனாய் பிரிவுகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞன் 250 போதைப்பொருள் மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டார்.
கைதானவர் ஏழாலை தெற்கைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என பொலிசார் தெரிவித்தனர்.
கைதான சந்தேக நபர் நாளைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பொலிசாரால் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.