உள்ளுராட்சி தேர்தல் பிரச்சாரம் தீவிரமடையும் போது பெண்வேட்பாளர்களிற்கு எதிரான டிஜிட்டல் துன்புறுத்தல் அதிகரிக்கலாம் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
கபே அமைப்பு மேற்கொண்ட ஆரம்ப கட்ட கருத்துக்கணிப்பின் போது உள்ளுராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்களில் 70 வீதமானவர்களும் அடிமட்ட செயற்பாட்டாளர்களும் டிஜிட்டல் துன்புறுத்தல்களை எதிர்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
டிஜிட்டல் துன்புறுத்தலை எதிர்கொண்டவர்களில் 80 வீதமானவர்கள் பொலிஸாரிடமோ கட்சியின் தலையிடமோ இது குறித்து முறைப்பாடு செய்யவில்லை அவர்கள் இது பயனற்ற நடவடிக்கை கருதுவதே இதற்கு காரணம் என கபேயின் நிறைவேற்று பணிப்பாளர் மானாஸ் மக்கீம் தெரிவித்துள்ளார்.
பெண் அரசியல்வாதிகள் பொலிஸ் அல்லது தங்களின் கட்சி தலைமையிடம் இது குறித்து முறைப்பாடு செய்தாலும் எந்த பயனும் இல்லை அவர்களே தங்கள் தீர்வுகளை தாங்களே காணவேண்டியுள்ளது என தெரிவித்துள்ள அவர் பெண் வேட்பாளர்களிற்கு ஒதுக்கீடு முறை ஆண் வேட்பாளர்களிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது இதன் காரணமாக இதன் காரணமாக அவர்கள் டிஜிட்டல் துன்புறுத்தல்களில் ஈடுபடுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கணிப்பின் போது 55 வீதமான பெண் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் தங்கள் அரசியல் வாழ்க்கையின் போது துன்புறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது என மானா மக்கீன் தெரிவித்துள்ளார்.
எனினும் டிஜிட்டல் துன்புறுத்தலே தற்போது வழமையான ஒன்றாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் பாதிக்கப்பட்டவர்களில் 90 வீதமானவர்கள் தங்களின் கட்சியை சேர்ந்தவர்களே இதனை செய்கின்றனர் என கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.