திறப்பனை, பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் ஒருவரே இவ்வாறு திற்பனையில் கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கசிப்பு காய்சிக் கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது காணி ஒன்றில் கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்தபோதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3,750 மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் 1,80,000 மில்லி லீற்றர் கோடாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ள நிலையில் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.