பதியபெலல்ல, ரிக்கிலகஸ்கட பிரதான வீதியில் 2 மாத வயதுடைய இரண்டு நாய்க்குட்டிகளைக் காரினால் மோதிக் கொன்ற சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்துரட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கோடீஸ்வர வர்த்தகரின் மனைவி என பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 17 ஆம் திகதி மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காரின் முன் மற்றும் பின் சக்கரங்களில் சிக்கி இரண்டு நாய்க்குட்டிகளும் நசுங்கி உயிரிழந்தன. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதால், சம்பவம் குறித்து மதுரட்ட பொலிஸ் நிலையத்துக்கு கடந்த 18 ஆம் திபதி முறைப்பாடு வழங்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மதுரட்ட பொலிஸார் சந்தேக நபரான பெண்ணையும் அவரது கணவரான கோடீஸ்வர வர்த்தகரையும் மதுரட்ட பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் மிருகவதை குற்றத்துக்காக சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வலப்பனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து நீதிவான் சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் விடுவித்தார்.