ஏழு வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் சேட்டைகள் செய்த ஒருவரும் சிறுமியின் தாயும் செவ்வாய்க்கிழமை (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கட்டுகாஸ்தோட்டைப் பொலிஸ் பிரதேசத்தில் நடந்த இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,
மேற்படி சம்பவத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட பெண்ணின் கணவன் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் மரணமடைந்த நிலையில் அப் பெண் பேஸ்புக் மூலம் பல ஆண்களுடன் தொடர்புகளைப் பேணியுள்ளார்.
அதில் ஒருவருடன் மிக நெருக்கமாகப் பழகி அவரை தனது கள்ளக் காதலாகவும் ஆக்கிக் கொண்டுள்ளார்.
அந்நபர் அடிக்கடி மேற்படி பெண்ணின் வீட்டுக்கு சென்று வந்ததுடன் தொடர்புகளை பேணியும் வந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ தினம் அப் பெண்ணின் 7 வயது மகளிடம் தாயின் கள்ளக் காதலன் பாலியல் சேஷ்டைகள் பல புரிந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிறுமியின் தாய் துணையாக இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சிறுமி, நடந்த சம்பவம் பற்றி தனது மாமி முறையான ஒருவரிடம் தெரிவித்துள்ளார். அப் பெண் சிறுமியின் பாட்டியிடம் விடயத்தை கூறி அதன் பிறகு கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்புப் பிரிவில் மறைப்பாடு ஒன்றுசெய்யப்பட்டுள்ளது.
அவர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாணைகளின் படி தாயும். கள்ளக் காதலனும் கைது செய்யப்பட்டு கண்டி நீதவான் முன் ஆஜர் செய்யப்பட்டனர். முறைப்பாட்டை விசாரித்த நீதவான் தாயையும், கள்ளக் காதலனையும் தடுத்து வைக்கும் படி உத்தரவிட்டார்.