இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், உணவுப் பாதுகாப்பின்மை தொடர்ந்தும் கவனம் செலுத்தும் நிலையிலேயே உள்ளது என்று உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.
உலக உணவுத்திட்டம் இன்று வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் மேற்கொள்ளப்பட்ட வீட்டு உணவுப் பாதுகாப்பு ஆய்வின்படி 33 சதவீத குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தன.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, கொழும்பின் நகர்ப்புறங்களில் கடந்த ஜனவரியில் உணவுப் பணவீக்கம் 60.1 சதவீதமாக இருந்தாக உலக உணவுத்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில் பொது உணவு விநியோகம், பாடசாலை உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆதரவு மூலம் 3.4 மில்லியன் மக்களுக்கு உதவ தாம் திட்டமிட்டுள்ளதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.