இமயமலை அல்லது இந்தியாவின் வடக்கு பிராந்தியத்திற்கு அருகில் பாரிய நிலநடுக்கம் ஏற்படலாம் என்ற அனுமானங்களை விலக்கிக்கொள்ளவதாக இலங்கையின் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இந்தியாவின் வடக்குப் பகுதியில் சுமார் 8 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட முடியும் என புவியியலாளர்கள் எச்சரித்தனர். இதனால் இலங்கைக்கும் பாதிக்கப்படும் என்று அவர்கள் எச்சரித்தனர். இதன்மூலம் வட இந்தியாவுக்கு அதிக சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்த கணிப்பு உண்மையாக இருந்தால், இந்தியாவின் இமயமலை பகுதியிலிருந்து 2,500 மைல் தொலைவில் அமைந்துள்ள இலங்கையிலும் இந்த நில அதிர்வு உணரப்படும் என்றும் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இமயமலையை பாதித்த 5 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் கொழும்பு பகுதியிலும் உணரப்பட்டது.
இதேவேளை, கடந்த 4 வார காலப்பகுதிககுள் புத்தள மற்றும் வெல்லவாயா பகுதியில் பதிவாகியுள்ளன. அவை 3 மெக்னிடியூட் என்ற சிறிய அளவிலான அதிர்வுகளாக பதிவாகியிருந்தது.இதனால் இலங்கையர்கள் வீண் அச்சம் கொள்ள தேவையில்லை என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.