சிவகங்கை மக்களவை தொகுதியில் தேமுதிக, தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். இத்தொகுதிக்கு உட்பட்ட மானாமதுரை, திருப்புவனம் ஆகிய இடங்களில் அவர் பேசுவதற்காக சில இடங்களில் போலீசார் அனுமதி அளித்திருந்தனர்.
ஆனால் அவர் அனுமதி வழங்கப்படாத இடங்களான மானாமதுரை புதிய பஸ் ஸ்டாண்ட், திருப்புவனத்தில் பிள்ளையார் கோவில், திருப்பாச்சேத்தி பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் திறந்த வேனில் இருந்தவாறு பிரச்சாரம் செய்தார். அவரது வேனுடன் 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து சென்றன. இதற்காக மானாமதுரை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம் போலீசாரால் விஜயகாந்த் மீது 143 (சட்ட விரோதமாக கூடுதல்), 180 (அனுமதியின்றி பேசுதல்), 188(தேர்தல் அதிகாரி உத்தரவை மீறுதல்), 71ஏ- போலீஸ் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பார்த்திபன்
இவர் இப்படி அனுமதி பெறாத இடங்களில் பிரச்சாரத்தை மேற்கொள்வதே, இதன் மூலம் போலீசார் தன்மீது வழக்குத் தொடுப்பார்கள். அதனை வைத்து ஆளும் கட்சியை விமர்சித்து தனக்கு மக்களின் அனுதாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதனாலேயே.
பல்லி
இது ஒன்றும் சினிமா அல்ல இடக்காலை சுவரில் மிதித்து வலக்காலை வில்லன் மேல் உதைக்க. அரசியல். சிறிது சறிக்கினாலும் சாக்கடை பொறுமை இளந்துவிடும்.