பாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்களுக்கு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 1200 மெட்ரிக் தொன் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் நாளை ஏப்ரல் 01 திகதி அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படையத் தளபதிகள் ஆகியோரின் கோரிக்கைக்கு இணங்க இப்பொருட்களை பாதுகாப்பு வலயத்துக்கு அனுப்பி வைக்க ஜனாதிபதி பணிப்பரை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவின் மேற்பாவையில் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம், இலங்கைக் கடற்படை உயர் அதிகாரிகள், திருகோணமலை அரச அதிபர், மற்றும் சர்வதேச செஞ்சிலுவை அதிகாரிகள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இதன்படி அத்தியாவசிய சேவைகள் ஆனைணாயர் நாயகத்தின் ஏற்பாட்டில் சிட்டி ஒவ் டப்ளின்| என்ற கப்பல் மூலம் 1200 மெட்ரிக் தொன் உணவவுப் பொருட்களும் மருந்துப் பொருட்களும் நாளை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரிசிää பருப்பு, சீனி, மரக்கறி எண்ணெய், கோதுமை மா, குழந்தைப் பாலுணவு, சரக்குத்தூள், சோயா,வெள்ளைப்பூடு, தேயிலை, மரக்கறி வகைகள் மற்றும் சுகாதார உபகரணங்களும் சுகாதரா அமைச்சினால் வழங்கப்பட்ட 55 வகையான மருந்து வகைகளும் இன்று புறப்படும் கப்பலில் அனுப்பிவைக்கப்படவுள்ளன.
அத்துடன் யுனிசெப் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள பொருட்களும் இதில் அனுப்பிவைக்கப்படும். படுக்கை விரிப்புக்கள், பிளாஸ்டிக் பொருட்கள், நுளம்பு வலைகள், சமையலறைப் பயன்பாட்டுப் பொருட்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள், துவாய்கள் மற்றும் சவர்க்காரம் என்பன இதில் அடங்கும்.
ஏப்ரல் மாத நடுப்பகுதியில் மேலும் ஒரு தொகை உணவுப் பொருட்களை இதே கப்பலில் மீண்டும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.