வவுனியாவில் தமிழ்மத்திய மகாவித்தியாலயத்தில் 2016ம் ஆண்டு உயர்தர விஞ்ஞானப் பிரிவில் 3 ஏ எடுத்து மருத்துவபீடத்துக்கு தெரிவாகிய பிரபல வைத்தியரின் மகனான செந்தில்காந்தன் லக்சிகன் நேற்று தற்கொலை செய்துள்ளார்.
உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளின் பின்னர் இவர் தாய் மண்ணில் இருதயசிகிச்சை நிபுணராக வரவிரும்புவதாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார். மாவட்ட மட்டத்தில் முதல் நிலை பெற்று தேசிய ரீதியில் 39வது இடத்தையும் பெற்ற இவர் தற்கொலை செய்ததற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.
வவுனியாவில் தொடர்ச்சியாக தற்கொலை மரணங்கள் அதிகரித்து வருவதற்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம் முடியுமுன் மற்றுமொரு மாணவனின் உயிரிழப்பு வவுனியாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.