தனக்கு அபூர்வ மந்திர ஆற்றல் இருப்பதாகக் கூறி பெருந்தொகையான பெண் பக்தைகளை தன் பக்கம் கவர்ந்திழுத்து, அவர்களில் அழகிய யுவதிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் போலிச் சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் வட லண்டனில் இடம்பெற்றது.
மோகன்சிங் என தன்னைக் கூறிக் கொண்ட மைக்கல் லயன்ஸ் (51 வயது) என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, லண்டனிலுள்ள வூட் கிறீன் கிறவுண் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
மேற்படி நபர் தனக்கு திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய்லாமாவுடன் தொடர்பிருப்பதாகவும் அதீத ஆற்றல்கள் தனக்கு கிடைத்துள்ளதாகவும் கூறி, பெண் பக்தைகளை தன் பக்கம் கவர்ந்திழுத்துள்ளார். அவர்களில் 7 பேரை கடந்த 10 வருட காலமாக அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மேற்படி பெண்களில் ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில், தனக்கு ஆன்மிக சக்தியை வழங்குவதாகக் கூறி சாமியார் தன்னை நிர்வாணமாக்கி தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறினார்.
மற்றொரு பெண் சாட்சியமளிக்கையில், மேற்படி சாமியார் மாடிக்குடியிருப்பில் இருந்த அவரது இல்லத்திற்கு தன்னை அழைத்து சென்றதாகவும் தன் மீது நறுமண தெளிப்பான் ஒன்றைத் தெளித்து புரியாத வார்த்தைகளைக் கூறி முணுமுணுத்தபடி தனது கழுத்தை நெரித்துப் பிடித்து குற்றச் செயலை புரிந்ததாகவும் தெரிவித்தார்.
வட லண்டனில் பெல்சைஸ் பார்க் எனும் இடத்தில் வசிக்கும் மைக்கல் லையன்ஸ் என்ற இந்த போலிச் சாமியார், தன்மீது சுமத்தப்பட்ட பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
இந்நிலையில், அவர் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணியான பிலிப் சாட்ஸ் தெரிவித்தார்.
பேராவல் பேரின்பநாயகம்
இலண்டனிலுள்ள எந்தெந்தப் பெண்கள் என்று குறிப்பிட்டு கூற முடியுமா?, எனக்கு தெரிந்த பலபேர் ஆன்மீக சக்தியை பெறுவதற்கு(வாங்குவதற்கு), மற்றவர்கள் வாங்கிய மாதிரி அதே பூப் போட்ட,அதே வண்ணத்தில்!, அலைந்துக் கொண்டிருந்தார்கள், அவர்களில் யாராவது இருக்குமா, என்று அறிய ஆவல்!.
thamilan
மக்களின் நம்பிக்கையை தனது ஈனச்செயலுக்கு பயன்படுத்தும் இவ்வாறான ஈனர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்
மாயா
பேராவல் பேரின்பநாயகம்,
அடுத்த சாமியாராக நீங்கள் மாறவா? இல்லை அவர்களை பிளெக் மெயில் பண்ணவா?
பல்லி
எங்கே இந்த பெண்ணிய வாதிகள்?? விடுதலை என்னும் பெயரில் தறுதலை தனங்களை செய்யும் இவர்கள் இந்த நாகரிக நாட்டில் கூட பெண்களுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்த முடியாதா?? பல்லியை பொறுத்த மட்டில் விழிப்புனர்வு கல்வி தன்நம்பிக்கை போன்றவை பெண்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பது புரிகிறது. ஆனால் படித்தசிலரும் இப்படி முட்டாள் தனமாக நடக்கிறார்கள். அது அவர்களது மேலாவிதனம் அல்லது அதை எதிர்பார்த்துதான் இப்படி செயல்படுகின்றனர். சாமிக்கு தண்டனை கண்டிப்பாக கடினமானதாக இருக்க வேண்டும்.
பார்த்திபன்
ஒரு கிறிஸ்தவர் தன்னை இந்து சாமியாராக்கி நாடகம் ஆடியுள்ளார். இவர் வலையில் சில பெண்கள் விழுந்து தம்மை இழந்துள்ளனர். என்ன காரணம்?? பெண்களுக்கே உரித்தான பேராசை?? எத்தனை “நான் அவனில்லை” படம் வந்தாலும் இந்தப் பெண்கள் திருந்த மாட்டார்கள்…..
மாயா
படித்தவர்கள்தான் இந்த அவலங்களில் மாட்டுவோராக இருப்பது வேதனையான உண்மை. ஏழைகளை இந்த சாமிகள் ஏற்றுக் கொள்வதில்லை.பணக்கார பெண்கள் தமக்கு ஒரு அங்கிகாரம் வேண்டமென்று இப்படியான இடங்களுக்கு செல்கிறார்கள். அதன் பின்னர் அதைவிட்டு வெளியேற முடியாது. ஏதாவது பெரிய பிரச்சனையொன்று உருவாகும் போது வெளியே தெரிய வரும். அவை பெரும்பாலும் பணம் – பெண் விவகாரங்களால்தான் ஏற்படுகிறது.