மார்ச் மாதம் முதல் 13 நாட்களில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களில் 53,838 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவர்கள் ரஷ்யாவிலிருந்து வந்துள்ள நிலையில் 12,762 பேர் இவ்வாறு வருகை தந்துள்ளனர் .
இந்தியாவில் இருந்து 7,348 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 4,289 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,937 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த வருடத்தில் 264,022 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.