முல் லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியிலிருந்து மேலும் 540 பொதுமக்கள் கப்பல் மூலம் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கடற்படையினரின் வழித்துணையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ‘கிரீன் ஓஷன்’ கப்பல் மூலம் இதுவரை 16 தடவைகள் பொது மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படையின் பதில் பேச்சாளர் கொமாண்டர் மஹேஷ் கருணாரட்ன தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இரவு இந்தக் கப்பல் புல்மோட்டையை வந்தடைந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். கடற்படையினரால் அழைத்து வரப்பட்ட 540 பொதுமக்களில் 229 பெண்கள், 167 ஆண்கள் மற்றும் 144 சிறுவர்களும் அடங்கு வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அழைத்துவரப்பட்டவர்களில் நோய்வாய்ப் பட்டவர்களுக்கு கடற்படையினர் அவசர முதலுதவி வழங்கிய பின்னர் புல்மோட்டை யிலுள்ள இந்திய மருத்துவக் குழுவினரிடம் சிகிச்சைக்காக ஒப்படைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.