இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் 1.9 பில்லியன் டொலர் உதவி வழங்கப்படுவதை ஆட்சேபித்து கொலம்பியா நீதி மன்றத்தில் நேற்றுமுன்தினம் வழக்குத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
தமிழர்கள் படுகொலைக்கெதிரான அமெரிக்கக் குழு, அமெரிக்க திறைசேரிச் செயலாளர் திமுதி கெய்த்னர், சர்வதேசயத்தின் அமெரிக்க நிறைவேற்று அதிகாரி மெக்லாண்டாசாகர் ஆகியோருக்கு எதிராகவே இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 84 பக்கங்களைக் கொண்ட இந்த மனுவில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆளுநர் உட்பட்டவர்களும் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் பாரிய அளவில் மீறப்பட்டு வருகின்றன. தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டு வருகின்ற நிலையில் இலங்கைக்கு 19கோடி டொலர்கள் வழங்கப்படுவது அமெரிக்க அரசியலமைப்பை மீறும் செயலென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் காணாமல் போதல் மற்றும் சட்டவிரோதக் கொலைகள் இடம்பெறுகின்றன. பொதுமக்கள் மீது குண்டுத் தாக்குதலை நடத்துவது ஜெனிவா உடன்படிக்கைக்கு எதிரானதாகும்.
அத்துடன், பாலியன் வன்புணர்வுகள், மனிதநேயமற்ற செயல்கள், நீதியற்ற முறையில் ஆட்கள் தடுத்து வைக்கப்படுதல், கைதுகள், வைத்திய வசதிகள் வழங்கப்படாமை, பட்டினி, அரசியல் பிரதிநிதித்துவம் மறுப்பு, பேச்சுச் சுதந்திரமின்மை, சித்திரைவதைகள் என்பன இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கின் பிரதிகள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், திறைசேரி போன்றவற்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தமிழர்கள் படுகொலைக்கெதிரான அமைப்பின் ஆலோசகர் புருஸ்பெய்ன் தெரிவித்துள்ளார்.
பார்த்திபன்
அப்ப இந்த வழக்கையும் சாட்டி ஒரு நிதிவசூல் விரைவில் ஆரம்பமாகும் எனச் சொல்ல வாறியள் போல…. எப்படியெல்லாம் ரூம் போட்டுச் சிந்திக்கிறாங்களப்பா……
பகீ
இவ்வழக்கு அமெரிக்க சட்டங்களுக்கமையவே போடப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். ஸ்ரீலங்கா போல் நாளுக்கு நாள் குற்றத்தை மாற்றுவதல்ல அமெரிக்க சட்டத்துறை. முதலில் தற்கொலைதாரி என்பர் பின்னர் இல்லை புலி உறுப்பினர் என்பார்கள், இன்னும் இரண்டு நாட்களில் கைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டனர் என்பர் பின்னர் இல்லை இல்லை கைத்தொலைபேசி வைத்ட்கிருந்தார் என்பார்கள்…இப்படியே ”கோல்போஸ்ற்” நகரும் நிலையல்ல அமெரிக்காவில்!
இவ்வழக்கில் ஆஜாராகும் சட்டத்தரணியை மேலே குறிப்பிட்ட அமெரிக்க அமைப்பு தமக்காக வழக்காடும்படியும் அதற்கு ஒரு தொகையும் பேசி முறையாகவே ஆவணங்களில் கையெழுத்திட்டு முறைப்படி வேலைக்கமர்த்தியுள்ளது………..
மேலும் இவ்வழக்கில் ஆஜாராகும் சட்டத்தரணி இவ்வ்கையான ‘நிதி வசூல்’ கதைகளுக்கு ஏசியன் ரிபியூன் தொடங்கி, அமெரிக்க எஃப்.பி.ஐ, ஸ்ரீலங்காவின் ஐ.நா வுக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி, அமெரிகாவுக்கான ஸ்ரீலங்கா தூதுவர், ஸ்ரீலங்கா வெளிநாட்டமைச்சர் மற்றும் ஸ்ரீலங்கா வேலைக்கமர்த்திய சட்டத்தரணிகள் அமைப்பான ப்ற்றன் பொக்ஸ் போன்றவற்றை நேரடி விவாதத்துக்கு அழைத்திருந்தார் ஆனால் இவற்றுக்கு ஸ்ரீலங்கா அரசு ‘ஒரு இறைமையுள்ள அரசு தனியார் ஒருவருக்கு பதில் சொல்லத்தேவை இல்லை’ என ஒரு விசித்திரமாக….. சிந்தித்து பதில் இறுத்திருக்கின்றனர்!
பார்த்திபன்
பகீ….. மேற் கூறப்பட்ட வழக்கு அமெரிக்க திறைசேரிச் செயலாளர் திமுதி கெய்த்னர், சர்வதேசயத்தின் அமெரிக்க நிறைவேற்று அதிகாரி மெக்லாண்டாசாகர் ஆகியோருக்கு எதிராகவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்படியிருக்க எப்படி இலங்கை அரசை விசாரணைக்கு உட்படுத்த முடியுமென்பது கூடவா உங்களுக்குப் புரியவில்லை. சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசிற்கு நிதியளிப்பதற்கு இலங்கை அரசிடம் குறிப்பிட்ட நிபந்தனைகளை விதிக்கும், அதற்கு சாதகமான நிலைப்பாட்டை இலங்கை அரசு செயற்படுத்தி அது சர்வதேச நாணய நிதியத்திற்கு திருப்தியளித்தால் அவர்கள் நிதி வழங்குகின்றார்கள். இதில் சர்வதேச நாணய நிதியம் தவறு விட்டதாக எவராவது கருதினால் அதற்கு சர்வதேச நாணய நிதியம் தான் பதிலளிக்க வேண்டுமேயொழிய இலங்கை அரசல்ல.
மற்றும்படி உந்த வழக்குகளால் ஒன்றும் ஆகாது என்று தெரிந்தும், தமிழ் மக்களை எப்படியெப்படி எல்லாம் ஏமாற்றலாமோ அப்படியெல்லாம் ஏமாற்றிப் பணம் பறிக்கவே இப்படியான வழக்குகள் உதவுகின்றன. ஏற்கனவே மகிந்த அரசிற்கெதிராகப் போடப்பட்ட வழக்கின் இரண்டாம் பாகமாக வேண்டுமானால் இதை எடுக்கலாம். இப்ப இரண்டு வழக்குகள் ஒரு வணங்காமண் மொத்தத்தில் மூன்று கோடுகள். அட நாமம் தான். நாமத்தோடு நிற்குமா இல்லை பட்டை நாமம் தொடருமா??